Seithikathir - Tamil News
14.2K subscribers
149 photos
47 videos
662 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அதிருப்தி!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு பிஆர் கவாய் முதல்முறையாக சொந்த மாநிலமான மஹாராஷ்டிரா வந்தார். மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் தலைமை நீதிபதி பேசியதாவது:

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை , சட்டம் இயற்றும் மன்றங்கள், நிர்வாகத்துறை ஆகியன சமம். ஒவ்வொரு அமைப்பும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்று முதன்முறையாக மஹாராஷ்டிராவிற்கு வந்தால், மாநில தலைமைச் செயலர், டிஜிபி, அல்லது மும்பை போலீஸ் கமிஷனர் அங்கு இருப்பது பொருத்தமானது அல்ல என்று அவர்கள் நினைத்தால் அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல. ஒரு அரசியலமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றியது. ஒரு அரசியலமைப்பின் தலைவர் முதல்முறையாக மாநிலத்திற்கு வரும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெறிமுறைகளை நீதிபதிகளில் ஒருவர் மீறியிருந்தால், அரசியல்சாசனப்பிரிவு 142 பற்றிய விவாதம் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாக தோன்றலாம். ஆனால், அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்றார். பாராட்டு விழாவில் அதிருப்தி தெரிவித்து பேசியது குறித்து அறிந்த உடன் தலைமைச் செயலர் சுஜாதா சவுனிக், டிஜிபி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் இங்கு வந்து தலைமை நீதிபதியை சந்தித்தனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 70,040க்கு விற்பனை.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 சிறப்பு செய்தி: ஆப்கானிஸ்தானில் 'ராமனின் தோட்டம்' இந்தியாவுக்கு கை மாறுகிறதா?

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய ஏர்பேஸான பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது. 1950 களில் ஆப்கானிஸ்தானின்
நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியன் தான் பக்ராம் ஏர்பேஸை உருவாக்கி கொடுத்தது.

1989 வரை பக்ராம் ஏர்பேஸ் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அடுத்து அமெரிக்காவின் கைகளுக்கு மாறியது. 2021 ல் அமெரிக்கா பக்ராம் ஏர்பேஸை விட்டு விலகிய பிறகு தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.

இப்பொழுது இந்த ஏர்பேஸை மீண்டும் கைப்பற்றி விட அமெரிக்கா துடிக்கிறது. சீனா பக்ராம் ஏர்பேஸை ஆட்டைய போட தலிபான்களை பணத்தினால் குளிப்பாட்டிக்கொண்டு இருக்கிறது.

இப்பொழுது இந்தியாவும் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்றி விட களத்தில் இறங்கி விட்டது. பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா களம் இறங்கியதால் தான் ட்ரம்பிற்கு இந்தியா மீது கோபம் வந்து விட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவிற்கு பக்ராம் ஏர்பேஸ் மிக முக்கியமானது. ஏன் என்றால் இந்தியா தஜிகிஸ்தானில் பர்கோர் மற்றும் அய்னி என்கிற இரண்டு நகரங்களில் ஏர்பேஸ்களை வைத்து இருக்கிறது. இது முழு அளவில் இந்தியாவின் ராணுவப் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கிறது.

வெளிநாடுகளில் இந்தியாவின் மிலிட்டரி பேஸ் உள்ள மிக முக்கியமான நாடு தஜிகிஸ்தான் தான். தஜிகிஸ்தான் பாகிஸ்தான் இடையே அனுமார் வால் மாதிரி ஆப்கானிஸ்தான் நீண்டு
பாகிஸ்தானையும் தஜிகிஸ்தானையும் பிரித்து இருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் பக்ராம் ஏர்பேஸ் சீனாவின் கைகளுக்கு சென்று விட்டால் தஜிகிஸ்தானில் உள்ள இந்தியாவின் பர்கோர் மற்றும் அய்னி ஏர்பேஸ்களுக்கு
சிக்கல் உண்டாகி விடும். இந்திய விமானப் படைகள் பாகிஸ்தானை தாக்க விடாமல் சீனா பக்ராமில் இருந்து தடுத்து விடும்.

