Seithikathir - Tamil News
14.2K subscribers
152 photos
48 videos
668 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 பரிசோதனை வெற்றி!

ஒடிசா, கோபால்பூரில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பார்கவஸ்திரா எனப்படும் ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

💥 மூவர்ணக்கொடி ஏந்தி பா.ஜ., யாத்திரை!

ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில், முப்படைகளின் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பா.ஜ., சார்பில் மூவர்ணக்கொடி ஏந்திய யாத்திரை நடக்கிறது. சென்னையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

💥 ‘டாஸ்மாக்’ வழக்கு: கோர்ட் உத்தரவு

ஆயிரம் கோடி ரூபாய் ‘டாஸ்மாக்’ முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனு; மத்திய - மாநில அரசுகள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🏏 ஜடேஜா புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நாட்களாக நம்பர் 1 ஆல்ரவுண்டராக இருக்கும் வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தி.மு.க., அரசுக்கு என்ன பங்கு?

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியதும் அ.தி.மு.க., அரசு

வழக்கை விசாரித்தது சி.பி.ஐ., மற்றும் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்; இதில் தி.மு.க., அரசுக்கோ, முதல்வருக்கோ என்ன பங்கு இருக்கிறது?

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அ.தி.மு.க., அரசு

மாநில திட்டங்களுக்கு நிதியை கேட்டுப் பெற முடியுமா என கேட்ட முதல்வர், நிதியை பெற்றுத் தந்தபின் ஏற்க மறுக்கிறார்

- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பலூச் விடுதலை அறிவிப்பு... பாகிஸ்தானுக்கு 'செக்'... அரசியல் பின்னணி...

இன்று பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுவது "பலூஜி" (பலுசிஸ்தான்) தனிநாடாக அறிவிக்கப்பட்டது என்ற தகவல் தான்.

இத்தனை ஆண்டுகள் போராடி வந்த அந்த பகுதி மக்கள், சில நாட்கள் முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தானை அடித்த அடியில் நிலைகுலைந்து இருக்கும் வேளையில்!

பலூஜ் விடுதலை இயக்கம் இந்த அறிவிப்பு செய்துள்ளது. அடுத்தடுத்த அதன் முன்னெடுப்புகள் ஆச்சரியம் தான்.

ஐநாவில் தனி நாடு அங்கீகாரம் கேட்பது, இந்தியாவிடம் தனக்கு தூதரகம் அமைக்க அனுமதி கோருவது, நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று!

இத்தனை காலம் பாகிஸ்தான் அணுஆயுத நாடு என்று பூச்சாண்டி காட்டியது என்பது இப்போது அம்பலமானது.

பொதுவாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டில் இப்படி பிரிவினை செய்து தனியாக பிரிந்து செல்வது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.

உண்மையில் பாகிஸ்தானில் அணு ஆயுதம் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதெல்லாம் அவர்களுடையதா என்ற சந்தேகம் தான் இப்போது?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நம்ம ராணுவம் அடித்த அடியில்
அமெரிக்க பதறுகிறது, சீனா தவிக்கிறது. இதெல்லாம் பார்க்க, அணு ஆயுதங்களை சேமித்து வைக்க பாகிஸ்தானின் குடோன் பயன்படுத்தப் பட்டிருக்குமோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

நமக்கு தெரிந்த இந்த விஷயம் பலூஜ் போராளிகளுக்கு தெரியாதா? "மாப்பிள்ளை நீதான், சட்டை அமெரிக்கா சீனா" உடையது என்று தெரிந்ததால்?

அணுஆயுத பூச்சாண்டி நம்மகிட்ட வேகாது என்று தனிநாடாக பிரகடனம் செய்யும் அளவுக்கு சென்றது.

இதெல்லாம் மோடிக்கு தெரியாதா? இந்த பூச்சாண்டி எல்லாம் இந்தியாவிடம் நடக்காது. மீண்டும் சீண்டினால்
அடி பலமாக இருக்கும் என்று சொல்கிறார்.

மொத்தத்தில் வாடகைக்கு அடுத்த நாட்டு அணு ஆயுதங்களை பதுக்கி வைத்து
இத்தனை காலம் ஏமாற்றி வந்துள்ளது தெளிவாகிறது.

இதில் துருக்கி பங்கும் இருக்கலாம். ஆக மீண்டும் நம்மிடம் சீண்டினால் நம் அடி எங்க விழும் என்பது பதுக்கல் நாடுகளுக்கு தெரியும். அவர்கள் தான் இனிமேல் பாகிஸ்தானை கண்ட்ரோல் செய்ய வேண்டும். நஷ்டம் அவர்களுக்கு தானே?

ஒரே அடி பல சமாச்சாரங்கள் சந்திக்கு வந்துவிட்டது. பலூஜ் சரியான முறையில் தன்னுடைய ஆட்டத்தை ஆடுகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் ஏன் அளிக்கப்பட்டது என்பதும் இப்போது தெரிகிறதா?

கண்ணிவெடியில் கால் வைத்தால் என்ன நடக்கும்! கால் எடுத்தால் வெடித்து சிதறும் தானே?

அந்த நிலைக்கு பாகிஸ்தானை
கண்ணிவெடி மீது கொண்டு வந்து நிறுத்திவிட்டார் பிரதமர் மோடி.
🔴 துருக்கியுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU).

காரணம்: தேசிய பாதுகாப்பு கருதி ரத்து!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதால் இந்த நடவடிக்கை! போட்டுத் தாக்கு!

#BREAKING: India’s prestigious Jawaharlal Nehru University (JNU) cancels agreement with Turkish University after Turkey helped Pakistan with defence equipment to attack India.

“Due to National Security considerations, the MoU between JNU and Inonu University, Türkiye stands suspended until further notice. JNU stands with the Nation.”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோவை- நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு.

கோவை: கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஹரிஸ்ரீ மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சக்திவேல் அளித்த புகாரில் விசாரணை செய்ய போலீசார் சென்றபோது, தப்பிக்க ஹரிஸ்ரீ துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்கு போலீஸ் துப்பாக்கிச்சூடு என தகவல்.

சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ஹரிஸ்ரீ தனது துப்பாக்கியை மேலே சுட்டு மிரட்டியுள்ளார்.
இன்றைய சிந்தனை: தவறான புரிதல்!

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.

ஒரு நாள்
அந்த நகை வியாபாரியின் மனைவி
தன் மகனை அழைத்து,
ஒரு நீலக்கல் பதித்த நெக்லசை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்...,
மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லசை எடுத்துக் கொண்டு,
அவனது மாமாவின் கடையை அடைந்தான்.
அவனது மாமா
அந்த நெக்லசை
முற்றிலுமாகப் பார்த்தார்.
அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..!

அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பின் குடும்ப செலவுக்காக
அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.
மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார்.

எனவே,
அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.

நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.
ஒரு நாள் அவனது மாமா கூறினார்... மருமகனே, அந்த நெக்லசை
உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா!
அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

அவன் அம்மாவிடம் இருந்து நெக்லசை பெற்றவுடன்,
அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான்.

அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான். அவனுடைய மாமா, ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான்.

நெக்லசை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான்.
மாமா கேட்டார், நெக்லசை கொண்டு வரவில்லையா?

அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்...
நீ முதன் முதலில் நெக்லசை என்னிடம் கொண்டு வந்த போது,
அது போலியானது என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,
நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக
நீ நினைத்துக் கொள்ளக் கூடும். ஏனென்றால், அப்போது
நீ ஒரு துன்பமான சூழ்நிலையில் இருந்தாய்.
இன்று நீ,
நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லசு , உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில், உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... உறவு இழையை அறுந்து விடாமல் காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது.

எந்த வித பட்டறிவும் இல்லாமல்,
நாம் இந்த உலகில் பார்ப்பது,
நினைப்பது,
தெரிந்து கொள்வது
எல்லாமே
தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால் நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது.

நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...!
பொள்ளாச்சி - பாதித்த பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்.

