CPIM Tamilnadu
1.01K subscribers
11.5K photos
116 videos
214 files
4.01K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
கொழும்புவில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் #CITU தேசிய செயலாளரும் #CPIM மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஏ.ஆர்.சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். #nppsrilanka #MayDay
தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் கடன் வசூல் தடுப்புச் சட்டத்தில் கட்டாயமாக இணைக்க வேண்டியவைகள் குறித்து #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி #loanpressure #TNAssembly #AIDWA More: https://youtu.be/pFytNf37OVc
"என் கணவரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள், காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதையும்; அவர்கள் மீதான வெறுப்பையும், பகையுணர்வையும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும்" - பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி உருக்கமான வேண்டுகோள் #JammuAndKashmir #PahalgamTerroristAttack #HimanshiNarwal More: https://youtube.com/shorts/7e_GOyEgdGY
சாதி வாரி கணக்கெடுப்போடு சமூக பொருளாதார நிலையையும்
கணக்கெடுக்க வேண்டும்!

மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பும் சேர்ந்து நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு இடதுசாரி கட்சிகளும் மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளும் சமூக பொருளாதார பின்னணியையும் சேர்த்து கணக்கெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தன. சாதி வாரி கணக்கெடுப்பு மட்டும் போதுமானதல்ல.

உலகிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கக் கூடிய நாடு இந்தியா. எனவே, சாதி வாரியாக மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கிடுவதோடு, அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைமையையும் (Socio Economic Status of the Castes) சேர்த்து கணக்கிட வேண்டும்

கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதோடு, மத்திய மாநில அரசுகளினுடைய நலத்திட்டங்களை ஒதுக்கீடு செய்வதிலும் மேற்கண்ட விபரங்கள் பயன்படும்.

தோழர் ஜி.ராமகிருஷ்ணன்
கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர், #CPIM #CasteCensus
வியட்நாம் சோஷலிச குடியரசு தின கொண்டாட்டம்; 1975 ஏப்ரல் 30 அன்று அமெரிக்காவை வீழ்த்தி வியட்நாம் சோஷலிச குடியரசு அமைக்கப்பட்டது. அதன் 50வது ஆண்டு தினம் நிறைவு விழா. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் அணிவகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நடந்தன, அதேநேரத்தில் வானில் போர் விமானங்களும் தேசியக் கொடி மற்றும் சுத்தியல்-அரிவாள் சின்னத்துடன் உலாவரும் ஹெலிகாப்டர்களும் காட்சியளித்தன. #socialist #vietnam #antiimperialism #vietnamwar #politics More: https://youtube.com/shorts/vS5S4LA4Bg4
கொழும்புவில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் #CITU தேசிய செயலாளரும் #CPIM மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஏ.ஆர்.சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். #nppsrilanka #MayDay More: https://youtube.com/shorts/_oml1EoCwAM
சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது கேரளாவின் தோழர் இஎம்எஸ் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு!

1968ல் பல்வேறு சமூகப் பிரிவுகளின் சமூகப் பொருளாதார நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2011 வரை இதுவே சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும். #LDFGovt #CasteCensus
தேசிய கல்விக் கொள்கை என்றால் தேர்வு, மதிப்பெண் என்று குழந்தைகளை அச்சுறுத்துவது, பள்ளியிலிருந்து பாதியில் விரட்டுவதுதான். இன்று சிபிஎஸ்இ பள்ளிகளில் மேற்கொண்டு இருக்கிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டு முதல் ‘பெயில்’ ஆக்குவது என்ற ஒன்றிய அரசின் முடிவு கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. நாம் எதிர்க்கவில்லை என்றால் நாளை மாநில அரசு பள்ளிகளுக்கும் கட்டாயப்படுத்துவார்கள் குழந்தைகளின் கல்வி வாய்ப்பை பறிக்கும். அனைவரும் கண்டனம் முழங்குவோம். தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CBSE #NEP
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்டு அவர் மனைவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு, ஜெய் பீம் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட ராஜ்கண்ணு வழக்கு, வாச்சத்தி வழக்கு இது போன்று பல ஆணவப்படுகொலை நடந்த வழக்குகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி வலுவான போராட்டங்களை நடத்தியதோடு, உறுதியான சட்ட போராட்டத்தை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்று தந்து இருக்கிறது - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM More : https://youtube.com/shorts/KTIlma8de5M
கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்

பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினால்தான் ஒன்றிய அரசு நிதி தருவோம் என்று சொல்வது அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அல்ல, கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்படைப்பதற்கே…

தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #CPIM #PMSHRI #EducationForAll #EducationInequality #SocialJustice
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் அச்சம் கலந்த சூழலில் வாழ்கிற கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும். சாதி ஆணவக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Caste #StopCasteAtrocities More : https://youtube.com/shorts/tnonNDMzO9w
நூறு நாள் வேலைத்திட்டம் அமுலாக்குவதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் கேரளா!

100 நாட்கள் வேலை வழங்கப்பட்ட பட்டியலின சமூக மக்கள் தேசிய சராசரி - 6.02%, கேரளா - 36.81% #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இன்று காலை திட்டத்தில் சேர்ந்தால் மாலையே நிதி வழங்கப்படுமாம்; கேரளா அதற்கு தயாராக இல்லை! பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர வேண்டும் என்று ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது. இன்று காலை திட்டத்தில் சேர்ந்தால் மாலையே நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். ஆனால் கேரளா அதற்கு தயாராக இல்லை. இது கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. தோழர் சிவன் குட்டி, கேரள கல்வி துறை அமைச்சர் #UnionGovt #Federalism #BJPFails #PMSHRI #Kerala
நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு சிபிஐ(எம்) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்கிற நியாயமான கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு ஏற்காததன் விளைவாகவே இதுபோன்ற தற்கொலைகள் தொடர்கிறது.

எனவே, ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக விலக்களிக்க வேண்டுமெனவும், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருப்பதால் அக்குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Maduranthakam #Melmaruvathur #NEET #student #NEET2025 https://shorturl.at/NDzjl
கனவுகளுக்குப் பதிலாக அறிவியலையும் கண்ணீருக்குப் பதிலாக புரட்சியையும் முன்வைத்த புரட்சியாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் 207வது பிறந்த தினம் இன்று! (5 மே 1818 - 14 மார்ச் 1883)
#KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution
செல்வங்கள் எப்படி உருவானது என்பதை உபரி மதிப்பின் தத்துவத்தின் மூலமாக தோழர் கார்ல் மார்க்ஸ் புதிய கண்டுபிடிப்பாக விளக்கியிருந்தார். இது யாராலும் மறுக்க முடியாது. இதை உணர்ந்திருக்கிற தொழிலாளிகள், பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்கிற முறையில் அது களத்திற்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே அது புரட்சிகர இயக்கங்களை உருவாக்கிக்கிறது. அதனால் மார்க்சியம் நிலைத்து நிற்கிறது - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution More: https://youtu.be/GuhDKD4ktho
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?

இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. இரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #IndianRailways #StopHindiImposition
ஒரு சமூகம் முழுமையுமோ, ஒரு தேசமோ அல்லது ஒட்டு மொத்தமான அனைத்து சமூகங்களோ பூமியின் உரிமையாளர்கள் அல்ல. அவர்கள் அதன் பயனாளர்கள், கூட்டாக கைவசம் கொண்டிருப்போர், மேம்பட்ட நிலையில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைக்கும் கடப்பாடு உடையோர் - புரட்சியாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் 207வது பிறந்த தினம் இன்று! (5 மே 1818 - 14 மார்ச் 1883) #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution