CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
4K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
139 வது மே தினத்தை முன்னிட்டு #CPIM விருதுநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தோழர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ஜெயக்குமார், எம்.ஜெயபாரத், மூத்த தோழர்தேனிவசந்தன், எம்.பெருமாள்சாமி, எஸ்.சி. மாரிக்கனி உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்ற மே தின முழக்கத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சமரசமின்றி சமர் புரிய மே தினத்தில் சூளுரைப்போம். அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம்! #MayDay2025 #WorkersRights
#CPIM தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
#CPIM மத்தியக்குழு அலுவலகமான ஏகேஜி பவனில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி மே தின செங்கொடியை ஏற்றி வைத்தார். உடன் மூத்த தலைவர் பிரகாஷ் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
வேலை நேர குறைப்பு, வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதே மே தின தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், வீரவணக்கமும்! தோழர் எஸ்.கண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் #CITU #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பிளிப் கார்ட் ஒப்பந்த நிறுவனத்தில் ஏழு பேர் வேலை நீக்கம்; சிஐடியு தலையீட்டால் பணிந்தது நிறுவனம்!

பிளிப்கார்ட்டின் ஆன்லைன் பொருட்களை கையாளும் கிடங்கில், ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் 7 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு சிஐடியு தலையீட்டால் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர்கள் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு ஊழியர்கள் முன்வைத்திருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் அடுத்தக் கட்டமாக நிர்வாகத்திடம் பேசித் தீர்வு காணப்படும் எனவும் முடிவு. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
#CPIM கிருஷ்ணகிரி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்ற நிகழ்வு. மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக அரசை கேள்வி கேட்டதற்காக டாக்டர் மெதுசா & நேஹா சிங் ரத்தோர் மீது வழக்கு… #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
தியாகத்தின் சாட்சியே தொழிலாளர்களின் உரிமைச் சட்டங்கள்; தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! - கட்டுரையாளர் மு.ஆனந்தன் #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://shorturl.at/ywnAc
மதுரை தீக்கதிர் நாளிதழ் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டி, தீக்கதிர் ஆசிரியரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.பி.ராஜேந்திரன், கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் ஆசிரியர் வி.பரமேஸ்வரன், இடைக் கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டு கட்சி உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
சாதி வெறி ஊட்டப்படுகிற போது, மனிதர்கள் எப்படி மனித உணர்வுகளை கூட இழந்து போகிறார்கள் என்பதற்கே எடுத்துக்காட்டுதான் கண்ணகி - முருகேசன் சாதி ஆணவக்கொலை. சாதி மறுப்பு திருமணம் செய்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அச்சம் கலந்து சூழலில் வாழும் அப்படிப்பட்ட கொடுமைக்கு முடிவு கட்டுவோம். இளைஞர்கள் சாதிகளைக் கடந்து பிறப்புக்கும் எல்லாமும் உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில், சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு சமூகம் அமையப் போராடுவோம் - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopDomesticViolence More : https://youtu.be/oCrAw8-RMNQ
மே தினத்தில் நினைவில் கொள்வோம்!

இந்தியாவில் முக்கால் வாசி உழைக்கும் மக்களின் மாத வருவாய் ரூ 15,000ற்கும் குறைவு.

நான்கில் ஒருவர் நாள் ஒன்றிற்கு ரூ 100 கூட சம்பாதிப்பதில்லை. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
Source: Outlook Business
மதுரையில் சிஐடியு ஏஐடியுசி மே தின பேரணி. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
நூறு நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியில் 2999 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு விடுவிப்பு.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails