CPIM Tamilnadu
1.01K subscribers
11.6K photos
118 videos
214 files
4.09K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
சிவகாசி அருகே தலித் இளைஞர் மீது சாதி ஆதிக்க சக்தியினர் கொடூரத் தாக்குதல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளதும் கண்டனத்துக்குரியது. தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் வேண்டும் எனவும் #TNUEF வலியுறுத்தியுள்ளது.

#TNUEF விருதுநகர் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்துள்ளனர். #StopViolenceAgainstDalits
துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொலை; 10 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம்! #Andhrapradesh #Redsanders #Encounter More: https://shorturl.at/c9PvZ
பல்கலைக்கழகங்கள் இலாப நோக்கத்திற்காக அல்லாமல் நவீனமயமாக்கத்திற்கும் தனித்துவமான சமூகத் தேவைகளுக்கும் சேவை செய்பவையாக இருக்க வேண்டும் என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் கிரீஸ் இடதுசாரி இளைஞர்கள் அமைப்புடன் (KNE) இணைந்து மாணவர்களின் படிப்பு, அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பறிக்கும் கொள்கைகளைத் தூக்கியெறிவதற்கு போராடி வரும் அனைத்து மாணவர் ஒத்துழைப்பு இயக்கம் கல்வி வளாகத் தேர்தலில் 4வது ஆண்டாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. #Greece #StudentElections #CPIM
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
பஹல்காம் தாக்குதல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பது அவசியம்; நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தாதது சரியல்ல! #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession https://shorturl.at/r52Bm
பஹல்காம் படுகொலை; துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள்? - தோழர் ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession https://shorturl.at/syZZs
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா நினைவுதினம் இன்று! (1 மே 1913 - 19 மே1985)

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
"நீங்கள் ஒரு கட்சிப் போராளி என்றால், உண்மையான புரட்சிகர ஒழுக்கம் உடையவராய் நீங்கள் இருக்க வேண்டும்.

மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்" - தோழர் ஹோசிமின் பிறந்த நாள் இன்று (19 May 1890 - 2 Sep. 1969 ) #HoChiMinh #ComradeHochiMinh #Communist #Communism #SocialismIsFuture
நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று (19 மே 1925 - 21 பிப். 1965) #MalcomX
முழுமையான சுதந்திரத்தையும், சுரண்டலற்ற நாட்டையும் உருவாக்க சோசலிசமே ஒரே வழி!

இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் தற்போது ஆளும் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது.

படிக்கும் மாணவர்கள் உபா போன்ற கொடும் சட்டங்களால் கைது செய்யப்படுகின்றனர்.

குரலற்றவர்களின் குரலாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

சோசலிசமே ஒரே வழி தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்களை அணிதிரட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 27வது மாநில மாநாடு வழிவகுக்கும் - தோழர் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SFI #SFITamilnadu #27th_State_Conference
மே 19; கம்யூனிச கோட்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். கேரள அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் சின்னம் தோழர் ஈ.கே.நாயனார் நினைவு தினம்! (9 டிச. 1919- 19 மே 2004) #Comrade #EKNayanar #CommunistLeader
அரசியலமைப்பு கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது!

நாட்டில் அனைத்துத் தூண்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது. ஆனால் நாட்டில் உயர்ந்தது நீதித்துறையோ அல்லது நிர்வாகமோ அல்ல. மாறாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், “அடிப்படை கோட்பாடு” கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது.

நாட்டில் தங்குமிடமும், பிற உரிமைகளும் மிக உயர்ந்தது. அதனால் “புல்டோசர்”நடவடிக்கை அநீதியானது - பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Constitution #IndianConstitution #IndianParliament #Democracy #JusticeBRGavai
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி குறித்த பேச்சுக்கு ம.பி. பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது!

“மிக மோசமான கருத்துகளை பேசிவிட்டு, “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்... எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்” - சூர்யகாந்த், என்.கே.சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் #KunwarVijayShah #SofiyaQureshi #SupremeCourt
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஆதிவாசி மக்களுக்கு நீர், நிலம் மற்றும் வன வளங்களின் உரிமைக்காக, ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேரணியில் அவ்வமைப்பின் தலைவரும், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கைகளை முன்வைத்து கூடியிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பின்னர், தும்ரி மாவட்ட துணை கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.