Seithikathir - Tamil News
14.2K subscribers
152 photos
48 videos
681 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
🔴 "பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது."

"எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.

மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன"

“பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவிடு பொடியாக்கியுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது”

- ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் - உறுதிப்படுத்திய இந்திய அரசு

இன்று அதிகாலை போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் விமானப்படை தளமான நூர் கான், ரஹாமி யார் கான், ரஃபிகி, முரித், சியால்கோட் மற்றும் இரண்டு ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை நாசமாக்கியது!

வீடியோ வெளியிட்ட ராணுவம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

டெல்லி | செய்திக்கதிர்: மே 8 மற்றும் 9, 2025 ஆகிய இரவு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தானால் திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் இன்று திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த தாக்குதல் நடவடிக்கையில், எல்லையிலுள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டன. கடந்த காலங்களில் இம்முகாம்கள் இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் திட்டமிடலுக்கும், பயிற்சிக்கும் முக்கிய தளமாக இருந்தன.

இந்திய ராணுவத்தின் சரியான மற்றும் விரைவான பதிலடி, பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்பையும் செயல்திறனையும் கடுமையாக பாதித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆலோசனை

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்
💥 சர்வதேச நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போரை நிறுத்தும் என்று உலக நாடுகள் நம்புகின்றன?

- ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி
பாகிஸ்தான் மீது 8 இடங்களில் இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் மீது இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல் வெளியீடு

ரஃபிக், முரித், சக்காலா, ரஹிம் யார் கான், சுக்சூர், சுனியன் ஆகிய ராணுவ தளங்களில் தாக்குதல்

பஸ்ரூர், சியால்கோட் ஆகிய விமான தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்
💥 நாட்டுக்காக திரண்ட இளைஞர்கள்

சண்டிகர்: ராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையில் திரண்டுள்ளனர்.

இன்று இரவு 10.30 மணிக்கு இதற்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🌧️ வானிலை தகவல்

நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் மே 13ம் தேதியும், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் மே 14ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING NEWS

இசைஞானி இளையராஜாவின் அறிவிப்பு!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

"என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை (Valiant) நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” (National Defence Fund) நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.

இந்த நன்கொடை என் "Valiant" இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை!"

ஜய பேரிகை கொட்டடா, கொட்டடா,
ஜய பேரிகை கொட்டடா! - பாரதி.

- இசைஞானி இளையராஜா அறிவிப்பு
🔴 இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள்!

இந்திய ராணுவத்தால் மே 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

• லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளரான முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல். (முடாசர் காதியன் இறுதிச்சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செய்தனர்)

• ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல். (நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்ப்பது உள்ளிட்டவை ஜமீலின் முக்கிய பணி)

• ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த முகமது யூசுப் அசார் (எ) உஸ்தாத். (ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பயிற்சி தருவது, காஷ்மீரில் பல தாக்குதலில் ஈடுபட்டவர் உஸ்தாத்)

• லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி காலித் (எ) அபு ஆகாஷா (காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்ட காலித், ஆப்கானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்)

• ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன்கான். (காஷ்மீரில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முகமது ஹசன் மூளையாக செயல்பட்டவர்)

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2025 ஐபிஎல் தொடரின் 16 போட்டிகள் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய 3 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

- Source
🏏 கோலி ஓய்வு?

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக BCCI க்கு விராட் கோலி கடிதம்.

கோலியின் ஓய்வு முடிவை ஏற்காத BCCI, அவரது முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு வேண்டுகோள்

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி.

கடந்த 7ம் தேதி ரோஹித் ஷர்மாவும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😔 முடியல... செய்திகளை முந்தித் தருவது...

சென்னை | 10 மே 2025 | செய்திக்கதிர்: அர்னாப் கோஸ்வாமி இரண்டு நாளைக்கு முன்னே ரிபப்ளிக்ல சொன்னது, 'பாகிஸ்தானோட ராவல்பிண்டி, சியால்கோட் எல்லாம் தாக்கியிருக்கிறது பாரதம்'னு. ஆனா அதெல்லாம் நேற்று தான் நடந்திருக்குது. நேற்று நடந்ததை முந்தா நாளே சொல்ற அளவுக்கு ரிபப்ளிக் வளந்திருக்குதுங்கறத நெனக்கறப்ப ரொம்ப பெருமையா இருக்குது. கலக்கு அர்னாப்!

அர்னாப் கத்துவதை காது கொண்டு கேட்க சகிக்க முடியவில்லை... தொலைக்காட்சிகளில் ஸ்கிரீனுக்கு பின்னால் எடிட்டோரியல் ரூமில் எப்படி ஒவ்வொருவருக்கும் கட்டளைகள் கொடுப்பார்களோ, அதை ஸ்கிரீனுக்கு முன்னால் பொது வெளியில் மக்களுக்கு தெரியும் வகையில் டேய் அதை எடு... இதை பிரேக் பண்ணு... இங்க ஜூம் பண்ணு... இங்க காட்டு... அதை போடு... இதை பிளாஷ் பண்ணு... குயிக் குயிக்... எனக்காக காத்திருக்க வேண்டாம்... நீங்களா போட வேண்டாமா... நான் சொல்லியா நீங்க போடணும்... இப்படி எல்லாம் சீன் விட்டுக்கொண்டு அலப்பறை பண்ணுவதை பார்க்க சகிக்க முடியவில்லை... பலர் பார்த்துவிட்டு இப்படி வெளியே சொல்ல முடியாமல் கடந்து போய்டுவிடுகிறார்கள்...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

என்னமோ அர்னாப் மட்டும்தான் இப்படி பன்றாருனு நினைக்காதீங்க... ரிபப்ளிக் ஆங்கில சேனலுக்கு நிகராக, இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்குள்ளும் இப்படிதான் போட்டியே... ஒன்னும் சரியில்ல!

நம் காட்சி ஊடகங்களின் கதி இப்படியா ஆக வேண்டும்... 🤔

*** இப்ப பாகிஸ்தான்ல ஒரே டென்ஷனாம். பாரதத்தை ஒண்ணும் செய்ய முடியலையேங்கற கடுப்பில இருக்கிற பாகிஸ்தான் இப்ப National Command Authority கூட்டத்தை கூட்டியிருக்குதாம். இந்த அத்தாரிட்டி தான் அணு ஆ*யு*த விஷய முடிவுகள் எடுக்குமாம். அப்படி தப்பித் தவறி எடுத்துட்டாங்கனா சங்கு தான் பாகிஸ்தானுக்கு!
🔴🔴 BIG BREAKING

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Seithikathir - Tamil News
Photo
🔴 BIG BREAKING NEWS

இந்தியா - பாகிஸ்தான் இடையே உடனடி முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

வாஷிங்டன் | 10 மே 2025 | செய்திக்கதிர்: அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

"இந்த இரவு நேரத்தில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அறிவும், பொதுவான நியாயத்தையும் கொண்டு இந்த முடிவை எடுத்ததற்கு வாழ்த்துகள்," என டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, டிரம்ப் இருநாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.