The Seithikathir®
14.3K subscribers
45 photos
8 videos
225 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
மே 3-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
OTT தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹுலு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ALT, எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களுக்கு நோட்டீஸ் அளித்தது உச்ச நீதிமன்றம்!

OTT மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில் உச்ச நீதிமன்றம் அதிரடி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

நெல்லையில் ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்; இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.
டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது!

பத்திரிகை மற்றும் கல்வித்துறையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக, தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
ஜிப்லி படம்: பெண் அதிகாரி மாற்றம்!

ஹைதராபாத்தில் 400 ஏக்கர் நிலத்தில் மரங்களை வெட்டுவது தொடர்பாக ஜிப்லி படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் பணியிட மாற்றம்; இவர் கடந்த வாரம் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆந்திர மாநிலங்களவை பதவி - பாஜக வேட்பாளர் அறிவிப்பு

ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாஜக சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுகிறார்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில், பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவிப்பு
Follow the The Seithikathir channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம் - மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள் பிரிப்பு.

நிர்வாக ரீதியாக கிருஷ்ணகிரி, சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள்.

வேலூரில் 4, தஞ்சையில் 4, சிவகங்கையில் 9, கிருஷ்ணகிரியில் 2, புதுக்கோட்டையில் 2 ஒன்றியங்கள் பிரிப்பு.

அரியலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.

ஒருங்கிணைப்புக் குழு கூட்ட முடிவின்படி, வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.

புதிய ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
சென்னையில் களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி.

மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தம்.

24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.

சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு.

உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.

ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி.

வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனத் தகவல்.

மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டம்.
அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்!

“பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்!

திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார். ஃபார்முலா-2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அவர் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
செப்டம்பர் 6ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும்; சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவல் துறைதான் காரணம்.

சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது.

சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை.

இது கட்சியின் அரசு அல்ல; ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருகிறோம்; இது தனிமனித சாதனை அல்ல; அமைச்சரவையின் சாதனை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குறள் எண் : ௨௨௫(225)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை

குறள் :
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


உரை :
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

English :
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௬)
தமிழ் வாழ்க
துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல்.

உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.க்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்.

துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இன்றைய புத்தக மொழி
29/04/25
📚📚📚🌹📚📚📚

ஒருவரை நமக்குப் பிடித்துப் போகிறது என்றால் அவர்களுடைய பலவீனங்களை நாம் பெரிது படுத்துவதில்லை என்று அர்த்தம்...
அதே சமயம் ஒருவரை நாம் *நேசிக்கிறோம் என்றால்* அவர்களுடைய பலவீனங்களையும் சேர்த்துதான் நேசிக்கிறோம் என்று அர்த்தம்.

- ஹெர்மான் ஹெஸ்ஸே -

📚📚📚🌹📚📚📚
சார் ஒரு FIR போடுங்க….
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை, உயிர் தப்பிய காவலர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பஜார் பகுதியை ஒட்டி நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அப்போது பணியில் இருந்த காவலர் ஒரு அறைக்குள் பதுங்கி விட்டார். காவல் நிலையத்தில் சிறுத்தை புகுந்து வரும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சில நொடிகள் கழித்து சிறுத்தை அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது. சிறுத்தை வெளியே சென்ற உடன் வெளியில் வந்த காவலர் காவல் நிலையத்தின் கதவை சாத்தி விடுகிறார். மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் சிறுத்தை காவல் நிலையத்தில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை காவல் நிலையத்திற்குள் வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை கதவுகள் திறந்து கிடந்த காவல் நிலையத்திற்குள் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் காவல்துறை தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் அதிமுக அமளி

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் மானிய
கோரிக்கைக்கான முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எதிர்ப்பு

முதல்வரின் பதிலுரையில் அதிமுக குறித்து கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என அதிமுக அமளி
காலனி என்ற சொல் நீக்கப்படும்-முதல்வர்.

அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும்.

மண்ணின் ஆதிக் குடிகள் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்