CPIM Tamilnadu
1K subscribers
11.3K photos
112 videos
214 files
3.96K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
சமாதானத்தை வலியுறுத்தியவர், பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாடு, பாலின சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றவர், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் குரல் கொடுத்தவருமான போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PopeFrancis
வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம்; பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே. - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Vandebharath #VantheybarathTrain #TrainAccident
#CPIM தோழர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு: தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு. #CPIM #Judgement #Court
கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து #CPIM மேல்முறையீடு! #Flag #Redflag #MadrasHighCourt More: https://shorturl.at/9N6Gz
யுகப் புரட்சி நாயகன் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்த தினம் இன்று.

லெனினியத்தை கற்போம்!
உழைக்கும் வர்க்கத்தின் புரட்சியை சாத்தியமாக்குவோம்!

ஒரு நாட்டிற்குள் ஓர் இயக்கம் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலைக்குமான நெருக்கமான பிணைப்பையும், ஒற்றுமையையும் அடையாளம் காணச் செய்கிறது லெனினியம்.

எனவே, இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் உலக வர்க்க விடுதலையை இணைத்துப் பார்க்கும் இடையறாத பயிற்சியில்தான் லெனினியத்தில் தேர்ச்சி என்பது கிட்டும் - தோழர் லூகாக்ஸ் மார்க்சிய மேதை . #Comrade #Lenin #Socialism #Communist
உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். #TARATDAC #protest
உதவித்தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தினர் சென்னையில் நடத்தும் போராட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். #TARATDAC #Protest More: https://youtube.com/shorts/PI5TNByJ37Q
‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்திற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களிடம் மின் ஊழியர் சங்கத் தலைவர்கள் நேரில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

எஸ்.மூர்த்தி (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம்), எஸ்.ராஜேந்திரன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சிஐடியு), ஏ.சேக்கிழார் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்ப்ளாயீஸ் பெடரேஷன்), வி.எஸ்.சம்பத்குமார் (பொதுச் செயலாளர் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம்), கே.அருள்செல்வன் (தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு) உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தில்லியில், மதராசி குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆர். கருமலையன், தோழர் அனுராக் சக்சேனா மற்றும் #DYFI தோழர்கள் அமன் சைனி மற்றும் ரிக்தா கிருஷ்ணசாமி ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லிக்கு வெகு தூரம் கொண்டு செல்கிறார்கள். தோழர் ரிக்கா உட்பட பெண்கள் பலர் இத்தாக்குதலின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்மையாக‌ கண்டிக்கிறோம்!
தில்லியில், மதராசி குடியிருப்பிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆர். கருமலையன், தோழர் அனுராக் சக்சேனா மற்றும் #DYFI தோழர்கள் அமன் சைனி மற்றும் ரிக்தா கிருஷ்ணசாமி ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லிக்கு வெகு தூரம் கொண்டு செல்கிறார்கள். தோழர் ரிக்கா உட்பட பெண்கள் பலர் இத்தாக்குதலின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்மையாக‌ கண்டிக்கிறோம்! #Delhi More: https://youtube.com/shorts/v1SIfMyeaH8
ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் #CPIM சென்னையில் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையாக உள்ள ஐந்து மாத கால ஊதியத்தை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம், நசியனூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. விதொச மாவட்டச் செயலாளர் கே.சண்முகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MNREGA #100Days #FundRaise #ModiFails More: https://youtube.com/shorts/9gE7Hajz-Ck