ஒரு வேளை பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவின் கைகளுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானின் கதை கந்தல் தான். வடக்கே தஜிகிஸ்தான் ஏர்பேஸ், மேற்கே ஆப்கானிஸ்தான் ஏர்பேஸ்களில் இருந்து இந்திய விமானப்படை
பாகிஸ்தானை அடித்து நொறுக்கி விடும்.

அதனால் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா அனைத்து
வழிகளிலும் முயற்சித்து கொண்டு இருக்கிறது. சோவியத் யூனியன் உருவாக்கி அமெரிக்கா நவீனப்படுத்திய பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் இந்தியாவும் வல்லரசுகளின் வழியில் பயணப்பட ஆரம்பித்து விடும்.

பக்ராம். இஸ்லாமிய நாட்டில் இந்து பெயர் மாதிரி தெரிகிறதே என்று யோசிக்கிறீர்களா... பக்ராம் என்றால் சமஸ்கிருதத்தில் ராமனின் தோட்டம் என்று பெயராம். அதனால் பக்ராம் இந்தியாவின் தோட்டமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
காவல்துறை சார்பில் ரூ. 457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ. 211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 6 மாதங்களில் 5 பேரைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தது அம்பலம்.

ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம்- மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பு.

இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம்.

மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம்.

கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர்.

உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம்.

பல்லடம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும்- ஈரோடு சிவசிரி கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார்.
மழை முன்னெச்சரிக்கை - முதல்வர் ஆலோசனை.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய்த் துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

மழைக் காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம்.

பெங்களூருவில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் கடும் அவதி, சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி.
"உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்"

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் - உச்சநீதிமன்றம்.
"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி”- இபிஎஸ்.

மேடைதோறும் பொள்ளாச்சி எனக் கூவிய முதல்வர் ஸ்டாலினின் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.

அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக சார்களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திமுக குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தை பாதுகாக்க முயலும் சார்கள் வெட்கித் தலைகுனியட்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
💥 டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி!

தமிழ்நாட்டை தனி நாடாக அறிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு,

தமிழக ஆளுநருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பி வைத்து, தமிழக ஆளுநர் தீர்மானத்தை நிராகரித்து,

இரண்டாவது முறையும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்து குடியரசு தலைவரிடம் நிலுவையில் இருக்கும் நிலையில்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு தனி நாடாக மாறி விடுமா.?

இந்திய அரசியலமைப்பையே கேலிக் கூத்தாக மாற்றி இருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.!

இந்திய அரசியலமைப்பின் நிர்வாக தலைவரான ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளது.

இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தை நோக்கி கேட்ட 14 கேள்விகளும் நியாயமானது.

- டாக்டர் கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா தர்மசத்திரம் கிடையாது - உச்ச நீதிமன்றம்.

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற ‘இந்தியா' தர்மசத்திரம் கிடையாது; ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர்.

எல்லா இடங்களில் இருந்தும் அகதிகளை வரவேற்க முடியாது; வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்- உச்ச நீதிமன்றம்.

2018ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சுபாஷ்கரனுக்கு சட்ட விரோத தடுப்புக் காவல் சட்டத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மேல்முறையீட்டில் 7 ஆண்டுகளாக தண்டனையை குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்குப் பிறகு இந்தியாவை விட்டு அவர் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவு.

இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு.
முல்லைப்பெரியாறு அணை - சாலை பராமரிப்புக்கு அனுமதி அளிக்க கேரளா மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நீதிபதிகள்: பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் முன்னேற்றம் உள்ளதா?

கேரள அரசு: வல்லக்கடவு சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு உரிய முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு: மரங்களை வெட்ட கேரள அரசு முன்பு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோர வேண்டும் என கூறுகிறது. அதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு: தமிழ்நாடு அரசின் மனுவை பரிசீலித்து வருகிறோம். விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

நீதிபதிகள்: அணை பராமரிப்புக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரளாவுக்கும், மத்திய அரசுக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மராமத்து பணிகளை நடத்த ஏதுவாக வல்லக்கடவு சாலையை கேரள அரசே ஏன் சீரமைக்கக் கூடாது? பணியாளர்கள் செல்ல 2வது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு: சாலையை கேரள அரசு சீரமைத்தால், அதற்கான செலவை ஏற்கிறோம்.

