CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
3.96K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
CPIM Tamilnadu
Photo
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குலை வைத்து மனிதம் கொன்று மதவெறி பரப்பும் இந்துத்துவா கும்பல்!

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் குறைவதற்கு முன்பாகவே இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்க ளில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறிப்பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.

காஷ்மீர் மக்களின் பொருளாதரத்தை முடக்க வேண்டும். அவர்களை பொருளாதாரப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். காஷ்மீரை புறக்கணியுங்கள், புல்டோசர் மூலம் வீடுகளை இடியுங்கள் என பிரசாரம் செய்கின்றனர்.

இந்துத்துவா கும்பல்களில் போலி டிவிட்டர் எக்ஸ் பக்கங்கள், ஆதரவாளர்களின் பக்கங்கள் மட்டும் இன்றி சத்தீஸ்கர் பாஜகவின் மாநிலக்குழுவின் அதிகாரபூர்வ பக்கம் “அவர்கள் சாதியை அல்ல, மதத்தைக் கேட்டார்கள்” என மதவெறியை தூண்டிவிட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு தாங்கள்தான் தாக்குதலுக்குகாரணம் என ஏற்றுக் கொண்ட பிறகும் கூட “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்துள்ளார்” என காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை இந்துத்துவா கும்பல்கள் செய்துள்ளன.

“இஸ்ரேலை போல இந்தியாவும் படுகொலை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகவே சில இந்துத்துவா சமூக வலைதளப் பக்கங்கள் இனப்படுகொலை பிரச்சாரம் செய்கின்றன. #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails
தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான கொடிய நோய். #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails More: https://shorturl.at/Dm8Fh
நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை உடனடியாக ஒன்றிய அரசு அமல்படுத்திட வலியுறுத்தி #CPIM சென்னை சாஸ்திரி பவன் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #BJPFails
தமிழகத்தின் நலன் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகைப்போராட்டம் #CPIM #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/wvKIFayS6JU
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த அப்பாவி மக்களுக்கு #CPIM வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
#MNREGA வேலை நாட்களை 100லிருந்து 150 நாளாக உயர்த்த வேண்டும், கூலியை 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் இப்போது என்ன நிலைமை என்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே செய்த வேலைக்குக் கொடுக்க வேண்டிய ரூ 3296 கோடியை மத்திய அரசு தராமல், வேலை செய்த மக்களுடைய வயிற்றில் அடிக்கக்கூடிய காரியத்தில் பாஜக ஈடுபட்டிருக்கிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TARATDAC #MNREGA #100Days #FundRaise #BJPFails Full Video: https://youtu.be/CF8hVglY2gA
இது பாதிக்கப்பட்டோரின் தோளோடு நிற்கும் தோழர்களின் குரல், பயங்கரவாதத்திற்கு எதிரான காஷ்மீரிகளின் குரல், இந்து, இஸ்லாம் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் மனிதத்தின் குரல், பிரிவினைக்கு எதிரான ஒற்றுமையின் குரல், பிறப்பால் அனைவரும் சமம் என்னும் சமத்துவத்தின் குரல். பஹல்காம் படுகொலைக்கு எதிராக #CPIM ஜம்மு - காஷ்மீர் நடத்திய போராட்டம். #pahalgam #pahalgamterroristattack #CPIMProtest
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு #DYFI கள்ளக்குறிச்சி சார்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவும், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க ஒன்றிய வலியுறுத்தியும் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் #CPIM மாநிலச் செயலாளர் பெ‌சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #RNRavi #GetOutRavi #Protest
பயங்கரவாதிகளுக்கு மதமில்லை, மனிதர்களுக்கு மனிதமுண்டு...

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஆட்டோ ஓட்டுநர் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு இலவச வாகன சேவை. #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack