The Seithikathir®
14.3K subscribers
45 photos
8 videos
197 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
💥 போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் 'டிவி'

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், 'டிவி' சேனல் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பா.ஜ., தலைவர்கள், 'சித்தராமையா, பாகிஸ்தான் செல்லட்டும்' என்று கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; போரை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.
💥 காட்டமான பதில்!

என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.

Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது!

IPL போட்டியின்போது அங்கத் அமைதியாக இருந்தது இணையத்தில் பேசுபொருளான நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா காட்டம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்"

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு

பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து

பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும் - ஏக்நாத் ஷிண்டே

பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஏக்நாத் ஷிண்டே
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நிலவும் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் பொறுப்பான முறையில் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அமெரிக்கா கருத்து

அமெரிக்கா இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் தகவல்

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்
பிபிசி தொலைகாட்சியின் இந்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டதால் நோட்டீஸ்

ஆட்சேபம் தெரிவித்து பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைவர் ஜாக்கி மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் தகவல்
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து: ஐகோர்ட்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.
Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்க அறிவுரை.

Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவுறுத்தல்.

முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் உள்ள பொதுமக்கள், பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்து புகார் மனு அளிக்க காவல் துறை அறிவுறுத்தல்.
"ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க தயார்"

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க தயாராக உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு.

பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி மீண்டும்| அமைச்சராகக் கூடாது - மத்திய அரசு வழக்கறிஞர்.

செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் போது கூட இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார் - சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
கடமை தவறிவிட்டோம்: முதல்வர்

பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது; பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பதென்று தெரியவில்லை.

விருந்தினர்களாக வந்தவர்களை பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டிய கடமையில் தவறிவிட்டோம்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
அனுமதி வழங்கப்படுவதில்லை!

தமிழகத்தில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை;

ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு சென்றே ஆர்ப்பாட்டங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதி பெற வேண்டிய அவலம். அ.தி.மு.க., ஆட்சியில் 43,000 போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது

-சட்டசபையில் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு.
விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது!

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைப்பு; விசாரணை முடியும் வரை அவர் அமைச்சராகக் கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பு வாதம்.
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தை சேர்ந்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்து.
நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வேதனை கருத்து.

60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது.

வெறும் 7% நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது - நீதிபதி.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது எனவும் நீதிபதி காட்டம்.
💥 பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு

தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.​யின் அலிகரில் பணியை தொடங்​கி​னார். பின்​னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரி​விலேயே பணி​யில் சேர்ந்​தார். ஐஏஎஸ் பணி​யில் அவுரய்​யா, சோன்​பத்​ரா, குஷி நகர் மற்​றும் சுல்​தான்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