நீதிபதிகள்: மரங்களை வெட்ட 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கேரள அரசே வல்லகடவு சாலையை சீரமைக்க வேண்டும். படகு ஒன்றையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும்

எஞ்சிய பிரச்னைகள் குறித்து முடிவு செய்ய அணையின் மேற்பார்வைக்குழு உடனடியாக கூடி 4 வாரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டும்.
💥 தலித்துகள் மீது பாஜக அரசின் வன்மத்துக்கு இது ஒரு சான்று!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அவரை அம்மாநில உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வரவேற்க வேண்டும் என்பது மரபு.

ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற போது அந்த மாநிலத்தை சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குனர், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் முறைப்படி வரவேற்பு கொடுக்கவில்லை. நீதிபதியே இதனை வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

பாஜக அரசு தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கண்டனம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பள்ளிக்கல்வி அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரம் மாற்றம்.

பள்ளி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 மணி - மாலை 5.45 மணியாக மாற்றம் - பள்ளிக்கல்வி செயலர்.

வேலை நேரம் காலை 9 - மாலை 4.45 என 2023-ல் மாற்றப்பட்டது; ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நேரம் மீண்டும் மாற்றியமைப்பு.
சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஆதாயம் பெற்ற வழக்கில், மருத்துவர் பிரபாகரனை பணி நீக்கம் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஜெயா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு.

இதில் ரூ.40 லட்சத்தை மருத்துவர் பிரபாகர் வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மே 21இல் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை அதிமுக சார்பில் மே 21 காலை 9.30 மணிக்கு அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்.

கல்லூரி மாணவியின் புகாரில் உரிய நேரத்தில் வழக்கு பதியாத காவல் துறைக்கு கண்டனங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
💥 தமிழக பா.ஜ., துாக்கம்: தொண்டர்கள் ஆவேசம்!

நன்றி: தினமலர்

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை தன் அதிரடி பேச்சு மற்றும் நடவடிக்கையால், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்தது. நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவரான பின், தமிழக பா.ஜ., துாக்க நிலைக்கு சென்றுவிட்டது. இதனால், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக கடந்த 2011 முதல் 2019 வரை பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலை, விருப்ப ஓய்வு பெற்று, பா.ஜ.,வில் 2020 ஆக., 25ல் இணைந்தார்.

திடீர் வேகம்

தமிழக பா.ஜ., தலைவராக 2021 ஜூலையில் பொறுப்பேற்றார். கடந்த ஏப்., 11 வரை தலைவராக பணியாற்றினார்.

அண்ணாமலை தலைவராவதற்கு முன், ஆளுங்கட்சியின் தவறுகளை விமர்சிப்பதில் மென்மையான போக்கை காட்டிக் கொண்டிருந்த பா.ஜ., அவருடைய வருகைக்குப் பின், திடீர் வேகம் எடுத்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆளுங்கட்சியினர் தவறுகள் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டன.இதற்காக, தி.மு.க., தரப்பில் போடப்பட்ட அவதுாறு வழக்குகளையும் தைரியத்துடன் எதிர்கொண்டார் அண்ணாமலை.

அதேபோல, பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மற்ற கட்சியினர் தவறுகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளையும் நெத்தியில் அடித்து விமர்சித்தார் அண்ணாமலை.

தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன், அக்கட்சி அமைச்சர்கள் சேர்த்துள்ள சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, 'தி.மு.க., பைல்ஸ்' எனும் பெயரில் அடுத்தடுத்து வெளியிட்டார்.

இது, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் துாக்கத்தை கெடுத்தது. அவரது அதிரடி நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தன. இளைஞர்கள், பா.ஜ., உள்ளே வரத் துவங்கினர். இதனால், பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., என்ற நிலை மாறி, பா.ஜ., அந்த இடத்துக்கு வந்தது.

அ.தி.மு.க.,வையும் சேர்த்தே விமர்சித்ததால், 'அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவராக இருக்கும் வரை, பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளிப்படையாக அறிவித்தார். இதை வைத்து, கூட்டணியை விட்டும் அ.தி.மு.க., விலகியது.

