CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
214 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு பதிலாக என்கவுண்டர் படுகொலை; பாஜக அரசின் பாசிச முகம் - தீக்கதிர் தலையங்கம் #Chattisgarh #Maoists #Encounter More: https://shorturl.at/Z8zLx
கீழடியின் அகழாய்வு முடிவுகள் வரலாற்றில், கருத்தியல் மற்றும் கல்வி தளத்தில் மிக முக்கியமான இடம் பிடிப்பதை தடுக்க பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிக்கிறது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keezhadi #BJPFails More: https://youtu.be/6L_u_7svAXU
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட உச்ச அமைப்புகளான ஆளுநர் அலுவலகங்கள், ED, CBI, வருமான வரித் துறை, சில நேரங்களில் நீதிமன்றங்கள் கூட பாஜகவின் அடியாளாக மாற்றப்பட்டிருக்கின்றன - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJPFails More: https://youtu.be/QkuQudRHKR0
நல்லா இருக்கு சார் உங்க நியாயம்!

பெங்களூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023ல் கையகப்படுத்தப்பட்ட மைசூர் அரச குடும்ப நிலத்திற்கு 3,400 கோடி இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு;

எந்த மன்னனும் காடு திருத்தி கழனியாக்கி மதிக்கத்தக்க நிலமாக மாற்றியிருக்கப் போவதில்லை. எனவே இந்த மன்னர் வகையறா 15.39 ஏகர் நிலத்தை யார்யாரிடமிருந்து அபகரித்தோ தெரியவில்லை. அதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 221 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்கிறது உச்சநீதிமன்றம்.

ஆனால் தலைமுறை தலைமுறையாக மக்கள் வசிக்கிற / சாகுபடி செய்கிற இடங்களையும் நிலங்களையும் வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் அரசு கையகப்படுத்தும்போது கொடுக்கும் நஷ்ட ஈடு பாலிடாயில் வாங்கவே பத்தாது என்கிற நிலைமைதான் - ஆதவன் தீட்சண்யா பொதுச் செயலாளர், தமுஎகச #LandGrabbing #FarmersLivesMatter
சட்டவிரோத சுரங்கங்களை ஊக்குவிக்கும் பாஜக அரசு? #Assam #Illegalcoal #BJPFails More: https://shorturl.at/htbxN
காசா மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற, மனித உரிமைகளை மீறிய பேரழிவு.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 2.037

அப்டோபர் 7,2023 முதல் 53,384 பேர் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டுள்ளனர்.
94% பொது மக்கள்
51% குழந்தைகள்
16% பெண்கள்

இது வெறும் மோதல் அல்ல. திட்டமிட்ட கொலைகள், அழித்தொழிப்பு, இடப்பெயர்வுக்கான நடவடிக்கை

உலகம் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. #GazaGenocide
காசா மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற, மனித உரிமைகளை மீறிய பேரழிவு மௌனமாக்கப்படும் உண்மைகள்

அக்டோபர் 2023 முதல் தற்போது வரை 210 பத்திரிகையாளர்கள் படுகொலை.

ஏப்ரல் 7 அன்று நாஸர் மருத்துவமனை அருகில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கும் கூடாரம் திட்டமிட்டு தாக்கப்பட்டது.

இது வெறும் மோதல் அல்ல திட்டமிட்ட கொலைகள், அழித்தொழிப்பு, இடப்பெயர்வுக்கான நடவடிக்கை

உலகம் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. #GazaGenocide
வாழ்க்கையோடு இணைந்ததுதான் அரசியல்; பெண்கள் அரசியல் களத்திற்கு வர வேண்டும்!

அனைவரையும் சமமாக நடத்துகிற, சாதிய வேறுபாடு இல்லாத, பெண்களை மதிக்கக்கூடிய, மத வித்தியாசம் பார்க்காமல், அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமாகப் பார்க்கக் கூடிய அரசியலை, உழைக்கும் மக்கள் உயர்வுக்கு வர வேண்டும்.

