The Seithikathir®
14.3K subscribers
33 photos
3 videos
145 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை

எந்த விதத்திலும், எந்த இடத்திலும் பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பது இல்லை -பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம்
விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி - ஸ்ரீநகரிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் மதியம் 12 மணிக்குக் கூடுகிறது
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

அமலாக்கதுறை தொடர்ந்து சோதனை நடத்த அனுமதி - நீதிபதிகள்
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி.

உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.
பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டம்?

பயங்கரவாதிகள் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்

ஏப்ரல் 19ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார் பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீர் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்தார் பிரதமர் மோடி
அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
"செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க அனுமதி தரவில்லை"

செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்று உச்ச நீதிமன்றம் விளக்கம்.

ஜாமின் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?; மெரிட் அடிப்படையில் ஜாமின் வழங்கவில்லை; அரசியல் சாசன பிரிவு 21 ஐ மீறிய காரணத்தால் ஜாமின் வழங்கப்பட்டது - செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.
பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு - தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.

பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சு, ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது.

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு காவல்துறை
நடவடிக்கை எடுக்கவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது-உயர்நீதிமன்றம்.
அன்புமணி மீதான வழக்கு ரத்து.

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிவு.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
"தக்க பதிலடி கொடுக்கப்படும்"

"பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்

விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள்

குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்

பயங்கரவாத‌த்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன"

- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
25 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை - ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கு கணக்கு வாசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: கைத்தட்டி ஆராவாரம் செய்த திமுக உறுப்பினர்கள்.

கடந்த வாரத்தில் பல அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்தார்கள். நீங்கள் போடும் கணக்கு சரியாக இருக்காது என பேரவை முன்னவர் தெரிவித்தபோது, அதிமுகவின் வேலுமணி அவர்கள் 'கூட்டிக் கழித்து பாருங்கள், கணக்கு சரியாக வரும்' என்றார் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அந்த வசனம் 'அண்ணாமலை' படத்தில் வில்லன் பேசும் வசனம். அதைத்தான் வேலுமணி பேசிவிட்டு சென்றார். அவருக்கு இப்போது ஒரே ஒரு பதிலை நான் சொல்ல விரும்புகிறேன்.

கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்தான். ஆனால், தமிழ்நாடு மக்கள் போடுகின்ற கணக்கை உங்களுக்கு பட்டியலிடுகிறேன். நீங்களும் கொஞ்சம் கூட்டிப் பாருங்கள் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவிகள் போடுகின்ற கணக்கு 'புதுமைப்பெண் கணக்கு'.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பள்ளி குழந்தைகள் போடுகின்ற கணக்கு 'காலை உணவு கணக்கு'.

மாணவர்கள் போடுகின்ற கணக்கு 'தமிழ்ப் புதல்வன்' கணக்கு.

தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் போடுகின்ற கணக்கு 'கலைஞர் உரிமைத்தொகை கணக்கு'.

பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகள் போடுகின்ற கணக்கு 'விடியல் பயண கணக்கு'.

உங்கள் கூட்டணியில் இருக்கின்ற ஆணவ, ஒன்றிய, அதிகார அரசு போடுகின்ற கணக்கு 'அதிகார மமதை கணக்கு'.

அதற்கு எங்கள் முதல்வர் போடுகின்ற எதிர் கணக்கு 'மாநில சுயாட்சி கணக்கு'.

இதை பார்த்து சிறுபான்மையினர் போடுகின்ற கணக்கு 'பாதுகாப்பு கணக்கு'.

மக்கள் எங்களுக்கு போடுவது 'கூட்டல் கணக்கு'.

மக்கள் உங்களுக்கு போடுவது 'கழித்தல் கணக்கு'.

உங்கள் கூட்டணியில் இருக்கின்ற ஆணவ, ஒன்றிய, அதிகார அரசு போடுகின்ற கணக்கு அதிகார மமதை கணக்கு.

அதை பார்த்து எங்கள் முதலமைச்சர் போடுகின்ற கணக்கு "மாநில சுயாட்சிக் கணக்கு" இதை பார்த்து சிறுபான்மையினர் போடுகின்ற கணக்கு பாதுகாப்பு கணக்கு.

நீங்கள் சேர்ப்பது பாவக்கணக்கு, பழிக் கணக்கு.

எங்கள் முதல்வரிடம் இருப்பது நியாயக் கணக்கு, சத்திய கணக்கு, உண்மை கணக்கு.

இப்ப கூட்டி கழிச்சு பாருங்கள், கணக்கு சரியாக வரும். ' தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்'.

நன்றி, வணக்கம்.

- போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்‌.சிவசங்கர்.
பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகிறது
BREAKING: அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது- மத்திய அரசு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து-மத்திய வெளிறவுத்துறை செயலாளர்.

SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற அரசு உத்தரவு.

பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து.

SAARC விசா விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை.

பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் வரும் மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவு.

பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.
பஹல்காம் தாக்குதல் - நாளை அனைத்துக்கட்சி கூட்டம்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு.
💥 சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவிற்கு எதிராக இன்று வெளியான இரண்டு தீர்ப்புக்கள், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பல ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை அமலாக்கதுறை விசாரிக்க தடை விதிக்க முடியாது என அறிவித்த உயர்நீதிமன்றம், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவின் மூலம், துரைமுருகன், அவரது மனைவி சாந்த குமாரி, தம்பி துரை சிங்காரம், மகன் கதிர் ஆனந்த், மற்றும் மருமகள் சங்கீதா ஆகியோர் முன்பு விடுவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது

🔆சொத்து குவிப்பு காலம்: 1996 - 2001 (திமுக ஆட்சி, பொதுப்பணித்துறை அமைச்சர்):இந்த காலகட்டத்தில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் சொத்து குவிப்பு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

🔆வழக்கு பதிவு: 2002 (அதிமுக ஆட்சி):அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

🔆வழக்கில் விடுதலை: 2007 (திமுக ஆட்சி, பொதுப்பணித்துறை அமைச்சர்):திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

🔆மேல் முறையீடு: 2013 (அதிமுக ஆட்சி):அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது.

🔆 மீண்டும் விசாரணைக்கு உத்தரவு: 2025 (திமுக ஆட்சி, நீர்வளத்துறை அமைச்சர்):மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.