CPIM Tamilnadu
1K subscribers
11.3K photos
111 videos
214 files
3.95K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
#CPIM பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சென்னைக்கு வந்த தோழர் எம்.ஏ.பேபி அவர்கள், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் திமுக பொருளாளள் திரு.டி.ஆர்.பாலு.எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர். More: https://youtu.be/rIUIWNsBSA8
விஜய் மல்லையாவின் ரூ.14,131 கோடி மதிப்பிலான முழுமையான சொத்துக்கள் எங்கே? ஏப்பம் விட்டதா மோடி அரசு? #NDAGovt #VijayMallaya #BJPGovt #ED #BJPLies
#CPIM 24வது அகில இந்திய மாநாடு குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா.
23.04.2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு கேரள சமாஜம், கீழ்பாக்கம், சென்னை.
மேல்பாதி திரவுபதி அம்மன் வழிபாடு: நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சி.பி.ஐ(எம்) வேண்டுகோள் ! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM More: https://bit.ly/4lWwEkv
வக்பு திருத்தச் சட்டத்தின்படி கேரளத்தில் வாரியம் அமைக்கப்பட்டதா? இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்! - தோழர் வி.அப்துர் ரஹிமான், கேரள சிறுபான்மையினர் நல மற்றும் வக்பு அமைச்சர் #LDFGovt #WaqfActAmendmentBill #MuslimPropertyRights More: https://shorturl.at/KaAjH
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்!

சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...!

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ
நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ! #CPIM #Bharathidasan
மீண்டுமொருமுறை நிரம்பி வழிந்த கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானம்!

#CITU, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மேற்குவங்க மாநிலக்குழுக்கள் கூட்டாக நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான முகம்மது சலீம், சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். #cpim #WestBengal #left
CPIM Tamilnadu
Photo
தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் விடுத்துள்ள துணை வேந்தர்கள் மாநாடு அழைப்பினை துணைவேந்தர்கள் புறக்கணிக்க #CPIM வேண்டுகோள்!

ஆர்எஸ்எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இப்பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, இப்போது ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும்.

ஆர்.என்.ரவியின் இச்சட்டவிரோத துணைவேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை #CPIM வன்மையாகக் கண்டிப்பதுடன் இம்மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். துணை வேந்தர்கள் இம்மாநாட்டை புறக்கணிக்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தவும் வேண்டும். #RNRavi #GetOutRavi
#CPIM 24வது அகில இந்திய மாநாடு குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா 23.04.2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு கேரள சமாஜம், கீழ்பாக்கம், சென்னை.
CPIM Tamilnadu
Photo
வக்பு சட்டத் திருத்தத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு பாராட்டத்தக்கது; பாஜகவின் வகுப்புவாதத்துக்கு பின்னடைவு!

பாஜக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. வக்பு சட்டத் திருத்தம் அரசியலமைப்பிற்கு எவ்வளவு விரோதமானது மற்றும் ஜனநாயக விரோதமானது என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய போது, ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. பிற மதங்களைச் சேர்ந்தவர்களை, பிற மதங்களின் அறக்கட்டளைகளில் சேர்க்க முடியுமா என்று நீதிமன்றமே கேட்டது.

சிபிஐ(எம்) 24வது அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டியது போலவே, பாஜக நவ-பாசிசப் போக்குகளைக் காட்டுகிறது. அவர்கள் மக்களைப் பிரிக்க வழிகளைத் தேடுகிறார்கள். இந்தியாவின் உன்னத நோக்கங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அரசாங்கத்தால் ஒன்றிய அரசு ஆளப்படுகிறது. இந்தியா வேறு எந்த முஸ்லிம் நாட்டையும் விட அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு.

பாஜக நெருப்புடன் விளையாடுகிறது. இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் வக்பு சட்டத் திருத்தம். இதற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் உள்ளது. உச்சநீதிமன்றம் இந்தளவுக்கு தலையிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

மோடியும் அமித்ஷாவும் சுயபரிசோதனை செய்வார்கள் அல்லது தங்கள் தவறுகளை சரி செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிபிஐ(எம்) அவர்களிடம் கோருகிறது, காலம் கடந்த இந்த வேளையிலேனும், தவறுகளை சரிசெய்ய வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim
CPIM Tamilnadu
Photo
மின் கட்டணத்தை தனியாரே தீர்மானிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்தாகும்; தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்!

25 ஆண்டுகளுக்கும் மேலாக அனல் மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களை தனியாருக்கு சதுர அடி 1 ரூபாய் அளவுக்கு வாடகைக்கு கொடுக்கிறது. இதை குறுக்கு வழியில் செயல்படுத்த நுகர்வோர் சட்டத்தை திருத்தி, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் வாரியங்களின் தனியார்மயத்தை திணிக்கிறது.

தொழிலாளர்களின் அயராத உழைப்பால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் லாஸ் 13.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு, வசூல் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம், விநியோகப் பிரிவை தனியார்மயப்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்களை தனியார் நிறுவனங்கள் பொருத்தி பராமரிக்கும். மின் கட்டணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கும். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மாலை 6 முதல் இரவு 9 வரை அதிகபட்ச கட்டணம் வசூல் செய்வது போல் மக்களிடமும் வசூலிப்பார்கள்.

எனவே, மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டங்கள் பலவற்றை மாநில அரசு எதிர்கிறது. அதேபோன்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் - தோழர் எஸ்.ராஜேந்திரன் பொதுச் செயலாளர், மின் ஊழியர் மத்திய அமைப்பு #ElectricityBill #Tamilnadu #மின்கட்டணம் #PowerTariff #BJPFail
திருத்தந்தை பிரான்சிஸ் மனித அன்பு மற்றும் உலக சமாதானத்தின் மகத்தான செய்தியைப் பரப்புவதற்காக தனிப்பட்ட வாழ்க்கையையும் மதகுரு வாழ்க்கையையும் சமமாக அர்ப்பணித்த ஒரு முன்மாதிரியான ஆளுமை!

அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படும் அனைத்து மனித இனங்களுடனும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்பதே அவரது உள்ளம்.

பாலஸ்தீன மக்களுடன், அவர்களின் வலியிலும், துன்பத்திலும், வேதனை அனுபவங்களிலும் மனதால் இணைந்து நின்று வழிகாட்டியவர்.

திருத்தந்தையின் மறைவால் துயருற்று நிற்கும் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு, இரங்கல் தெரிவிக்கிறேன் - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #PopeFrancis
சமாதானத்தை வலியுறுத்தியவர், பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாடு, பாலின சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றவர், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் குரல் கொடுத்தவருமான போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PopeFrancis