CPIM Tamilnadu
Photo
உத்தப்புரம் முத்தாலம்மன் கோயிலில் பட்டியலின மக்களின் அரசமர வழிபாட்டை சாதி ஆதிக்க சக்திகள், தடுத்து வந்ததால் பல ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி நேற்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.
முத்தாலம்மன் கோயில் வழிபாட்டு திருவிழாவையொட்டி #CPIM புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி உள்ளிட்டு பல தோழர்கள் உத்தப்புரம் சென்றிருந்தனர். உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இடைவிடாமல் போராடிய உத்தப்புரம் பட்டியலின மக்களுக்கும், சட்டப் போராட்டத்தில் உதவிய வழக்கறிஞர்களுக்கும், 2008 முதல் உத்தப்புரம் பட்டியலின மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மகத்தான பங்களிப்பை செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புறநகர் - மாநகர் மாவட்டக்குழுக்களுக்கும், நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு பட்டியலின மக்களின் வழிபாட்டிற்கு அமைதியான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய உத்தப்புரத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும். #Caste #StopCasteAtrocities #Religion

தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.
ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் - தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபத்தை ஏற்படுத்தும் டோட்டக்ஸ் (Totex) முறை திட்டத்தை செயல்படுத்தாமல் நுகர்வோர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் மின்சார வாரியமே தேவையான இடத்தில் மட்டும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த வேண்டும்.
ரூ. 50 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் மொத்தமுள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கு தனியார் மூலம், ஒன்றிய பாஜக அரசு சொல்லும் வகையில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தினால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சுமார் ரூபாய் 50,000 கோடி செலவாகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தாங்க முடியாத கடன் சுமையை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டோட்டக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மேலும், தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டருக்காக உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ள ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) ரத்து செய்வதுடன் ஸ்மார்ட் மீட்டரை தமிழ்நாடு மின்சார வாரியமே தேவையான இடங்களில் மட்டும் படிப்படியாக பொருத்த வேண்டும். #SaysNoToTOTEX #SayNoToSmartMeter #StopPrivatisation More: https://shorturl.at/nCLSG

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் : தனியார் லாப குவிப்புக்கு வழிவகுக்கும் டோட்டக்ஸ் (Totex) முறையை கைவிட்டு மின்சார வாரியமே ஸ்மார்ட் மீட்டரை…
<!-- wp:paragraph --> தமிழ்நாட்டில் உள்ள 3.40 கோடி மின் இணைப்புகளுக்கும் பழைய மீட்டரை நீக்கிவிட்டு படிப்படியாக டோட்டக்ஸ் (Totex) முறையில் ஸ்மார்ட் மீட்டர் அமைத்து, பராமரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு…
ஆர்.எஸ்.எஸ் ரவியை அடியாள் என்று சொல்லாமல் புனிதர் என்றா சொல்ல முடியும்? ஆள்வதற்கான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்கிறதே தவிர ஆளுநரிடம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவர்கள்தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #RSS #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/KHyRvz4ftUU
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் யார்? காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், ஆளுபவர்கள் பதவி விலகக் கோரி ஆக்ரோஷக் குரல்கள் எழும். பாஜக ஆட்சியில் தாக்குதல் நடந்தால் மட்டும், மதச்சார்பின்மை பேசுபவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வசைபாடப்படும். ஆனால் ஆளுபவர்களின் பக்கம் மட்டும் கோபம் திரும்பாது. உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதத் தாக்குதலுக்கு, ஆளுபவர்கள் மட்டுமே காரணமாக முடியும் - ராஜ்தீப் சர்தேசாய் ஊடகவியலாளர் #CPIM #Pahalgam #pahalgamattack #BJPFails
சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து இளைய தலைமுறையை அணி திரட்டுவோம்!
கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கட்சி உணர்ந்திருக்கிறது. ஒரு மாற்று தேவை என்ற இளைஞர்களின் தேடலையும், விருப்பத்தையும் கட்சி உள்வாங்கிட வேண்டும்.
சோசலிச இலட்சியத்தை நமது அரசியல், கருத்தியல் பிரச்சாரமான இடது, ஜனநாயக மாற்றுடன் இணைக்க வேண்டும்.
நமது இலட்சிய முழக்கங்களை கொண்டு சேர்க்க, இது மிக மிக அவசியமாகும். அந்தப் பாதையில் மேலும் முன்னேறுவோம்! - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #SocialismIsFuture More: https://shorturl.at/9kFpT

