The Seithikathir®
14.3K subscribers
33 photos
4 videos
153 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்.

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஏப்.29ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும் - தெற்கு ரயில்வே.
உதகை ராஜ்பவனில் ஏப். 25,26ல் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

உதகையில் நடக்கும் மாநாட்டில் பல்கலை., துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்கள்

பல்துறை வல்லுநர்களும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்- ஆளுனர் மாளிகை.
"நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது"-குடியரசு துணை தலைவர்.

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களே உச்சபட்ச எஜமானர்கள்-டெல்லியில் நடந்த பல்கலை. நிகழ்ச்சியில்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு; இம்மாதம் ஓன்றாம் தேதியில் இருந்து கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் -சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
"கடலூர், நாகையில் புதைவட மின் பாதைகள்"

“இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ. 490 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகள், புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்-சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு.
💥 குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது: அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.

எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
UPSC தேர்வு முடிவுகள் வெளியானது.

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது; 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர்;109 பேர் EWS பிரிவினர்.

அகில இந்திய அளவில் உ.பி.யை சேர்ந்த சக்தி துபே முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு.

விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
UPSC-தமிழகத்தில் நான் முதல்வன் திட்ட மாணவர் சாதனை

தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 23ஆம் இடம் பிடித்துள்ளார்

தமிழக அளவில் சாதனை புரிந்துள்ள சிவச்சந்திரன் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்; 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா, தேசிய அளவில் 39ஆவது இடம் பிடித்துள்ளார்
வாழ்வில் ஒளியேற்றிடும் நான் முதல்வன்-மு.க.ஸ்டாலின்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம், லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை மகிழ்ச்சியாகி உள்ளது.

UPSC தேர்வில் நான் முதல்வன் திட்ட மாணவர் தமிழ்நாட்டு வரிசையில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தகவல்.

பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபியாவில் இருந்து தொலைபேசி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
BREAKING: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 24 பேர் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு; 13 பேர் காயம்.

பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள் எனுவும் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்.
பயங்கரவாத தாக்குதல் - காஷ்மீர் புறப்பட்டார் அமித் ஷா.

காஷ்மீர்: பஹல்காமில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 க்கும் பேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், பலர் காயம்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என காவல்துறை அச்சம்.

தற்போது காஷ்மீர் புறப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தகவல்.
The Seithikathir® pinned «🔴 மத்திய அமைச்சர் ஆகிறார் அண்ணாமலை?! WATCH: https://youtu.be/8ZGqPIEIlf0 கூட்டணி கட்சி ஆதரவுடன் அண்ணாமலையின் அடுத்த கட்டம்! ***»
தீவிரவாத தாக்குதல் சம்பவம் - ராகுல்காந்தி கண்டனம்.

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது.

பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது, உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்- ராகுல்காந்தி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஸ்ரீநகர் சென்றடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கிறார்
டாஸ்மாக் வழக்கு - நாளை 10.30 மணிக்கு தீர்ப்பு

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை
நடத்திய சோதனை சட்ட விரோதமானது
என அறிவிக்கக் கோரிய வழக்கு

நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது
சென்னை உயர்நீதிமன்றம்
பஹல்காம் தாக்குதல் - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளிள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல், இது கடும் கண்டனத்திற்கு உரியது.

உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்”

உதவி எண்கள்

போன்: 011-24193300 வாட்ஸ்அப்: 9289516712

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிர தாக்குதலில் பாதிக்கப்பட்டர்களின் விவரங்களை அறிய உதவி எண்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இரங்கல்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இரங்கல்.

“கடந்த சில நாட்களாக இந்தியாவின் அழகையும், அதன் மக்களையும் கண்டு வியந்துள்ளோம், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்"

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴பயங்கரவாத தாக்குதல்; 28 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29