மதச்சார்பின்மை, ஜனநாயக, சமத்துவ அரசியலை முன்னெடுக்கிற அரசியலுக்கு பெண்கள் வர வேண்டும் - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #WomenInPolitics
#GenderEquality
சங்கம் அமைக்கக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தில் போராடி சங்கத்தைப் பதிவு செய்து, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைப் பெற்று உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்த சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் கதையை விளக்குகிறார் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் இ.முத்துகுமார் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtu.be/9mLTuDixpE8
பாட்டாளி வர்க்கம் எப்படி உருவானது?

கடந்த (18வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகி, அதன் பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்த தொழில் புரட்சியின் விளைவாக பாட்டாளி வர்க்கம் உருவானது. #QuoteOfTheDay #MarxistQuotes #KarlMarx #FriedrichEngels #PrinciplesofCommunism #WorkingClass #IndustrialRevolution #Inspiration #Motivation
சட்டமுன் வடிவுக்கு ஆளுநர்களுக்கு காலம் நிர்ணயிப்பு குறித்து குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கும் மலிவான அரசியல் நாடகம். #DroupadiMurmu #Governor #SupremeCourt #RNRavi More: https://shorturl.at/zw6Wk
இடது ஜனநாயக முன்னணி அரசின் 4ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்! மக்கள் கடலாக மாறியது புதரிக்கண்டம் திடல்

கொரோனா இரண்டாவது அலை, கனமழை - வெள்ளம், நிலச்சரிவு, ஒன்றிய அரசின் மிக மோசமான நிதிப் பாரபட்சம், பழிவாங்கல் நடவடிக்கைகள் என கடினமான காலங்களிலிருந்து கேரளத்தை மீட்டெடுத்தது இடது ஜனநாயக முன்னணி அரசு.

வளர்ச்சிக் குறியீடுகளிலும் மாநிலத்தை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து, கேரளத்தை மீண்டும் உயிர்ப்பித்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொண்டாட்டத்தில் கேரள மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். #Kerala #CPIM #LDF #LeftAlternative
2024 ஜூலை மாதம் வயநாட்டில் நடந்த நிலச் சரிவுக்கு நிவாரணம் வழங்காமல் புறக்கணிக்கும் பாஜக அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் #CPIM நடைபயணம். #Kerala #WayanadLanslide #CPIM #LDFGovt
காசா மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற, மனித உரிமைகளை மீறிய பேரழிவு விரிவடையும் ஆக்கிரமிப்பு.

1,993 புதிய குடியேற்ற பகுதிகளுக்கு அனுமதி. இவற்றில் ஜெருசலேமில் மட்டும் 760 குடியிருப்புகள்

223 சட்ட விரோத இடிப்புகள், 329 பேர் கட்டாயமாக வெளியேற்றம் (இதில் 50% குழந்தைகள்)

இது வெறும் மோதல் அல்ல திட்டமிட்ட கொலைகள், அழித்தொழிப்பு, இடப்பெயர்வுக்கான நடவடிக்கை.

உலகம் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. #GazaGenocide
இஸ்ரேல் திரைப்பட விழாவை தமிழ்நாடு அரசு உடனடியாக தடை செய்ய முன்வர வேண்டும்!

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். அத்தியாவசிய பொருட்களை கூட தடை செய்து அமெரிக்கா ஆதரவுடன் மக்களை பட்டினி போட்டு கொள்ளும் மனித விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகையை கொடூரமான இஸ்ரேல் நாட்டின் திரைப்பட விழா தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இது இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இஸ்ரேல் திரைப்பட விழாவை தடை செய்ய முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது. தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM
தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் அடையாறு கரையோரம் கல்லாங்குத்து புறம்போக்கில் உள்ள காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகர் மக்களின் வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க வலியுறுத்தி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம், #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர்.