CPIM Tamilnadu
1.01K subscribers
11.5K photos
116 videos
214 files
4.03K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
தஞ்சை தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு நாளில் தியாகி இரணியன் நகரிலும், இரணியன் ஸ்தூபியிலும் கொடியேற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. #Communist #Martyrs
மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 207வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று காரல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்டது. மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன்,கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், ரா.சுதிர், தோ.வில்சன், க.சரவணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution
தேசிய கல்விக் கொள்கை; வணிகமயமாக்குவது, மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, காவிமயமாக்குவது!

வேதகாலம், கற்காலம், பொற்காலம் என எல்லா காலங்களும் இருந்தது. ஒரு சிறு பகுதிதான் கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களின் நிழலில் கூட ஒதுங்க முடியாது.

கார்ப்பரேட்மயமும் காவிமயமும் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய கல்விக் கொள்கை குருகுலக் கல்வியை ஆதரிக்கிறது. இக்கல்விக் கொள்கையில் ஒன்று வணிகமயமாக்குவது, 2வது மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, மூன்றாவது காவிமயமாக்குவது.

அறிவியல் உண்மைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி புராணங்களை, மூட நம்பிக்கைகளை கல்வியில் புகுத்துகிறார்கள் - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Education
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு கொள்ளவில்லை, சங்பரிவாரும் ஆர்.எஸ்.எஸ்யும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்று எழுத தினமலருக்கு தைரியம் இருக்கிறதா? எதையாவது எழுதி அதில் அற்பத்தனமான சந்தோஷத்தை தேட வேண்டியது - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Dinamalar More: https://youtu.be/iPKDHVZ3T_g
தருமபுரி தென்கரைக்கோட்டை அருகே 17 வயது தலித் சிறுவனை கட்டி வைத்து கொடூர தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் சிறுவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் பாப்பிரெட்டிப்பட்டியில் #CPIM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்!
தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவின் சாதனைகள்! #MNREGA #KeralaModel #EmploymentGuarantee #LeftAlternative #LDFGovt
புதுக்கோட்டை வடகாட்டில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டு, தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் வெளிவந்துள்ளன. வழிபாட்டு உரிமை தடைசெய்யப்படுவதை ஒட்டித்தான், ஒரு தீண்டாமைக் கொடுமையின் வெளிப்பாடாக இந்த வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை என்கிற பெயரால் உண்மையை மூடி மறைத்து, இருதரப்பினரிடையே பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் காவல்துறை செய்திருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது – தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் #TNUEF #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits More: https://youtu.be/tFhyuvQ_hxU
நீட் தேர்வு இனியும் நீட்டிக்கக் கூடாது. #CPIM #Maduranthakam #Melmaruvathur #NEET #student #NEET2025 More: https://shorturl.at/UHV24