CPIM Tamilnadu
1.01K subscribers
11.6K photos
118 videos
214 files
4.09K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பொய் சொல்வது யார்? மோடியா? டிரம்பா?

அமெரிக்க ஜனாதிபதியால் கூறப்பட்டது போல், மூன்றாவது தரப்பான அமெரிக்கா நடுவராக இருந்து போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தது என்பது உண்மையா? யாரோ ஒருவர் பொய் சொல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanWar2025 #Trump
48 மணி நேரம் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார்? பேசவே இல்லை என்று பிரதமர் சொல்கிறார்? பொய் சொல்வது யார்?. இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Trump #Modi More: https://youtu.be/17XGZQ6DpPg
‘நவ-பாசிசம்’ என்பதில் புதிதாக இருப்பது என்ன? - கட்டுரையாளர் தோழர் சுதீப் தத்தா #ModiFails More: https://shorturl.at/XvAyY
பயங்கரவாத தாக்குதல், எல்லை பதட்டம், சண்டை நிறுத்தம் ஆகியவற்றை விவாதிக்க - பிரதமர் பங்கேற்புடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் நடத்துக #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடிதம் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Modi More: https://bit.ly/44F0m7n
‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் பிறந்த தினம் இன்று... #Comrade #NNanmaran #CPIMLeader
ஜனநாயகம் ஒரு வழிப் பாதையல்ல; பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தொலைக்காட்சியில் அல்ல…

பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளும் கட்டுக்கோப்பான விவாதத்திற்கு மாற்றாக, பிரதமருடைய உரை அமைந்திடாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் எப்போதும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது.

பிரதமரின் அலங்காரமான தந்திர வாதங்களில், எல்லை தாண்டிய வெடிகுண்டு/ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைப் பற்றியோ, அவர்களது குடும்பங்களைப் பற்றியோ குறிப்பிடுவதற்குக் கூட நேரம் ஒதுக்கவில்லை.

காஷ்மீர் மக்களின் துணிச்சல் பற்றியும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தன்னலமற்ற அவர்களுடைய பங்கு அல்லது தாக்குதலுக்கு அவர்கள் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்திய கண்டனக் குரலைப் பற்றியோ பிரதமர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.

பிரதமர் தனது சொற்பொழிவில், வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தவறிவிட்டார். அரசாங்கத்தின் கருத்தை பேசியதற்காக கேலி செய்யப்பட்ட வெளியுறவுச் செயலாளரைக் கூடப் பாதுகாக்கத் தவறிவிட்டார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு வேண்டும் அதில் பிரதமர் பங்கேற்க வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #IndiaPakistanConflict #ceasefire #ModiFails
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கின் நீதிக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நடைபெறுகிற போது காவல்துறையும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு இந்த வழக்கு சான்றாக இருக்கிறது – தோழர் அ.ராதிகா, மாநில பொதுச் செயலாளர் #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/tE0fcqb9icA
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை. நீதிமன்ற தீர்ப்புக்கு #CPIM வரவேற்பு. #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://shorturl.at/WqT2F
பொள்ளாச்சி பாலியல் கொடுமை; பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/o1gQIGEAAhE
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை; நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மனித சமூகத்தின் மாண்புகளுக்கு எதிரானது; இழிவானது. ஆகவே குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நீதி கிட்டும் போராட்டத்தில் துணை நிற்பதும் நாகரீக சமூகத்தின் கடமை.

பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கான உறுதியை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வது பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை தருவதாகும்.

சுய கௌரவம், குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்றெல்லாம் வன்முறைக்கு இலக்காகும் பெண்களை மௌனித்துப் போகச் செய்யும் போக்கை இப்பெண்கள் முறியடித்து இருக்கிறார்கள். அவர்களை சிபிஐ(எம்) மனதாரப் பாராட்டுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு மறுவாழ்வு அளித்திட வேண்டும்.

நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், மக்களைத் திரட்டி களத்தில் போராடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்திற்கும் சிபிஐ(எம்) பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்பதோடு நின்றுவிடாமல், இது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் தமிழ் சமூகமும் போக வேண்டும். அவமானப்பட வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, பெண்கள் அல்ல, குற்றம் செய்தவர்கள்தான் - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/1INM07weyhw
பெண் அடிமைத்தனத்தை புரிந்து கொள்ளவும் அதைக் களையவும் அறிவியல் பூர்வமான மார்சியப் பார்வை வேண்டும். இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதில் சாதியும் மதமும் ஊடுருவி நிற்கிறது. பெண்ணடிமைத் தனத்தின் வேர் வர்க்கத்தோடு இணைந்தது. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்! பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்! #StopRapeAgainstWomen
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?

சங்-பரிவாரத்தின் தேசியவாத வெறி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு முன் அமைதியாகிவிடுகிறது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு விலங்கு பூட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்.அப்போதும் எந்த எதிர்ப்பும் இல்லை.

ஒருதலைப்பட்சமாக நம் மீது வரிகள் விதிக்கப்பட்டன; இந்திய விவசாயத்தை காவுகொடுக்கும் செய்யும் ஒரு ரகசிய ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது டிரம்ப் வர்த்தகத் தடை மிரட்டலின் மூலமே மூலம் போரை நிறுத்தினேன் என்கிறார். எப்படி மார்தட்டினாலும், இந்த சரணாகதியை மறைக்க முடியாது - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #IndiaPakistanWar2025 #Trump #ModiFails