CPIM Tamilnadu
1.01K subscribers
11.6K photos
118 videos
214 files
4.09K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நடைபெறுகிற போது காவல்துறையும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு இந்த வழக்கு சான்றாக இருக்கிறது – தோழர் அ.ராதிகா, மாநில பொதுச் செயலாளர் #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/tE0fcqb9icA
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை. நீதிமன்ற தீர்ப்புக்கு #CPIM வரவேற்பு. #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://shorturl.at/WqT2F
பொள்ளாச்சி பாலியல் கொடுமை; பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/o1gQIGEAAhE
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை; நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மனித சமூகத்தின் மாண்புகளுக்கு எதிரானது; இழிவானது. ஆகவே குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நீதி கிட்டும் போராட்டத்தில் துணை நிற்பதும் நாகரீக சமூகத்தின் கடமை.

பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கான உறுதியை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வது பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை தருவதாகும்.

சுய கௌரவம், குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்றெல்லாம் வன்முறைக்கு இலக்காகும் பெண்களை மௌனித்துப் போகச் செய்யும் போக்கை இப்பெண்கள் முறியடித்து இருக்கிறார்கள். அவர்களை சிபிஐ(எம்) மனதாரப் பாராட்டுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு மறுவாழ்வு அளித்திட வேண்டும்.

நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், மக்களைத் திரட்டி களத்தில் போராடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்திற்கும் சிபிஐ(எம்) பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்பதோடு நின்றுவிடாமல், இது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் தமிழ் சமூகமும் போக வேண்டும். அவமானப்பட வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, பெண்கள் அல்ல, குற்றம் செய்தவர்கள்தான் - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/1INM07weyhw
பெண் அடிமைத்தனத்தை புரிந்து கொள்ளவும் அதைக் களையவும் அறிவியல் பூர்வமான மார்சியப் பார்வை வேண்டும். இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதில் சாதியும் மதமும் ஊடுருவி நிற்கிறது. பெண்ணடிமைத் தனத்தின் வேர் வர்க்கத்தோடு இணைந்தது. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்! பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்! #StopRapeAgainstWomen
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?

சங்-பரிவாரத்தின் தேசியவாத வெறி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு முன் அமைதியாகிவிடுகிறது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு விலங்கு பூட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்.அப்போதும் எந்த எதிர்ப்பும் இல்லை.

ஒருதலைப்பட்சமாக நம் மீது வரிகள் விதிக்கப்பட்டன; இந்திய விவசாயத்தை காவுகொடுக்கும் செய்யும் ஒரு ரகசிய ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது டிரம்ப் வர்த்தகத் தடை மிரட்டலின் மூலமே மூலம் போரை நிறுத்தினேன் என்கிறார். எப்படி மார்தட்டினாலும், இந்த சரணாகதியை மறைக்க முடியாது - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #IndiaPakistanWar2025 #Trump #ModiFails
பாஜக ஆட்சிக்கு வந்த பின் இரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக்கட்டினார்கள். இரயில்வே திட்ட விபரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை சென்ற ஆண்டு பொது பட்ஜெட் முடியும் வரை வெளியிடப்படவில்லை. இதனை நாடாளுமன்றத்தில் நான் உள்பட பல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தோம்.

தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. பட்ஜெட் முடிந்தபின் தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் முடிந்த பின்னும் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பிங்க் புத்தகம் வெளியிடப்பட போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது.

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் வெளியானது. கடைசியாக நேற்றுதான் தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப் பட்டியல் ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தால் அதில் முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இல்லை. திட்ட மதிப்பீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது 25 -26க்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

ஏற்கனவே பல ரயில்வே திட்டங்களுக்கு, குறிப்பாக புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருப்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டி இருந்தேன். எவ்வளவு ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரம் வந்தால்தான் நம்மால் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களா அல்லது கூடுதலாக ஒதுக்கி இருக்கிறார்களா என்கிற விவரம் நமக்கு தெரிய வரும். அதை குறித்து விமர்சனங்களையும் முன்வைக்க முடியும்.

