CPIM Tamilnadu
1K subscribers
11.2K photos
110 videos
214 files
3.9K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
ஏப்ரல் 17; வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் #CPIM போராட்டம்! பாஜகவின் வெறுப்பரசியலை வேரறுப்போம்!

பேரா. அருணன், மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் கருத்துரையும், தொடர் வர்ணனையும், ஆர்ப்பாட்ட செய்திகளும், காட்சிகளும் இணைந்திருங்கள்... #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ProtectWakfProperties
என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு!

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி!

ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி!

இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition
#CPIM கண்ணூர் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் எம்.வி.ஜெயராஜன் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாவட்டக்குழுவின் புதிய செயலாளராக தோழர் கே.கே.ராகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதவழி சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதலை நடத்தும் பாஜக. 1954ல் தொடங்கி பல முறை இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது, ஆனால் இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய 44 திருத்த சட்டங்களும் வக்ஃப் நிலங்களை பறித்து கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை. எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஏப்ரல் 17 தமிழகம் முழுவதும் #CPIM போராட்டம் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ProtectWakfProperties More: https://youtu.be/mPrX25iYgBc
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்க! #CPIM வலியுறுத்தல்! #handloom More: https://shorturl.at/5pQ4x
கேஸ் விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.நேரு உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர் #CPIM #gascylinderprice
சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!

மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும் வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது - பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகசக்காரர் தோழர் சார்லி சாப்ளின் (16 ஏப்ரல் 1889 - 25 டிசம்பர் 1977) #CharlieChaplin #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation
வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக #CPIM வழக்கு...

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக #CPIM சார்பில் மேற்கு வங்க மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் முகமது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு... #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights
டில்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை; மோடி அரசு சிறுபான்மை மத உரிமைகள் மீது வாரம் ஒரு தாக்குதல்.

ஏப்ரல் 4 வக்பு சட்டம். 15 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த ஏப்ரல் 13 டெல்லி புனித இருதய கதீட்ரல் நோக்கிய குருத்தோலை ஊர்வலத்திற்கு இப்போது தடை - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #easterfestival #BJPFails
நவோதயா பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு என்சிஇஆர்டி இந்தியில் பெயர் வைத்துள்ளது தவறானது, கண்டனத்துக்குறியது.
இந்தியில் பெயர் வைத்ததை என்சிஇஆர்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தோழர் வி.சிவன்குட்டி
கேரள கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர், #CPIM #HindiImposition #NCERTSyllabus #TextBooks
தமிழ்நாடு அரசு மாமேதை காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைப்பதற்கு அறிவிப்பு செய்துள்ளது. சிலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்திய #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை அ.மார்க்ஸ் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஊழல், வக்பு பிரச்சனையை மூடி மறைக்கவே பாஜக - திரிணாமுல் கூட்டு வன்முறை. #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் ராமச்சந்திர தோம் குற்றச்சாட்டு. #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights More: https://shorturl.at/HN2Fg
தமிழகத்தில் கோவில் நிலங்களில் வசிப்போருக்கும், வியாபாரம் செய்து வருவோருக்கும் கூடுதல் வாடகை வசூலிப்பது, அவர்களை வெளியேறச் செய்வது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருகிறது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைக்கு, எக்காரணம் கொண்டும் கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களை அரசு வெளியேற்றாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார் – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM More: https://youtube.com/shorts/9Mnmrxwppq8
ஊழல், வக்பு பிரச்சனையை மூடி மறைக்கவே பாஜக - திரிணாமுல் கூட்டு வன்முறை

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் மற்றும் சமூக, ஜனநாயக அமைப்புகள் அஹிம்சை வழியில் அமைதியாக போராட்டம் நடத்தினர்.

முஸ்லிம் மக்களின் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 11 வரை 4 நாட்கள் முர்ஷிதாபாத் மாவட்டத்தை வன்முறை பூமியாக்கினர்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மட்டுமின்றி மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இளைஞர் உட்பட 3 பேர் பலியாகினர். காவல்துறையினர், பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பாக வன்முறையின் போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் (வாகனங்கள் உட்பட) நாசமாகின - டாக்டர் ராமச்சந்திர தோம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights
இந்து சமய அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?
வக்பு வாரியங்களில் மட்டும் புதிய நடைமுறை ஏன்?

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து, இந்தியா கூட்டணியிலுள்ள சிபிஐ(எம்), காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

“ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துக்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14, 17 ஆம் நுற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்புக்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்க, வக்பு சொத்து எது என்பதை, ஆவணங்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?

இந்து அறநிலையத்துறை சட்டப்படி இந்துகள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது?

திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? அல்லது இனிமேல் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?” #WaqfActAmendment #MuslimPropertyRights #DivisivePolitics