CPIM Tamilnadu
1.01K subscribers
11.6K photos
118 videos
214 files
4.09K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
1992ம் ஆண்டு வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை நிகழ்த்தப்பட்டபோதும், சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அவரது கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும், பொள்ளாச்சி சம்பவத்திலும் அதிமுக அரசு இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவுமேம் நடக்கவில்லை என்று சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைச் செய்தது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/MCJLFxI9uWw
வடகாடு கிராமத்தில் அனைத்து இளைஞர்களும் விளையாடும் வகையில் பொது மைதானத்தை தமிழ்நாடு அரசு உருவாக்குவதுதான் அங்கு நடைபெறும் சாதிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Pudukottai #Vadakadu #StopViolenceAgainstDalits More: https://youtu.be/NeMTijr7Yls
இப்படிப்பட்ட பாஜக அமைச்சர்களை வைத்துக் கொண்டு தேசப்பற்றுடன், கொடியை உயர்த்திப் பிடிப்பதால் என்ன பயன்?

கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் விஜய் ஷா பேசிய பேச்சுக்கு மேடையில் இருப்போரும் கை தட்டுகின்றனர் - ராஜ்தீப் சர்தேசாய் மூத்த பத்திரிகையாளர் #ColonelSofiyaQureshi #BJPMinister #VijayShah
பதிலடி ஓகே... பதில் எப்போது? - விகடன் தலையங்கம் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #AmitShah #BJPFailed More: https://shorturl.at/zoKTd
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு தொடுத்த அன்றைய அதிமுக அரசு!

குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடர்ந்து வழக்கு இப்போதும் தொடர்வது நியாயம் இல்லை. ஆகவே தோழர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும். தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
இந்தியாவின் தேசிய நலன்களை மோடி அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டதா? டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் குறித்த அறிக்கை பற்றி அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். #CPIM #Trump #ModiFailed
சமூக அமைதிக்கு ஆதரவாகவும், போரை ஆதரிக்க மறுத்த காரணத்திற்காகவும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள்;

இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் அய்சி கோஷ், தீப்சிதா தர் மீது தீவிர வலதுசாரி கும்பல்கள் படுபாதக சைபர் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்!

ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் துணையோடு சமூக வலைத்தள பொய்ப் பிரச்சார பீரங்கிகள் மூலம் வெறுப்பு அரசியலை எதிர்க்கும் குரலை அடக்க நினைக்கும் பிரிவினைவாத வெறுப்பு நிகழ்ச்சி நிரல் இங்கே வெற்றி பெறாது. #SFI #StopViolenceAgainstDalits #DalitLivesMatter #IndiaPakistanConflict
பேச்சாளர், எழுத்தாளர், கிளர்ச்சியாளர், ஆலோசகர், களப்பணியாளர் தலைவர்களை உருவாக்கிய தலைவர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாக விளங்கிய தோழர் கே.வரதராசன் அவர்களது வாழ்க்கை இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு மிகச்சிறந்த பாடமாக விளங்கும்.

தோழர் கே.வரதராசன் காட்டிய வழியில் அவரைப்போல அர்ப்பணிப்புடனும், இயக்கப் பணிகளில் செயலாக்கத்துடன் செயல்படுவதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவோம், மக்களுடன் நெருக்கமாக பயின்று வெகுஜன போராட்டங்களை வளர்த்தெடுப்போம்! #Comrade #CPIMLeaderRead More: https://bit.ly/3Lj2Drn
வட சென்னை கொடுங்கையூரில் புதிதாக அமைக்க உள்ள எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி #CPIM சார்பில் தர்ணா போராட்டம் ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழில் நகரில் உள்ள குப்பை கழிவுகள் கொட்டும் வளாகத்தை பார்வையிட்டார். உடன் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். #Kodungaiyur #IncineratorProject #StopKodungaiyurIncineratorProject
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் தடுத்து நிறுத்துவது குறித்த தமிழ்நாடு அரசின் மனு மீது, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, குடியரசுத் தலைவரிடம் தள்ளிவிடும் ஒன்றிய அரசின் முடிவுக்கு #CPIM கண்டனம்!

ஆளுநர்கள் ஆளும் கட்சியான பாஜகவின் கட்டளைப்படி செயல்படுகிறார்கள், எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசுகளின் செயல்பாட்டைத் தடுக்கிறார்கள். அவர்கள் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி கொள்கைகளை மீறுகிறார்கள்.

பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகளும் இந்நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும். மேலும் மாநில உரிமைகளை விலையாகக் கொடுத்து அதிகாரங்களை மையப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #Tamilnadu #ImposeDeadlines #Governors #ModiFailed #SupremeCourt #SaveConstitution #SaveFederalism
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கோழிக்கோடு மற்றும் திரிசூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார். இடது ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். #LDF #LDFGovt #PinarayiVijayan #KeralaLeads
சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய முன்னாள் கொரில்லா போராளி. ஜனாதிபதியாக, ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியவர். கடின உழைப்பாளியான அவர் எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். தோழர் ஜோஸ் பெப்பே முஜிகாவு மறைவுக்கு செவ்வணக்கம். #Uruguay #Comrade #Pepe #JoseMujica #Revolutionary #RedSalute
குடியரசுத் தலைவருக்கு, ஒன்றிய அரசாங்கத்திற்கு, ஆளுநர்களுக்கு, மாநிலங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்திருக்கிறது. அதன் மீதான விளக்கம் என்கிற முறையில்தான் உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் குறித்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாநில அரசாங்கங்கள் இயற்றும் சட்டங்களை ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால வரையறை குறிப்பிடவில்லை என்பதனாலேயே கால வரையறை குறிப்பிடக் கூடாது என்று சொல்வது நியாயமில்லை – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Tamilnadu #ImposeDeadlines #Governors #ModiFailed #SupremeCourt #SaveConstitution #SaveFederalism More: https://youtu.be/sFe6sqRWkKs
சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணை செய்யவும், கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையிட்டு வழக்கு தொடர்பாகவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்களுக்கு நீதி - குற்றவாளிகளை கைது செய்யவும் - போராடிய #AIDWA #SFI #DYFI உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது புனைந்துள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தி #CPIM சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். #CPIM #StopCasteArrogantKillings #PollachiCase #Flag
இந்தியா சீனாவுடனான தனது வர்த்தக உறவுகளை நவீனமயமாக்க வேண்டிய நேரம். #India #China #tradedeal More: https://shorturl.at/l83TS