மும்மொழி திட்டம் என்பது இந்தி அல்லாத இந்திய மொழிகளை அழிக்கிற திட்டமிட்ட ஏற்பாடு. இது இந்தியை மூன்று மொழிகளிலும் கற்றுக்கொடுப்பது அல்லது இந்தியை மூன்று மொழிகளின் வாயிலாகத் திணிப்பது என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்தியை வைத்து பாஜக நடத்துகிற போரில் அவர்கள் ஒரு போதும் வெல்ல முடியாது- தோழர் சு.வெங்கடேசன்.எம்பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition #RevokeNEP More: https://youtu.be/OO1JpB_MYI0
சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து இளைய தலைமுறையை அணி திரட்டுவோம்! - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #SocialismIsFuture More: https://shorturl.at/XkFlA
தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீட்டை ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து #CPIM சென்னை சாஸ்திரி பவன் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத போக்கைக் கண்டித்தும் ஏப்ரல் 25 சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #RNRavi #GetOutRavi More: https://youtu.be/CF8hVglY2gA
கடவுள் நம்பிக்கை வேறு; மூடநம்பிக்கை வேறு!
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்!
மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்துவிட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பது மூட நம்பிக்கையை பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.
மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் பொருந்தாத மூடநம்பிக்கை என்பது வேறு.
மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர் பலி உட்பட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது.
சமூக சீர்திருந்த கருத்துக்கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #TNAssembly #TNAssembly2025

கல்விக்கான நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து #CPIM சென்னை சாஸ்திரி பவன் 25.04.2025 அன்று முற்றுகை போராட்டம்! #RNRavi #GetOutRavi
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள். #CPIM அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்! #JammuKashmir #PahalgamAttack #Pakistan More: https://shorturl.at/bLa06
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள்!சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்!
<!-- wp:paragraph --> ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ள துயரமான நேரத்தில்…
ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லாத துணை வேந்தர்களைக் கூட்டி ஆளுநர் எப்படி மாநாடு நடத்த முடியும்?
இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை செயலாளருக்கு இது தெரிவிக்கப்படவில்லை. இதற்கு யார் நிதி கொடுப்பது? அரசு கொடுக்கவில்லை என்றால் ஆளுநர் அவர் சொந்தப் பணத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/5jawtalcs6Y Full Video : https://youtu.be/CF8hVglY2gA

YouTube
உச்சநீதிமன்றம் சொன்ன பின்னும் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது சட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு.
ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லாத துணை வேந்தர்களைக் கூட்டி ஆளுநர் எப்படி மாநாடு நடத்த முடியும்? இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை செயலாளருக்கு இது தெர...
#CPIM 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் மற்றும் திரைப்பட எடிட்டர் சரத் ஆகியோர் தேர்வுக்குழுவாக இருந்து தேர்ந்தெடுத்த குறும்படங்களுக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர். இதில் #SITA தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் நிலையறிந்து மனமுடைந்து போனேன்.
நாடு ஏற்கெனவே பிரிவினையை நோக்கி செல்லும் ஒரு இக்கட்டான தருணத்தில், இச்சம்பவத்தில் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம், சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களுக்கு நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். குடிமக்களாக அதுவே நமது கடமை - ஆண்ட்ரியா,திரைக்கலைஞர் #JammuKashmir #PahalgamAttack #Pakistan

சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நமது நண்பர்களாக இருக்க முடியாது; சுற்றுலாவை நம்பி வாழும் ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்கே போவார்கள்?
இங்கு விருந்தினராக வருபவர்களை தாக்குவது நமது பாரம்பரியம் அல்ல. இது வெட்கக்கேடானது -தோழர் முகமது யூசுப் தாரிகாமி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan

திருவனந்தபுரத்தில் #CPIM கேரள புதிய மாநிலக்குழு அலுவலகமான ஏகேஜி மையத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான தோழர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி., மூத்த தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநிலச் செயலாளருமான எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.