CPIM Tamilnadu
1K subscribers
11.4K photos
115 videos
214 files
3.98K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பஹல்காம் தாக்குதல்; பிரச்சனை எல்லையில் இல்லை, தில்லியில்தான் உள்ளது!

கேரளாவின் பாஜக தலைவர் சந்திரசேகர் பஹல்காமில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் யாரை பொறுப்பாக்குவது என்பதுதான் கேள்வி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபோது பயன்படுத்திய தர்க்கத்தை மோடி தற்போது ஏற்பாரா? - டாக்டர் தாமஸ் ஐசக் மத்தியக்குழு உறுப்பினர், #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
எர்ணாகுளம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நா.ராமச்சந்திரனின் குடும்பத்தை #CPIM மத்தியக்குழு உறுப்பினரும், #AIDWA தலைவருமான தோழர் பி.கே.ஸ்ரீமதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீ ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தியும், மனைவி ஷீலா டீச்சரும் இக்கொடூரமான தாக்குதலின் விபரங்களையும், உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த உதவி மற்றும் ஆதரவையும் விளக்கினார்.
"குறிப்பாக எங்கள் ஓட்டுநர்கள் முசாபிர் மற்றும் சமீர், என் சகோதரர்களைப் போல எங்களையும் என்னுடைய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர்" என ஆர்த்தி குறிப்பிட்டுச் சொன்னார். #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
பயங்கரவாதத்தையும் ஆர்எஸ்எஸ்சையும் எதிர்த்துப் போராடுவோம்!

“ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, மக்களின் மீட்பராக இருந்த ஒரு முஸ்லிம் இளைஞரை பயங்கரவாதிகள் கொன்றனர். மதத்தின் பெயரால் இந்தத் தாக்குதல் நடக்கவில்லை. மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதல்களை எதிர்கொள்வதில் நாடு ஒற்றுமையாக நிற்க வேண்டும்”.

“மதத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸை நாம் எதிர்க்க வேண்டும்” - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
ஆவணங்களின் அடிப்படையில்தான் வக்பு சொத்துக்கள் இருக்க வேண்டும் என்று சொன்னால் எந்த சொத்தும் இருக்காது. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால்தான் இந்தியாவில் சர்வே என்ற நடைமுறையே வந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னாள் இருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு ஆவணங்கள் எப்படி இருக்க முடியும்?. இது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கை - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack More: https://youtube.com/shorts/b5SPEcx-IPk Full video: https://youtu.be/f_7FD9XJE3I
இந்திமயமாகும் ரயில்வே; பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகள் இல்லை!

“தற்போது ரயில்வேயில் இந்தி வார்த்தைகள் மூன்று மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம், இந்தி) எழுதப்படுகின்றன. ஆனால், அந்த மூன்று மொழிகளிலும் ஒரே இந்தி வார்த்தையை எழுதி, மாநில மொழி புறக்கணிக்கப்படுகிறது. இது 2023ல் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு எதிரானது.

அந்த வழிகாட்டுதலில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியும் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது. இது தொடர்பாக எந்த அதிகாரி உத்தரவு வழங்கினார் என்பதையும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்”.

“கவாச் பாதுகாப்பு இயந்திரம் அனைத்து ரயில்களிலும் பொருத்த வேண்டும். தற்போது வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இல்லாமல், தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவது கவலையளிக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே எங்களுடைய வலியுறுத்தல்” - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SouthernRailway #HindiImposition #Parliament #MaduraiRegion #Advisorymeet
வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்ததற்கு பாஜகவுக்கு அரசியல் நோக்கம் உள்ளது. - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #BJPFails #ModiFailed More: https://youtu.be/AzecYekwG8s
கொடிக் கம்பங்களை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து #CPIM தொடர்ந்த வழக்கு: கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வருகிறது! #MadrasHighCourt https://shorturl.at/dhXSu
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு #CPIM தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குழு சார்பில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
பஹல்காம் பாதுகாப்பில் கோட்டை விட்ட மோடி அரசு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மதவெறி பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம் - சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
போராடி, சிறை சென்று, சித்திரவதைகளை அனுபவித்து படிப்படியாக பெற்ற அனைத்து தொழிலாளர்கள் உரிமைகளையும் ஒன்றிய அரசு காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மே 20 நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு தொழிற்சங்களின் கூட்டமைப்பு விடுத்திருக்கும் அறைகூவலை வெற்றி பெறச் செய்வோம் - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #LabourRights #WorkersRights #ModiFailed #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtu.be/cmbrevGyS00 Full video: https://youtu.be/AzecYekwG8s
”நான் ஏன் பாகிஸ்தானைப் பற்றி பேச வேண்டும். நாங்கள் இந்தியர்கள். கொல்லப்பட்ட இந்தியர்களை பற்றி பேசுவோம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இன்று கடையடைப்பு செய்துள்ளோம்” - ரிப்பப்ளிக் நிரூபருக்கு காஷ்மீரி இந்தியர் கொடுத்த பதிலடி #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack More: https://youtube.com/shorts/l0ADI9JWgM4
நோயாளிகளை நாடு கடத்ததாதீர்கள். உயிர் காக்கும் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் வந்தவர்களையும் நாடு கடத்துவது நாகரீக சமூகத்திற்கு உகந்தல்ல - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
தில்லியிலுள்ள மதராசி கேம்ப் ஜாங்புரா பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 400 குடும்பங்களுக்கு அதே இடத்தில் நியாயமான மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் மற்றும் தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோருக்கு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., கடிதம் எழுதியுள்ளார். #CPIM #Delhi
வக்பு வாரியத்தில் இதுவரை இஸ்லாமியர் மட்டும்தான் உறுப்பினராக இருந்தார்கள். இப்பொழுது இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்களும் உறுப்பினாராக இருக்கலாம் என வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது ஏன்? - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ProtectWakfProperties More; https://youtu.be/USg7OykZdOY
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மோசமான பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றனர்! #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
முதலாளித்துவம் தவிர்க்க முடியாத நெருக்கடியைச் சந்திக்கும்போதோ அல்லது சந்திக்க நேரும் என்ற மரண பயம் அவர்களை கீழ்ப்படுத்தும் போதுதான் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி நகர்கின்றனர் - உலகின் முதல் பாசிச ஆட்சியை எதிர்த்து போராடிய தோழர் அண்டோனியோ கிராம்சி அவர்களின் நினைவு தினம் இன்று. #AntonioGramsci #FightAgainstFascism #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #motivationalquotes #SocialismIsAlternative #SocialismIsFuture
Media is too big
VIEW IN TELEGRAM
பத்திரம், ஆதாரம் காட்டினால்தான் வக்பு வாரிய சொத்து, இல்லையென்றால் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றால் வக்பு வாரியத்திற்கு சொந்தாமான நிலங்களை, சொத்துகளை பறிமுதல் செய்வதற்குத்தான் இந்த சட்ட திருத்தம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன். மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ProtectWakfProperties More; https://youtu.be/USg7OykZdOY