கொஞ்சமும் கவலைப்படாத அண்ணாமலை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து, பா.ஜ., தலைமையில் கூட்டணி ஏற்படுத்தி, அக்கூட்டணி வாயிலாக லோக்சபா தேர்தலை சந்தித்தார்.

தோல்வி தான் என்றாலும், பல இடங்களில் அ.தி.மு.க., வைக் காட்டிலும் பா.ஜ., கூடுதல் ஓட்டுகள் வாங்கி, இரண்டாம் இடம் பெற்றது; ஓட்டு சதவீதமும் அதிகரித்தது.

ஆனால், அண்ணாமலை திட்டத்தை ஏற்க மறுத்த பா.ஜ., தலைமை, மீண்டும் அ.தி.மு.க.,வோடு கைகோர்க்க விரும்பி, கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது.

இதற்கு முன்னதாக, தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை ஒதுங்க வைத்து, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை கட்சி மேலிடம் நியமித்தது.

நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவராக கடந்த ஏப்., 11ல் பொறுப்பேற்றார். அப்போது, 'அண்ணாமலை புயல்; நான் தென்றல்' என கூறினார்.

அவர் தலைவராகி 35 நாட்கள் கடந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் பா.ஜ., என்ற கட்சி இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சென்று விட்டதாக கட்சியினர் புலம்புகின்றனர்.

மீண்டும் யாத்திரை

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்த ஓட்டுகளை அடிப்படையாக வைத்து, அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலை பா.ஜ., தலைமையிலான கூட்டணி வாயிலாகவே எதிர்கொள்ளலாம் என கணக்குப் போட்டு, அதற்கேற்ப செயல்பட்டார் அண்ணாமலை.

கூடவே கட்சி வளர்ச்சிக்காக, தான் ஏற்கனவே 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் நடத்திய யாத்திரை போலவே, மீண்டும் ஒரு யாத்திரை நடத்தலாம் என திட்டமிட்டார். தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரும்பாதோருக்கான ஒரு வாய்ப்பாக பா.ஜ.,வை கொண்டு வர அண்ணாமலை நினைத்தார்.

இதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த, திட்டங்கள் தீட்டி வைத்திருந்தார்.

நயினார் நாகேந்திரன் அரசியலில் மேம்போக்காகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அதனால், அவர் எல்லாவற்றிலும் மென்மையான போக்கையே கையாள்கிறார்.

அது தற்போதைய பா.ஜ.,வுக்கு ஏற்றதல்ல. கூடவே, தி.மு.க.,வை வீழ்த்தக்கூடிய வகையில் இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாக்.,கிற்கு இந்தியா பதிலடி கொடுத்ததை கொண்டாடும் வகையில், தமிழகம் முழுதும் பா.ஜ., சார்பில் மூவர்ண கொடி பேரணி நடக்கிறது.

ஆனாலும், அதுகுறித்த எந்த பரபரப்பான தகவலும் மக்கள் மத்தியில் இல்லை. பெயரளவுக்கு இயங்கும் கட்சியாக தமிழக பா.ஜ., மாறி விட்டது.அண்ணாமலை தலைவராக இல்லாத பா.ஜ.,வுடனான கூட்டணி என்பது, அ.தி.மு.க.,வுக்கும் சேர்த்தே சரிவை உண்டாக்கும்.

https://www.dinamalar.com/news/premium-news/tamil-nadu-bjps-grievance-volunteers-are-furious/3934031
🏏 தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு.

“எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, முடிவையோ 'இதுவரை' பிசிசிஐ செய்யவில்லை. ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது” - தேவஜித் சைக்கியா, பிசிசிஐ செயலாளர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு.

வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது காரின் கதவுகள் தானாக மூடிய நிலையில் வெளியே வர முடியாததால் மூச்சுத் திணறி உயிரிழப்பு.

பக்கத்து வீட்டில் திருமண விழா இருந்ததால், குழந்தைகள் அங்கு சென்றிருப்பார்கள் என நினைத்து நீண்ட நேரம் பெற்றோர் தேடவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29