ஆனால் அந்த விவரங்கள் வழங்கப்படாமல் வெறும் திட்ட மதிப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்ல தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்ற ஒரு சுருக்க அறிக்கை பிங்க் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த விவரம் இப்பொழுது முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வேக்கு அல்லது ஒவ்வொரு ரயில்வேக்கும் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஏற்கனவே சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி- திருப்பெரும்புதூர் இருங்காட்டு கோட்டை புதிய பாதை திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏற்கனவே சர்வே முடித்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்பாடி - விழுப்புரம்; ஈரோடு- கரூர் - சேலம்; கரூர் - திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு இரண்டு கோடியும் 81 லட்சமும் 2 கோடியுமாக முறையே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இதைப் போல மற்ற புதிய பாதை திட்டங்களான அத்திப்பட்டு - புத்தூர்; திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; ஈரோடு- பழனி; மொரப்பூர் - தர்மபுரி ஆகிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் இல்லாததால் நம்மால் அதன் உண்மை நிலையை அறிய முடியாத வகையில் மறைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அகல பாதை திட்டம் இரட்டை பாதை திட்டம் புதிய பாதை திட்டம் ஆகியவற்றுக்கு இந்த தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியலிலும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் இல்லாமல் தமிழக மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #IndianRailway #PinkBook #MinistryofRailways #BJPFailed #BJPBetrayedTN
செய்தி கொடுப்பது மட்டும்தானே உங்களுக்கு வேலை? போரை வைத்து பரபரப்பு தேடுவதை நிறுத்துங்கள்!

வட இந்திய செய்தி சேனல்கள் எல்லாம் கோமாளிகள் ஆகிவிட்டன. ஆர்ப்பாட்டமான காட்சிகள், சத்தம், அலறுதல், கத்துவது என கொடுமை செய்கிறார்கள். செய்தி கொடுப்பது மட்டும்தானே உங்களுக்கு வேலை?

போரை வைத்து பரபரப்பு தேடுவதை நிறுத்துங்கள். ஏற்கனவே மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர்.

உண்மை செய்திகளுக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செய்தி என்கிற பெயரில் தரப்படும் இந்த குப்பைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - சோனாஷி சின்ஹா திரைக்கலைஞர் #IndianNavyAction #SonakshiSinha
துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள் - டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Trump #BJPFailed More: https://shorturl.at/EbXxn
கர்னல் சோபியா குரேஷி குறித்து, பாஜக அமைச்சர் பேசிய கண்டனத்திற்குரிய கருத்து; ம.பி. உயர்நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம்!

பொது வாழ்க்கையில், மதச்சார்பு விஷக் கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்றவர்கள், நம் அரசியலமைப்பின் விழுமியமான மதச்சார்பின்மை உள்ளிட்ட அம்சங்களை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் கடமை கொண்டவர்கள் - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #IndianArmy #SofiyaQureshi #KunwarVijayShah #HateSpeech
1992ம் ஆண்டு வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை நிகழ்த்தப்பட்டபோதும், சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அவரது கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும், பொள்ளாச்சி சம்பவத்திலும் அதிமுக அரசு இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவுமேம் நடக்கவில்லை என்று சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைச் செய்தது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/MCJLFxI9uWw
வடகாடு கிராமத்தில் அனைத்து இளைஞர்களும் விளையாடும் வகையில் பொது மைதானத்தை தமிழ்நாடு அரசு உருவாக்குவதுதான் அங்கு நடைபெறும் சாதிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Pudukottai #Vadakadu #StopViolenceAgainstDalits More: https://youtu.be/NeMTijr7Yls
இப்படிப்பட்ட பாஜக அமைச்சர்களை வைத்துக் கொண்டு தேசப்பற்றுடன், கொடியை உயர்த்திப் பிடிப்பதால் என்ன பயன்?

கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் விஜய் ஷா பேசிய பேச்சுக்கு மேடையில் இருப்போரும் கை தட்டுகின்றனர் - ராஜ்தீப் சர்தேசாய் மூத்த பத்திரிகையாளர் #ColonelSofiyaQureshi #BJPMinister #VijayShah
பதிலடி ஓகே... பதில் எப்போது? - விகடன் தலையங்கம் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #AmitShah #BJPFailed More: https://shorturl.at/zoKTd
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு தொடுத்த அன்றைய அதிமுக அரசு!

குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடர்ந்து வழக்கு இப்போதும் தொடர்வது நியாயம் இல்லை. ஆகவே தோழர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும். தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
இந்தியாவின் தேசிய நலன்களை மோடி அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டதா? டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் குறித்த அறிக்கை பற்றி அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். #CPIM #Trump #ModiFailed