The Seithikathir®
14.3K subscribers
35 photos
4 videos
155 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
💥 அமைச்சருக்கு அறிவுரை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்கக் கூடியவர். இந்த சொல்லாற்றா அவருக்கு பலமானதாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என அவருக்கே தெரியும். நமது எதிரிகள், வெறும் வாயை மெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அதற்கு அவலாக உங்கள் சொல் ஆகிவிடக் கூடாது.

என் சொல்லைத் தட்டாத PTR, என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்...

பஹல்காம் துப்பாக்கி சூடு: தமிழ்நாடு உதவி எண்கள் வெளியீடு..
Helpline nos.
Land line : 011 - 24193300
Mobile no: +91 92895 16712
பஹல்காம் துப்பாக்கி சூடு: இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி... சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று இரவு டெல்லி திரும்ப உள்ளார். பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.
குறள் எண் : ௨௧௯(219)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஒப்புரவறிதல்

குறள் :
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.


உரை :
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறுமை அடைவதாவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

English :
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௦)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
23/04/25
📚📚📚🌹📚📚📚

பொறாமையினால்
ஒருவனின் மனதில்
உருவாகும் விசம்
இறுதியில் அவனையே
அழித்துவிடும்.

- நீட்சே -

📚📚📚🌹📚📚📚
பஹல்காமில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள்.

பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல்.

மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்வு.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

காவலர் கட்டுப்பாட்டு அறை பகுதியில் 29 பேரின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி ஆலோசனை.

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனையாகிறது.
அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்புகிறார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அரசு சார்ந்த முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என்பதால் நாடு திரும்புகிறார்
அமைச்சர் வழக்கு - இன்று தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை கடந்த 2007ம் ஆண்டு விடுதலை செய்தது வேலூர் நீதிமன்றம்

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு
படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டை தீவிரம்

பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்
இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல்
பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை

எந்த விதத்திலும், எந்த இடத்திலும் பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பது இல்லை -பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம்
விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி - ஸ்ரீநகரிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு

டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் மதியம் 12 மணிக்குக் கூடுகிறது
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

அமலாக்கதுறை தொடர்ந்து சோதனை நடத்த அனுமதி - நீதிபதிகள்
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி.

உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.