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

நீதிமன்றம் மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் கூடுதலாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
குறள் எண் : ௨௪௦(240)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புகழ்

குறள் :
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.


உரை :
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

English :
Those live who live without disgrace. Those who live without fame live not.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧)
தமிழ் வாழ்க
💥 மியான்மர் எல்லையில் Assam Rifles அதிரடி

மியான்மர் எல்லையோரம் இருக்கும் மணிப்பூரின் New Samtal கிராமம் அருகே ஆயுதம் ஏந்திய குழுவினரின் நடமாட்டம் இருந்ததாக உளவுத்தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு Assam Rifles படையினர் தாக்குதல் நடத்தினர்.

அதில், 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன - இந்திய ராணுவத்தின் Eastern Command தகவல்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இன்றைய புத்தக மொழி
15/05/25
📚📚📚🌹📚📚📚

ஒருவர் தனது சொந்த
அறியாமை குறித்த
விழிப்புணர்வுடன் இருப்பதே
புத்திசாலித்தனத்தின் அறிகுறி.

- நிக்கோலோ மாக்யவெல்லி -

📚📚📚🌹📚📚📚
💥 பாஜக அமைச்சர் பேச்சால் கொந்தளித்த ம.பி. உயர்நீதிமன்றம்

“நாளை நான் உயிருடன் இருப்பேனா எனத் தெரியாது. 4 மணிநேரம் தருகிறேன். அமைச்சர் குன்வர் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யுங்கள். ஒன்று, இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கட்டும், இல்லையேல் நாளைக்குள் வழக்குப் பதிய வேண்டும்”

ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' எனக் கூறிய பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நேற்று தாமாக முன்வந்து உத்தரவிட்டபோது, ம.பி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா அமர்வு ஆவேசமாக கூறியவை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்.

ஷோபியன் மாவட்டத்தின் கெல்லார் பகுதியில் கடந்த 13ம் தேதி லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கொலை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கௌரவப் பதவி

ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு துணை ராணுவத்தில் (பிராந்தியம்) லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி மத்திய அரசு கௌரவம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியாவில் சுற்றித் திரிந்த புதிய வகை டைனோசர் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசருக்கு 'மலேரிராப்டர் குட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் வழக்கு ஒத்திவைப்பு

வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு 'வழக்கு விசாரணைக்கு அதிக நேரம் தேவை' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு.
💥 வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் வழக்கு ஒத்திவைப்பு

வஃக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.

'வழக்கு விசாரணைக்கு அதிக நேரம் தேவை' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING: அரசியல் / அரசியல் சாசனம் தொடர்பான மிக முக்கியமான செய்தி!

🔴 குடியரசு தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள்!

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

செய்திக்கதிர் பார்வை: 14 கேள்விகளில், 9, 10 மற்றும் 14 ஆவது கேள்விகள் உச்ச நீதிமன்றத்திற்கு இடியை போன்றது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்நிலையில், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்:

1) ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?

2) ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, ​​அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

3) இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

4) பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?

5) அரசியலமைப்பு ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரால் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 200 இன் கீழ் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?

6) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

7) அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட முறையில் செயல்பட முடியுமா?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

8) குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் அடிப்படையில், ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அல்லது வேறுவிதமாக ஒதுக்கி வைக்கும்போது, ​​பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற கடமைப்பட்டுள்ளாரா?

9) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?

10) இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

11) மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

12) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் உள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?

13) அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
14) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131 இன் கீழ், ஒரு வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
உதகை மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.

உதகையில் 127ஆவது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தாவரவியல் பூங்காவில் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.

கோடை விடுமுறையை ஒட்டி உதகையில் மலர் கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.
🔴 குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளின் சாராம்சம்...

உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் சட்டப்படி உள்ளதால், கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கும். எனவே, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அதன் சாராம்சம்...

• பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?

• இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?

• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?

• அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?

• ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?

• பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?

• 142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

• 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?

• ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?

• பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமா?

• பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?