CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
3.99K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
அரசு ஆவணங்களில் இருந்து காலனி சொல் நீக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்கள் பறையப்பட்டி, பள்ளப்பட்டி, சக்கிலிப்பட்டி, நாய்க்கன்கொட்டாய் இது போன்ற சாதியின் பெயரால் ஊர்கள், கிராமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தலைவர்களின் பெயரால் நகரங்கள் உருவாக்கப்பட்டாலும் இதுபோன்ற சாதியின் பெயரால் உருவாக்கப்பட்ட பழமையான கிராமங்கள் தொடர்ந்து சாதியின் பெயரிலேயே நீடித்து கொண்டிருப்பது மாற்றப்பட வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #StopDomesticViolence More: https://youtu.be/gyxfKzOZcbM
தமிழ்நாட்டின் முதல் அமைச்சரின் 9 அறிவிப்பு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மட்டும்தான், இதர தரப்பினர்களுக்கானது கிடையாது. இதில் விடுபட்ட சத்துணவு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு 2000 ரூபாய்தான் ஓய்வு ஊதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது, ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் அவர்களின் பல கோரிக்கைகள் நிலுவையில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில், அரசுக் கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்களுக்கு குறிப்பாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது என்பது மாணவர்களுடைய கல்வித்தரத்தை பாதிக்கும். முன்னேறிய மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக ஆசிரியர் பணி நியமனம் என்பது முக்கியம் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TNAssembly #GovtEmployees #TNGovt More: https://youtu.be/vEloTR8wLuI
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என்று கூறி நியாயமான கோரிக்கையை நிராகரித்து வந்த ஒன்றிய அரசு இன்று நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் தொடர் வற்புறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி இது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CasteCensus #PopulationCensus
20 ஆண்டுகள் நடைபெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியற்கு எதிரான போரில் வெற்றி பெற்றதையும், அமைதியான வாழ்வைக் கொண்டாடும் விதமாக இன்று ஏப். 30 (வியட்நாம் அமெரிக்க போர் 1 நவ. 1955 – 30 ஏப். 1975) வியட்நாம் ஹோசிமின் நகரில் கோலாகல கொண்டாட்டம். #socialist #vietnam #politics #antiimperialism #vietnamwar More: https://youtube.com/shorts/vFod4huSi3Q
8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம் சிந்திய, உயிரை இழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம்! #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
139வது மே தின செங்கொடியை #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
139வது மே தினத்தை முன்னிட்டு #CPIM திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர். இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா பிறந்த தினம்! (1 மே 1913 - 19 மே1985) #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
#CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்றத்திற்கு பிறகு மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture More: https://youtu.be/m7NJ9RZumqY
139 வது மே தினத்தை முன்னிட்டு #CPIM அம்பத்தூர் பகுதிக்குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே சாமுவேல்ராஜ் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர். #MayDay #WorkersDay #LabourDay #MayDay2025 #WorkersRights #SocialismIsFuture