CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
3.97K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க ஒன்றிய வலியுறுத்தியும் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் #CPIM மாநிலச் செயலாளர் பெ‌சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #RNRavi #GetOutRavi #Protest
பயங்கரவாதிகளுக்கு மதமில்லை, மனிதர்களுக்கு மனிதமுண்டு...

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஆட்டோ ஓட்டுநர் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு இலவச வாகன சேவை. #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
இது பாதிக்கப்பட்டோரின் தோளோடு நிற்கும் தோழர்களின் குரல், பயங்கரவாதத்திற்கு எதிரான காஷ்மீரிகளின் குரல், இந்து, இஸ்லாம் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் மனிதத்தின் குரல், பிரிவினைக்கு எதிரான ஒற்றுமையின் குரல், பிறப்பால் அனைவரும் சமம் என்னும் சமத்துவத்தின் குரல். பஹல்காம் படுகொலைக்கு எதிராக #CPIM ஜம்மு - காஷ்மீர் நடத்திய போராட்டம். #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack #CPIMProtest More: https://youtube.com/shorts/whluQWxBCeg
போட்டி அரசு நடத்த எடுத்த முயற்சி தோல்வி!
ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவமானங்களால் ஒதுங்கி கொள்வதில்லை... ஒதுக்கப்பட வேண்டும் - தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #RNRavi #GetOutRavi #Protest
Media is too big
VIEW IN TELEGRAM
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க ஒன்றிய வலியுறுத்தியும் #CPIM சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் #RNRavi #GetOutRavi #Protest More: https://youtube.com/shorts/pokvG3Tx_2I
பஹல்காம் தாக்குதல்; பிரச்சனை எல்லையில் இல்லை, தில்லியில்தான் உள்ளது!

கேரளாவின் பாஜக தலைவர் சந்திரசேகர் பஹல்காமில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் யாரை பொறுப்பாக்குவது என்பதுதான் கேள்வி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபோது பயன்படுத்திய தர்க்கத்தை மோடி தற்போது ஏற்பாரா? - டாக்டர் தாமஸ் ஐசக் மத்தியக்குழு உறுப்பினர், #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
எர்ணாகுளம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நா.ராமச்சந்திரனின் குடும்பத்தை #CPIM மத்தியக்குழு உறுப்பினரும், #AIDWA தலைவருமான தோழர் பி.கே.ஸ்ரீமதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீ ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தியும், மனைவி ஷீலா டீச்சரும் இக்கொடூரமான தாக்குதலின் விபரங்களையும், உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த உதவி மற்றும் ஆதரவையும் விளக்கினார்.
"குறிப்பாக எங்கள் ஓட்டுநர்கள் முசாபிர் மற்றும் சமீர், என் சகோதரர்களைப் போல எங்களையும் என்னுடைய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர்" என ஆர்த்தி குறிப்பிட்டுச் சொன்னார். #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
பயங்கரவாதத்தையும் ஆர்எஸ்எஸ்சையும் எதிர்த்துப் போராடுவோம்!

“ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, மக்களின் மீட்பராக இருந்த ஒரு முஸ்லிம் இளைஞரை பயங்கரவாதிகள் கொன்றனர். மதத்தின் பெயரால் இந்தத் தாக்குதல் நடக்கவில்லை. மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதல்களை எதிர்கொள்வதில் நாடு ஒற்றுமையாக நிற்க வேண்டும்”.

“மதத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸை நாம் எதிர்க்க வேண்டும்” - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
ஆவணங்களின் அடிப்படையில்தான் வக்பு சொத்துக்கள் இருக்க வேண்டும் என்று சொன்னால் எந்த சொத்தும் இருக்காது. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால்தான் இந்தியாவில் சர்வே என்ற நடைமுறையே வந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னாள் இருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு ஆவணங்கள் எப்படி இருக்க முடியும்?. இது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கை - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack More: https://youtube.com/shorts/b5SPEcx-IPk Full video: https://youtu.be/f_7FD9XJE3I
இந்திமயமாகும் ரயில்வே; பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!

“தற்போது ரயில்வேயில் இந்தி வார்த்தைகள் மூன்று மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம், இந்தி) எழுதப்படுகின்றன. ஆனால், அந்த மூன்று மொழிகளிலும் ஒரே இந்தி வார்த்தையை எழுதி, மாநில மொழி புறக்கணிக்கப்படுகிறது. இது 2023ல் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு எதிரானது.

அந்த வழிகாட்டுதலில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது. இது தொடர்பாக எந்த அதிகாரி உத்தரவு வழங்கினார் என்பதையும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்”.

“கவாச் பாதுகாப்பு இயந்திரம் அனைத்து ரயில்களிலும் பொருத்த வேண்டும். தற்போது வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இல்லாமல், தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே எங்களுடைய வலியுறுத்தல்” - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SouthernRailway #HindiImposition #Parliament #MaduraiRegion #Advisorymeet
வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்ததற்கு பாஜகவுக்கு அரசியல் நோக்கம் உள்ளது. - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #BJPFails #ModiFailed More: https://youtu.be/AzecYekwG8s