CPIM Tamilnadu
1.01K subscribers
11.5K photos
116 videos
214 files
4.03K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
ஆபரேஷன் சிந்தூர்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் #CPIM கருத்து. - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் #CPIM மாநிலங்களவைத் தலைவர் தோழர் ஜான் பிரிட்டாஸ் #OperationSindoor More: https://shorturl.at/Mp8ec
மே 9; செஞ்சேனை பாசிசத்தை வீழ்த்திய 80வது ஆண்டு தினம்!

2ம் உலகப் போரில் நாஜி பாசிசத்தை முறியடித்து சோவியத் செஞ்சேனை வெற்றி கண்ட நாள்.

1945ல் ஹிட்லரையும், நாஜி பாசிசத்தையும் சோவியத் யூனியனின் செஞ்சேனை வெற்றி கண்டு, பெர்லினில் செங்கொடியை உயர்த்தி உலகுக்கு பறைசாற்றிய நாள். #CPIM #WorldWarII #WWII #SovietUnion #VictoryOfSovietUnion #VictoryOfRedFlag #FallOfHitler #FallOfFasicm #FallOfNazism #Socialism4People #SocialismIsFuture
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!

ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
என்ன சொல்லப் போகிறது சரணாகதி மோடி அரசு? #ModiFails #TrumpRecession More: https://shorturl.at/iT8Da
உலகைக் காத்த மாவீரன் ஸ்டாலின்; மனிதகுலம் காத்த சோவியத் செஞ்சேனை
பாசிசத்தை வீழ்த்திய கம்யூனிசம்: 80 ஆண்டுகள்
பாசிசத்தை வீழ்த்தியதன் 80ஆம் ஆண்டு விழாவையொட்டி, ஹிட்லரின் நாஜி படையை நொறுக்கி, வீழ்த்தி, இப்பூவுலகை பாசிசத்தின் பிடியில் வீழாமல் பாதுகாத்த சோவியத் ஒன்றியம், செஞ்சேனை மற்றும் தலைமை தளபதி ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் மகத்தான பங்களிப்பை இத்தொகுப்பு விவரிக்கிறது. #WorldWarII #WWII #SovietUnion #VictoryOfSovietUnion #VictoryOfRedFlag More : https://shorturl.at/lokOm
ஊடக சுதந்திரம் மீதான இந்த தாக்குதலை கண்டிக்கிறோம். - சி.பி.ஐ(எம்)

"ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய போலிச் செய்திகளை தொடர்ந்து பரப்பும் தொலைக்காட்சி அலைவரிசைகள் எச்சரிக்கை கூட இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் "தி வயர்" போன்ற நம்பகமான செய்தி இணையதளங்கள் குறி வைக்கப்படுகின்றன என்பது வெட்கக்கேடான விஷயமாகும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) #MediaFreedom #JournalistThreatened #India
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜூன் 11-20 தமிழகம் முழுவதும் #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! More: https://shorturl.at/xOP1P
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!

ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று சண்டித்தனம் செய்த பாஜகவிற்கு மூக்கு உடைப்பு. இப்போதாவது தமிழ்நாட்டிற்குக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை உடனடியாக ஒன்றிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #NEP #SupremeCourt
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களை நீக்கு!

ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டத்திற்கும் ஆதரவளிப்போம்! வெற்றி பெறச் செய்வோம்! #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
கொரோனா கால மரணங்களின் எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளி!

கொரோனா கால மரணங்களை மிகவும் குறைத்து கணக்கிட்டிருப்பதை கடைசியாக அரசாங்கத் தரவுகளே அம்பலப்படுத்தியுள்ளன. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக கிட்டத்தட்ட 20 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை மூடிமறைப்பதில் குஜராத் மிகப்பெரிய குற்றவாளியாக உள்ளது - தோழர் ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவை உறுப்பினர், #CPIM #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

“தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிற்சங்க சட்டங்களை அடித்து நொறுக்கி, மோடி அரசானது தற்போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக, தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. இச்சட்டங்கள் இன்னும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #FactoriesAct #WithdrawFactoriesAct #DMKGovt #LabourWelfare
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்களை #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உடன் #TNUEF மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவர் த.செல்லக்கன்னு, #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.