CPIM Tamilnadu
1.01K subscribers
11.5K photos
116 videos
214 files
4.01K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
தியாகத்தின் சாட்சியே தொழிலாளர்களின் உரிமைச் சட்டங்கள்; தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! - கட்டுரையாளர் மு.ஆனந்தன் #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://shorturl.at/ywnAc
மதுரை தீக்கதிர் நாளிதழ் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டி, தீக்கதிர் ஆசிரியரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.பி.ராஜேந்திரன், கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் ஆசிரியர் வி.பரமேஸ்வரன், இடைக் கமிட்டி செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டு கட்சி உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
சாதி வெறி ஊட்டப்படுகிற போது, மனிதர்கள் எப்படி மனித உணர்வுகளை கூட இழந்து போகிறார்கள் என்பதற்கே எடுத்துக்காட்டுதான் கண்ணகி - முருகேசன் சாதி ஆணவக்கொலை. சாதி மறுப்பு திருமணம் செய்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அச்சம் கலந்து சூழலில் வாழும் அப்படிப்பட்ட கொடுமைக்கு முடிவு கட்டுவோம். இளைஞர்கள் சாதிகளைக் கடந்து பிறப்புக்கும் எல்லாமும் உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில், சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு சமூகம் அமையப் போராடுவோம் - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopDomesticViolence More : https://youtu.be/oCrAw8-RMNQ
மே தினத்தில் நினைவில் கொள்வோம்!

இந்தியாவில் முக்கால் வாசி உழைக்கும் மக்களின் மாத வருவாய் ரூ 15,000ற்கும் குறைவு.

நான்கில் ஒருவர் நாள் ஒன்றிற்கு ரூ 100 கூட சம்பாதிப்பதில்லை. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
Source: Outlook Business
மதுரையில் சிஐடியு ஏஐடியுசி மே தின பேரணி. #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
நூறு நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியில் 2999 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு விடுவிப்பு.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails
கொழும்புவில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் #CITU தேசிய செயலாளரும் #CPIM மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஏ.ஆர்.சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். #nppsrilanka #MayDay
தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் கடன் வசூல் தடுப்புச் சட்டத்தில் கட்டாயமாக இணைக்க வேண்டியவைகள் குறித்து #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி #loanpressure #TNAssembly #AIDWA More: https://youtu.be/pFytNf37OVc
"என் கணவரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள், காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதையும்; அவர்கள் மீதான வெறுப்பையும், பகையுணர்வையும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும்" - பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி உருக்கமான வேண்டுகோள் #JammuAndKashmir #PahalgamTerroristAttack #HimanshiNarwal More: https://youtube.com/shorts/7e_GOyEgdGY
சாதி வாரி கணக்கெடுப்போடு சமூக பொருளாதார நிலையையும்
கணக்கெடுக்க வேண்டும்!

மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பும் சேர்ந்து நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு இடதுசாரி கட்சிகளும் மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளும் சமூக பொருளாதார பின்னணியையும் சேர்த்து கணக்கெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தன. சாதி வாரி கணக்கெடுப்பு மட்டும் போதுமானதல்ல.

உலகிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கக் கூடிய நாடு இந்தியா. எனவே, சாதி வாரியாக மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கிடுவதோடு, அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைமையையும் (Socio Economic Status of the Castes) சேர்த்து கணக்கிட வேண்டும்

கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதோடு, மத்திய மாநில அரசுகளினுடைய நலத்திட்டங்களை ஒதுக்கீடு செய்வதிலும் மேற்கண்ட விபரங்கள் பயன்படும்.

தோழர் ஜி.ராமகிருஷ்ணன்
கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர், #CPIM #CasteCensus
வியட்நாம் சோஷலிச குடியரசு தின கொண்டாட்டம்; 1975 ஏப்ரல் 30 அன்று அமெரிக்காவை வீழ்த்தி வியட்நாம் சோஷலிச குடியரசு அமைக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டு தினம் நிறைவு விழா. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் அணிவகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நடந்தன, அதேநேரத்தில் வானில் போர் விமானங்களும் தேசியக் கொடி மற்றும் சுத்தியல்-அரிவாள் சின்னத்துடன் உலாவரும் ஹெலிகாப்டர்களும் காட்சியளித்தன. #socialist #vietnam #antiimperialism #vietnamwar #politics More: https://youtube.com/shorts/vS5S4LA4Bg4