CPIM Tamilnadu
1K subscribers
11.3K photos
112 videos
214 files
3.95K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டு வந்திருக்கிறோம். இதைத் தடுக்க காவல்துறை முயற்சி செய்யுமேயானால் அதற்கு முழுப்பொறுப்பு அரசையே சாரும் - #TARATDAC போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி. #Protest More: https://youtube.com/shorts/iSdhlcSvfOw
உதவித்தொகை உயர்த்தவும், 100 நாள் வேலை வழங்கிடவும் போராடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து போலீஸ் அராஜகம். #CPIM கண்டனம். #TARATDAC #MNREGA #100Days #FundRaise More: https://shorturl.at/8O9he
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி நுகர்வோர் நலனை காத்திடுக #CPIM வலியுறுத்தல்! More: https://shorturl.at/CTf8j
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து #CPIM சென்னையில் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
மேற்கு வங்க வன்முறை; ஆர்எஸ்எஸ் கட்டளைப் படி செயல்படும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்! - தோழர் முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #WestBengal #TMC #RSS #RejectRSS #RejectTMC
வக்பு திருத்தச் சட்டம் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும். இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஆழமான வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு பாஜக அரசு மூலம் ஆர்.எஸ்.எஸ் கொண்டு வந்துள்ள ஒரு செயல் திட்டம் – தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtu.be/5YbjzK4kd0w
ஏழை முஸ்லிம்களுக்கு வக்பு திருத்தச் சட்டம் பயன்படும் என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் பாஜக - தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtube.com/shorts/KIjF6tIh6YE?feature=share
புதிய உலகின் கதவுகளை திறக்கும் அறிவுச்சாவிகளே புத்தகங்கள் வாசிப்பை பரவலாக்குவோம். புத்தகங்களை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம். ஏப்ரல் 23, உலக புத்தக தினம்; #CPIM வாழ்த்து #WorldBookDay #BookDay #WorldBookDay2025
தியாகிகள் புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்... தியாக தீபம் தோழர் கே.லீலாவதி நினைவு தினம்... #CPIM #Martyr #Comrade #Leelavathi
ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் #CPIM சென்னையில் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்! மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்தை இந்தியா ஒன்றுபட்டு எதிர்க்கிறது. குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்கிடு. #CPIM #Pahalgam #pahalgamattack #BJPFails
#CPIM 24வது அகில இந்திய மாநாடு குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா 23.04.2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு கேரள சமாஜம், கீழ்பாக்கம், சென்னை. #CPIM24thCongress
CPIM Tamilnadu
Photo
உத்தப்புரம் முத்தாலம்மன் கோயிலில் பட்டியலின மக்களின் அரசமர வழிபாட்டை சாதி ஆதிக்க சக்திகள், தடுத்து வந்ததால் பல ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி நேற்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.

முத்தாலம்மன் கோயில் வழிபாட்டு திருவிழாவையொட்டி #CPIM புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி உள்ளிட்டு பல தோழர்கள் உத்தப்புரம் சென்றிருந்தனர். உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இடைவிடாமல் போராடிய உத்தப்புரம் பட்டியலின மக்களுக்கும், சட்டப் போராட்டத்தில் உதவிய வழக்கறிஞர்களுக்கும், 2008 முதல் உத்தப்புரம் பட்டியலின மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மகத்தான பங்களிப்பை செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புறநகர் - மாநகர் மாவட்டக்குழுக்களுக்கும், நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு பட்டியலின மக்களின் வழிபாட்டிற்கு அமைதியான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய உத்தப்புரத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும். #Caste #StopCasteAtrocities #Religion
CPIM Tamilnadu
Photo
தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் - தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபத்தை ஏற்படுத்தும் டோட்டக்ஸ் (Totex) முறை திட்டத்தை செயல்படுத்தாமல் நுகர்வோர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் மின்சார வாரியமே தேவையான இடத்தில் மட்டும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் மொத்தமுள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கு தனியார் மூலம், ஒன்றிய பாஜக அரசு சொல்லும் வகையில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தினால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சுமார் ரூபாய் 50,000 கோடி செலவாகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தாங்க முடியாத கடன் சுமையை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மேலும், தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டருக்காக உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ள ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) ரத்து செய்வதுடன் ஸ்மார்ட் மீட்டரை தமிழ்நாடு மின்சார வாரியமே தேவையான இடங்களில் மட்டும் படிப்படியாக பொருத்த வேண்டும். #SaysNoToTOTEX #SayNoToSmartMeter #StopPrivatisation More: https://shorturl.at/nCLSG
ஆர்.எஸ்.எஸ் ரவியை அடியாள் என்று சொல்லாமல் புனிதர் என்றா சொல்ல முடியும்? ஆள்வதற்கான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்கிறதே தவிர ஆளுநரிடம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவர்கள்தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #RSS #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/KHyRvz4ftUU