CPIM Tamilnadu
1K subscribers
11.8K photos
120 videos
216 files
4.14K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
“புரட்சியை நடத்தி முடிக்கும் திறமை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு மக்களிடையே நீடித்து பணி புரிவது அத்தியாவசியமான முன் நிபந்தனை” ஆகும் - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் முசாபர் அகமது #MuzaffarAhmad #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #Inspiration #Motivation #motivationalquotes
ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களிடம் “ஒட்டுமொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்” என்ற போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா . தற்போதைய பீகார், ஜார்க்கண்ட் பகுதி பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு 19ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர்.

பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும்தான் இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள். இவர் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று அறைகூவல் விடுத்துப் போராடியவர்.

பிர்சா முண்டா நினைவு தினம் இன்று (15 நவ. 1875 - 9 ஜூன் 1900) # Birsa Munda #Tribelslivesmatter
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்!! #BirsaMunda #FreedomFighter #TribalLivesMatter Listen More on: https://spoti.fi/3Gjq6tC
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
பூக்களை நீங்கள் கொய்துவிடலாம். ஆனால் வசந்தத்தின் வருகையை ஒருபோதும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது - தோழர் பாப்லோ நெரூடா (12 ஜூலை 1904 - 23 செப். 1973) #PabloNeruda #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #Inspiration #Motivation #motivationalquotes
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
நல்ல நிலையில் உள்ள கருப்பையை அகற்றுவது பல்வேறு உடல்/மன ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும். முதலாளித்துவம் மனித உறவுகளைப் பண உறவுகளாகவே பார்க்கிறது என்பதற்கு இது ஓர் துயரம் நிறைந்த உதாரணம். - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Uterus #maharastra
#CPIM 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் & ஸ்தாபன தீர்மான முடிவுகள் விளக்கப் பேரவை கூட்டம் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.
பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொன்ற தீவிரவாதிகளை பிடிக்க துப்பில்லாத அமித்ஷா தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப் போகிறாராம்!

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறேன் என்றானாம். இந்த பழமொழியைத்தான் இவரின் பேச்சு நினைவுபடுத்துகிறது. - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Pahalgam #AmitShah #TamilNadu #BJPFailsIndia
வறுமைக் கோடு: புள்ளி விவர மோசடியின் புதிய முகம் #poverty #BJPFailed #Unemployment #Poverty #Privatisation #PeopleSufferedPoor #Modi4Corporates https://shorturl.at/lh2F3
அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு: பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண #CPIM வலியுறுத்தல்!! – தோழர் பெ.சண்முகம், மாநில செயலாளர் #CPIM #TNGovt #Doctors #Protest More: https://shorturl.at/J9UIp
உ.பி யின் முசாபர்பூர் பகுதியைச் சார்ந்த 11 வயது தலித் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு தீவிர மேல் சிகிச்சைக்கு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவசர ஊர்தியிலேயே 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். #CPIM பீகார் மாநில செயற்குழு உறுப்பினரும் #AIDWA தேசியத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ராம்பாரி தலைமையிலான குழு சிறுமியின் குடும்பத்தை சந்தித்தது. #Bihar #Muzzafarpur #JanataDalBJP #StopRapeAgainstWomen
இந்தியாவின் பதிலளிப்பை நாடாளுமன்றமே வழி நடத்த வேண்டும்; பாஜகவின் பிரச்சாரம் அல்ல!

“என் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல, குங்குமம்” - இந்த வார்த்தைகளின் மூலம் பிரதமர் மோடி, சிந்தூர் பிரச்சாரத்திற்குப் பிறகான தனது பிரச்சார பாணியை வரையறுத்துக் கொண்டார். நாடு எதிர்கொண்டிருக்கும் கடுமையான சவால்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவரோ அல்லது அவரது அரசாங்கமோ வேறு என்ன செய்திருக்க முடியும்? வெளிப்படைத்தன்மையும் சுயபரிசோதனையும் இந்த அரசாங்கத்தின் பலமாக ஒருபோதும் இருந்ததில்லை.

ஜூன் 4, 2025 பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் #JammuAndKashmir #PahalgamTerroristAttack #HimanshiNarwal #OperationSindoor Listen: https://shorturl.at/2ZutB
காசாவில் நடந்து வரும் இன அழிப்பிற்கு எதிராகவும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மாட்லீன் கப்பலிலிருந்த அனைத்து செயல்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் தில்லி இஸ்ரேல் தூதரகத்துக்கு முன்பாக போராடிய #SFI மற்றும் இடதுசாரி முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் போலீசால் மிருகத்தனமாக கைது செய்யப்பட்டனர். #FreePalestine #EndGazaSiege #AllEyesOnMadleen
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பிராட்வேயில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People