கடந்த நவம்​பர் 2022-ல் வாராணசி​யின் 58-வது ஆட்​சி​ய​ராக ராஜலிங்​கத்தை முதல்​வர் ஆதித்​ய​நாத் நியமித்​தார். இந்த மாவட்​டத்​தில் ஆட்​சி​ய​ராக நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்​டரை ஆண்டு வாராணசி நிர்​வாகத்​தில் 3 காசி தமிழ்ச் சங்​கமங்​கள் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. பிரதமர் உத்​தர​வின் பேரில் பல கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் ராஜலிங்​கம் அமல்​படுத்​தி​னார். இதனால், பிரதமர் மோடி​யின் அபி​மானத்தை பெற்​றார். பின்​னர் பிரதமர் மோடி நேரடி​யாக​வும் வீடியோ கான்​பரன்​சிங் கூட்​டங்​களி​லும், ‘மிஸ்​டர் ராஜலிங்​கம்’ என்று பெயரைக் குறிப்​பிட்டு அழைக்​கும் அளவுக்கு நம்​பிக்​கைக்கு உரிய​வ​ராக செயல்​பட்​டார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்​நிலை​யில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. எனினும், மகா கும்​பமேளா, பல கோடி பக்​தர்​கள் வரு​கை, காசி தமிழ்ச் சங்​கமம் 3.0 நிகழ்ச்சி உள்​ளிட்ட முக்​கிய பணி​கள் இருந்​த​தால் ராஜலிங்​கத்​துக்கு பதவி உயர்​வுக்​கான பணி ஒதுக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், அந்​தப் பணி​களை அவர் சிறப்​பாக செய்து முடித்​த​தால், தற்​போது அவர் வாராணசி​யிலேயே மண்டல ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். வாராணசி மண்​டலத்​தின் 4 மாவட்ட ஆட்​சி​யர்​களின் பணி​களை மேற்​பார்​வை​யிடும் இந்த ஆணை​யர் பணி​யில் நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவர்​தான்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்​கம் கூறும்​போது, ‘‘பு​திய பணி​யில், முக்​கிய​மாக வாராணசி​யில் அமலாக்​கிய ரூ.49,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை கண்​காணிக்​கும் பணி​யும் அடங்​கி​யுள்​ளது. அத்​துடன் வாராணசி வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் என்ற கூடு​தல் பணி​யும் உள்​ளது. இந்த பதவி​யில், மண்​டலத்​தின் நகரங்​களை விரிவடைய செய்​வது, வாராணசி போக்​கு​வரத்தை அடுத்​தக்​கட்​டத்​துக்கு கொண்டு செல்​வது, நகரின் திடக்​கழிவு மேலாண்மை உள்​ளிட்ட பல பணி​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளேன். காசி விஸ்​வ​நாதர் கோயில் அறக்​கட்​டளை தலை​வ​ராக பக்​தர்​களுக்​கான வசதி​களை மேம்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளேன். அதன் ஆலோ​சனை​களை​யும் வரவேற்​கிறேன்’’ என்​றார். ராஜலிங்​கத்​துக்கு மனை​வி நித்​யா மற்​றும்​ மகன்​ வேலன்​ ஆகியோர்​ உள்​ளனர்
🩶🔥🩶 முகூர்த்தம் குறித்தாகி விட்டது.

சம்பவாமி யுகே யுகே......

பாகிஸ்தானிய கராச்சி துறைமுகத்தை நம் இந்திய கடற்படை முற்றுகை இட்டு விட்டது. INS விக்ராந்த் தனது பரிவாரம் புடை சூழ கராச்சியில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் நிலை கொண்டு நிற்கிறது இன்று . இதில் ரஷ்ய தயாரிப்பு மிக்29K மற்றும் அமெரிக்க போயிங் நிறுவனத்தின் MH60 ரக ஹெலிகாப்டர்கள் , இதனுடன் டெஸ்ட்டாயர் ரக போர் கப்பல்கள் இரண்டு, நான்கு நீர் மூழ்கிக் கப்பல்கள் என பிரம்மாண்டமாக கிளம்பி போய் நிற்கிறது.

இது "சம்பவத்தை...." உறுதி செய்திருக்கிறது.

பூச்சாண்டி காட்டவே இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து இருப்பதாக கணக்கு சொல்கிறது என நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு அடுத்தடுத்த நம்மவர்களின் நகர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட... அடைக்கலம் கொடுத்ததாக அவதானிக்கப்பட்டவர்களின் வீடுகளை நமது ராணுவத்தினர் வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி விட்டு குண்டு வைத்து தகர்த்து விட்டு தூசி அடங்கியதும் உங்கள் வீடுகளுக்கு திரும்புங்கள் என சொல்லி விட்டு பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்திருக்கிறார்கள்.

அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் அங்கு உள்ளவர்கள். இப்படியான நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டதில்லை. இதுநாள் வரையிலும் கனவிலும் கூட அங்கிருந்தவர்கள் நினைத்து பார்த்திருக்கவில்லை. ஜஸ்ட் லைக் தட் என்பது போல் நடந்து கொண்டிருக்கிறது ராணுவம்.

