CPIM Tamilnadu
1.01K subscribers
11.5K photos
116 videos
214 files
4.02K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
செல்வங்கள் எப்படி உருவானது என்பதை உபரி மதிப்பின் தத்துவத்தின் மூலமாக தோழர் கார்ல் மார்க்ஸ் புதிய கண்டுபிடிப்பாக விளக்கியிருந்தார். இது யாராலும் மறுக்க முடியாது. இதை உணர்ந்திருக்கிற தொழிலாளிகள், பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்கிற முறையில் அது களத்திற்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே அது புரட்சிகர இயக்கங்களை உருவாக்கிக்கிறது. அதனால் மார்க்சியம் நிலைத்து நிற்கிறது - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution More: https://youtu.be/GuhDKD4ktho
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?

இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. இரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #IndianRailways #StopHindiImposition
ஒரு சமூகம் முழுமையுமோ, ஒரு தேசமோ அல்லது ஒட்டு மொத்தமான அனைத்து சமூகங்களோ பூமியின் உரிமையாளர்கள் அல்ல. அவர்கள் அதன் பயனாளர்கள், கூட்டாக கைவசம் கொண்டிருப்போர், மேம்பட்ட நிலையில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைக்கும் கடப்பாடு உடையோர் - புரட்சியாளர் மாமேதை கார்ல் மார்க்ஸ் 207வது பிறந்த தினம் இன்று! (5 மே 1818 - 14 மார்ச் 1883) #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution
மக்கள் தொகை கணக்கெடுப்பு கால அட்டவணையை உடனே வெளியிடுக!

சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு, பொது மக்கள் தொகை கணக் கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு நேர்மறையான முடிவு. நாம் இதை நீண்ட காலமாகக் கோரி வருகிறோம்.

சாதிவாரி தரவுகள் மற்றும் பிற விவரங்களை எவ்வாறு சேகரிக்கப் போகிறார்கள் என்பதற்கான வழிமுறைகள் இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பொது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அட்டவணையையும் அரசாங்கம் உடனடியாக அறிவித்திட வேண்டும் - #CPIM மத்தியக்குழு #CasteCensus #PopulationCensus More: https://shorturl.at/HAOCa
போரை தூண்டும் வகையிலும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலகம் உருவாக்கும் வகையிலும் பேசியுள்ள மதுரை ஆதினமாக தற்போது பொறுப்பேற்றுள்ள ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல் ஆணையரிடம் #DYFI மதுரை மாநகர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும்’இந்து ராஷ்டிரம்’; அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான வக்பு திருத்தச் சட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 உள்ளிட்ட பிரிவுகளுக்கு முரணாகவும், அரசியலமைப்பின் அடிப்படைகளை தகர்க்கும், இந்தியாவின் மாண்பை சிதைக்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. சங்பரிவாரத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பேராபத்து எழுந்துள்ளது.

பாசிச சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்ற ‘இந்து ராஷ்டிரம்’என்று இந்துக்களை சங்பரிவார கூட்டம் ஏமாற்றுகிறது. இந்து மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் முறையிலேயே ’இந்து ராஷ்டிரம்’ கொள்கை உள்ளது.

ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட்-வகுப்புவாத அரசாக உள்ளது. வக்பு நிலங்களை கார்ப்ரேட்டுகளுக்கு கொடுக்கவே இத்திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது - தோழர் என்.குணசேகரன் மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ModiFails
மக்களின் மத நம்பிக்கையை தனது அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது, ஏமாற்று வேலை!

மோடி கடந்த ஆண்டு தன்னை கடவுள் அனுப்பியதாக கூறினார். டிரம்ப் இப்போது போப் வேடம் தரித்துள்ளார். அரசின் தலைவரும், மதத்தின் தலைவரும் தானே என்பதை வெட்கம் இல்லாமல் அறிவித்துக் கொள்கின்றனர் - தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails
தமிழ்நாட்டுக்கென தனி கல்விக் கொள்கை என்னாச்சு?

தேசிய கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழ்நாட்டிற்கு என்று தனித்த கல்விக் கொள்கையை அறிவிப்போம் என்று முதல்வர் சொன்னார். அந்த கல்விக் கொள்கையை அறிவிக்க வேண்டும் - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Education
சமூக, பொருளாதார, அரசியல் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை கண்டறிந்தவன், சுரண்டலைக் கண்டறிந்தவன், முதலாளித்துவத்தைக் கண்டறிந்தவன். எல்லாவற்றிற்கும் மேலாக சமத்துவத்தை, முழுமை பெற்ற மனிதர்கள் வாழும் கம்யூனிச சமூகத்தைப் படைக்க விரும்பி கம்யூனிசத்தை வரையறுத்தவன். வாழ்க மார்க்ஸ்! வளர்க மார்க்சியம்! #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution More: https://youtube.com/shorts/o462138ebAg
விழிஞ்சம் துறைமுக திட்டத்தில் பார்ட்னர் என்று சொல்வதை உங்களைப் போன்று ஆட்சியில் பார்ட்னர், கட்சியையே அதானிக்காக நடத்தும் நீங்கள் இப்படிப் பேசக் கூடாது பிரதமரே. இது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை. - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Kerala #VizhinjamPort #LDFGovt More: https://youtu.be/ZVtViOjJ5OA
தஞ்சை தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு நாளில் தியாகி இரணியன் நகரிலும், இரணியன் ஸ்தூபியிலும் கொடியேற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. #Communist #Martyrs
மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 207வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று காரல் மார்க்ஸ் அவர்களின் உருவச் சிலை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்டது. மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ப.செல்வசிங், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன்,கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, பா.ஜான்சிராணி, எம்.ராமகிருஷ்ணன், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், ரா.சுதிர், தோ.வில்சன், க.சரவணன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #KarlMarx #Marxism #Communism #Socialism #Revolution