அரண்செய்
226 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
நடிகர் ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சிக்குச் செலுத்திய சொத்து வரிக்கான ரசீதில், அவரது ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டப்பட்ட இடம் 250 சதுர அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/rajinikanth-marriage-hall-property-tax-bill-250-square-feet/
நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் பல விருதுகளைக் குவித்த கலீபா (caliphate) எனப்படும் இணையதள அலைபரப்பை (podcast) ஏன் மறுபரிசீலனை செய்து வருகிறது?

கனடாவில் செய்யப்பட்ட ஒரு கைது நியூயார்க் டைம்ஸைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ருக்மிணி கள்ளிமாச்சியின் செய்தி சேகரிப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருப்பது ஏன்?

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/16/new-york-times-rukmini-callimachi-caliphate/

#aransei #times #rukmini
பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த ஒரே தேர்தல் முறை 2022-ல் நடக்க இருப்பதாகப் பரவலான எதிபார்ப்பு நிலவி வருகிறது. நாம் இந்த வியத்தகு மாற்றத்திற்குத் தயாராகிவிட்டோமா?

நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறை கொண்டுவருவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. ஒரே தேர்தல் முறைக்கு வரும் எதிர் கருத்தில் முக்கியமானது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவரும் என்பதுதான்.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/16/one-india-one-election-prime-minister/

#aransei #election #pm #modi #india #reports
திருச்சியில் கொரோனா பாதுகாப்பு உடைகளை மயானத்தின் வெளியே வீசி செல்வதாலும், தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் காக்க வைக்கப்படுவதாலும் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/16/trichy-electric-burial-grounds-spread-corona-ppt-kit/

#aransei #spread #india #corona #ppt
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் நிகரச் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/nirmala-seetharaman-one-scooter-28000/

#aransei #nirmala #scooter #bjp #modi
அமெரிக்கவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இந்த விருது வழங்கப்டுகிறது. பிரமிள், சி.சு.செல்லப்பா, பூமணி, ஞானக்கூத்தன், அம்பை போன்ற தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/vilakku-award-america-kalapriya-literature/
என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/muthaih-muralidharan-statemenr-about-800-movie-issue/

#aransei #muralidharan #vijaysethupathi #movie #800
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாச்சலம், இந்தப் படத்தில் முரளிதரனின் இளவயது கதாப்பாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டபோது முடியாது என மறுத்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா-க்கு பேட்டியளித்துள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/teejay-said-no-to-vijay-sethupathis-muralidaran-biopic-because-of-its-politics/

#aransei #muralidharan #vijaysethupathi #movie #teejay
அரசின் கொள்கை முடிவில் தலையிட்டுத் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவைப் பணி நீக்கம் செய்ய வேண்டி முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/16/the-decision-of-the-tamil-nadu-government-though-delayed-is-welcome-mk-stali/
ஆறுவகை அடிமைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்… இந்த அடிமைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பார்த்துவிடுவோம். அது இன்னும் ஆழமாக அடிமைகள் குறித்த புரிதலை உருவாக்கும். பிரபலமான அடிமை ஒருவருடைய உண்மைக் கதையிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். அவருக்குக் கற்பனையாக முருகேசன் என்கிற பெயரை வைத்துக்கொள்வோம்

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/e-slaves-03-tik-tok-rajini-kanths/

#aransei #rajini #slaves #web
ரயில்வே துறை, விண்வெளித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் 50 துறைகள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ.157.23 கோடியைப் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளன (பிஎம் கேர்ஸ்) என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆர்டிஐ மூலம் பெற்ற பதிலில் தெரியவந்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/16/central-departments-donated-rs-157-crore/
2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக வறுமை குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/world-poor-index/
நேற்று, கறுப்பு முகக்கவசங்கள் அணிந்து, திரிபுராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முதலமைச்சர் பிப்லாப் குமார் டேப்பின் அச்சுறுத்தலுக்கும் எழுத்தாளர்கள் மீதான “தாக்குதல்களுக்கும்” ​​எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று ‘தி வயரில்’ செய்தி வெளியாகியுள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/tripura-journalists-protest/
தொலைதொடர்பு நிறுவனங்கள் 3,300-3,600 Mhz வரம்பில் 5G சேவையை செயல்படுத்த கதிரியக்க அலைகளை(radiowaves) வாங்குவதற்கு குறைந்தது ரூ. 9,840 கோடி செலவாகும் என்றும் 20 MHz வீதம் ஏலத்தில் விடப்படும் என்றும் TRAI தெரிவித்துள்ளது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/5g-airtel/

#aransei #airtel #5g #trai
மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனக்கு எந்த அடிப்படை வசதிகளும் சிறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி, அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/prof-saibaba-maoist-link-refused-basic-needs/

#aransei #maoist #refused #needs