இப்படி இடிக்கப்பட்டது முதுகலை பட்டதாரி ஆசிரியராக இது நாள் வரையில் அறியப்பட்ட அந்நபர் அனில் உசைன் தோஹர் என்பவன் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பிறகு மாயமானதாக சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் கனவானாக அறியப்பட்டவன்.... கடந்த காலங்களில் என்கௌண்டர் செய்யப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கு அத்தனையிலும் கலந்து கொண்டு இருப்பதை கானொளி காட்சிகளாக காண்பித்ததும், அம்மக்களே விக்கித்து நின்றிருக்கிறார்கள். இவற்றை கூட போலீஸ் தான் விளக்கி உள்ளனரே தவிர ராணுவத்தினர் மூச்...... வாயே திறக்கவில்லை என்கிறார்கள்.

இந்த சம்பவம் அங்கு மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. மக்களில் பலர் காவல் துறையினரை நேரில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் அவர்களாக சொல்லி வருகிறார்களாம்.

இதனிடையே பாகிஸ்தான், நேற்றைய தினம் தங்கள் வான் பரப்பை இந்தியாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்கள்.யாரும் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அடுத்ததாக பாகிஸ்தானிய அமைச்சர் கவாஜா ஆசிம் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் தங்கள் தேசம் கடந்த முப்பது ஆண்டுகளாக இது போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு வந்துள்ளோம். இன்றைய நிலைக்கு மேற்கு உலக நாடுகளே காரணம். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவே இதற்கு முழு பொறுப்பு என கூறி அதிரடித் திருக்கிறார்.

எல்லாம் சரி.....எலி ஏன்..... போகிற கதையாக இது இருந்தாலும் இந்த சமயத்தில் அவர் இப்படி சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு.

இந்தியா இம்முறை நிச்சயம் நம்மை பதம் பார்த்து விடும் என இங்குள்ளவர்களை விட அங்கு உள்ள அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்திரங்கிய ஆயுதங்களோடான விமானங்களே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

இப்படியான சூழலில் தங்களுக்கு... அதாவது பாகிஸ்தானுக்கு ரஷ்யா துணை நிற்க வேண்டும் என பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு வருகிறார்கள் அவர்கள். ஆனானப்பட்ட சீனாவே இந்த சமயத்தில் பாராமுகமாக திரும்பி நின்று மோட்டு வளையை பார்த்து கொண்டு வருகிறது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க.....

இதென்ன சிறு பிள்ளை சமாச்சாரம். பதான்கோட் தாக்குதல் சம்பவத்தை போல் விமானங்கள் கிளப்பி கொண்டு வந்து குண்டு போட்டு விட்டு போகவேண்டியது தானே..... அதைவிட்டு விட்டு இது முழுமையான போர் நடவடிக்கை என கிலி பிடித்து பிதற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள் பாகிஸ்தானிய பக்கிகள். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்பது ஒரு பெரிய குறையாக இருக்கிறது.

ஆனால்...அரண்டு போய் இருப்பது உலகத்தவர் தான்.உலக அளவில் கோவோச்சும் மூத்த பத்திரிகையாளர் ......அரசியல் பார்வையாளர் ஒருவர்., இந்திய ராணுவத்தினரை தொட்டதற்கே ((கல்வான் மோதலில்.....)) ஓட ஓட கதகளி ஆடியவர்கள்..... பெய்ஜிங்கை உண்டு இல்லை என்று செய்தவர்கள்..... தன் பிரஜைகளை தொட்டால் சும்மா விட்டு விடுவார்களா என நேரலை விவாத அரங்கு ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஆக உலகத்தவர் மிக நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறார்கள்.இங்கு உள்ள கூகைகள் தான் இது புரியாமல் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்ய...

நன்றி: ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴 'பத்ம பூஷண்' அஜித்!

நடிகர் அஜித் குமாருக்கு, டில்லியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.
புதிதாக பதவியேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு

ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் மனோ தங்கராஜ்

பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் முர்மு:

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிப்பு.

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிப்பு.

குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மபூஷன் விருதைப் பெற்ற நடிகர் பாலகிருஷ்ணா.