Seithikathir - Tamil News
14.2K subscribers
100 photos
30 videos
436 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 "நீதிக்கான தாக்குதல்"

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் #OperationSindoor தொடங்கப்பட்டது

9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. கடந்த 3 தசாப்தங்களாக, பாகிஸ்தான் திட்டமிட்டு பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், ஆரம்ப மற்றும் புத்தாக்க படிப்புகளுக்கான பயிற்சி பகுதிகள் மற்றும் கையாளுபவர்களுக்கான ஏவுதளங்கள் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பாகும். இந்த முகாம்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (PoJK) ஆகிய இரு பகுதிகளிலும் அமைந்துள்ளன

- ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் இவற்றை கூறினார்கள்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தமிழக வளர்ச்சியும், சமூகநீதியும் தான் நோக்கம்: அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள்!

பாட்டாளி சொந்தங்களுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மடல்

(வீடியோ இணைப்பு: மே 11ஆம் தேதி ECR, OMR பகுதியை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என, அன்புணி ராமதாஸ் வேண்டுகோள்!)

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும் திறன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் தான் உண்டு. அவற்றில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த பெருவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் பிரமாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இந்த மடலை பாட்டாளி சொந்தங்களுக்கு நான் வரைகிறேன்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மாநாடுகளை நடத்துவதும், அதன் மூலம் மகத்தான சாதனைகளைப் படைப்பதும் நமது வரலாறுகள். மாமல்லபுரத்தில் வரும் 11&ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவும் அந்த வரலாற்றின் ஓர் அங்கமாக மாறப் போகும் நிகழ்வு தான். 1988&ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சித்திரை முழுநிலவு நாள் வன்னிய இளைஞர் பெருவிழா இதுவரை 20 முறை நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது நடைபெறவிருக்கும் 21&ஆம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை முன்னின்று நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பை, மாநாட்டுக்குழுத் தலைவராக நியமித்ததன் மூலம் மருத்துவர் அய்யா அவர்கள் எனக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதலாக ஒவ்வொரு நாளும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுவினரும் எனக்கு துணையாக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அளவில் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள் வரை அனைவரும் அவரவர் நிலையில் மாநாடு சிறப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்த மாநாட்டை மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடன் நடத்திக் கொண்டிருக்கிறோம். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை நாம் நடத்துவதன் நோக்கம் நமது வலிமையைக் காட்டுவது அல்ல. மாறாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்றச் செய்வது தான். அதனால் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; தேசிய, மாநில அளவில் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் முன்னேறினால் மட்டும் போதாது, சமூகநிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பது தான் நமது உன்னத நோக்கம் ஆகும். மாநாட்டுக்கான நமது கோரிக்கைகளும் அந்த நோக்கத்தைச் சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டின் சிறப்பு என்று நாம் போற்றக்கூடிய 69% இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆபத்தை தகர்க்க வேண்டும் என்றால் நமது கோரிக்கைகள் வெல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து, கவுரவமான வேலைவாய்ப்பைப் பெறும் போது உண்மையான சமூக விடுதலை கிடைக்கும். அத்தகைய சமூக விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக நாம் மேற்கொள்ளும் சமூகநீதிப் போர்களில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். மாநாட்டில் மட்டுமின்றி, மாநாட்டுக்குப் பிறகும் இந்தக் கோரிக்கைகளுக்காக நமது போராட்டம் தொடரும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், சமூகநீதியையும் அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாட்டிற்கு கிடைக்கும் வெற்றி தான் நமது சமூகநீதி லட்சியங்களை வென்றெடுப்பதற்கு அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாமல்லபுரம் மாநாட்டை வெற்றி பெறச் செய்யும் வகையில், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள அனைத்து பாட்டாளி சொந்தங்களும் தங்கள் குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும்.

மாமல்லபுரம் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இது மருத்துவர் அய்யா அவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி ஆகும். இதில் கிடைத்த வெற்றியைப் போலவே, மாமல்லபுரம் மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையப்போவது உறுதி. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வரும் செய்திகள் அதைத் தான் சொல்கின்றன. மே மாதம் 11-ஆம் நாள் மட்டும் வங்கக்கடலை விஞ்சும் அளவுக்கு வன்னிய மக்கள் கடல் பெருக்கெடுக்கப் போகிறது. அலைகடலென திரண்டு வாருங்கள் என்ற அழைப்புக்கு உண்மையான பொருளை மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு தான் தமிழகத்திற்கு வழங்கப் போகிறது.

அதே நேரத்தில் நமது மாநாடு எந்தவித விமர்சனத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் இராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை நிரூபிக்க இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த மாநாட்டையொட்டி சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. அதற்கு நீங்கள் இடம் தந்துவிடக்கூடாது.

மாநாடு தொடர்பாக காவல்துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் பாதையிலும், மாநாடு முடிந்து திரும்பும் போதும் உணவகங்கள் திறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், வரும் போதே இருவேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து கொண்டு வர வேண்டும். அதேபோல், வாகனங்களை அதிவேகமாகவும், ஆபத்தான வகையிலும் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் கடைசி தொண்டன் வரை அனைவரும் மாநாடு முடிவடைந்து பாதுகாப்பாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்த பிறகு தான் நான் உறங்குவேன்.

அதனால், இந்த மாநாடு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்ணாடிப் பொருள் போன்று அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றி பெறச் செய்யவும், சமூகநீதிக்கான கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அமைதி, கட்டுப்பாட்டுடன் அணிவகுத்து வரும்படி மீண்டும் ஒரு முறை அழைக்கிறேன். உங்களுக்காக மாநாட்டுத் திடலில் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன்... வாருங்கள் சொந்தங்களே!
🔥☘️🔥 சொல்லி அடிப்பேனடி..

அதகளம் பண்ணியிருக்கிறார்கள் நம்மவர்கள். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் துல்லியமான தாக்குதலை நடத்தியது நம் இந்திய விமானப் படை விமானங்கள்.

ஜெய்-ஷி-முகமது, லஷ்கர் ஈ தொய்பா முகாம்களை அடித்து தொம்சம் செய்திருக்கிறார்கள். நம் பக்கத்தில் எந்த ஒரு சேதாரமும் இல்லை.

அதேசமயம் பக்கிகள் ஏகப்பட்ட தவறான தகவல்களை தற்சமயமே பரப்பிப்கொண்டு வருகிறார்கள் .

பாகிஸ்தானிய பிரதமர் ஷப்பா ஷெரிப் இந்திய ராணுவம் ஐந்து நிலைகளை தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டிய நிலையில் நம் இந்திய தரப்பில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டபடி 9 இடங்களை நம் இந்திய நிலப்பரப்பில்.... இந்திய வான் பகுதியில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தி அதிரடித்திருக்கிறார்கள்.

அட்டகாசமான நகர்வு இது.

ஏனெனில் இன்றைய தினம் இந்தியா முழுவதும் அதி உஷார் நிலைக்கு கொண்டு சென்று போர்க்கால யுத்த ஒத்திகை பார்க்க உத்தரவு கொடுத்தவர்கள்..... இன்று அதிகாலை நேரத்திலேயே பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அங்கு சேதாரம் அதிகம் என்கிறார்கள்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

யுத்த காலத்தில் எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்ப்பாராத இடத்தில் பலமாக தாக்குதல் நடத்துவது தான். அதனை மிக செம்மையாக செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.

போதாகுறைக்கு,
குறித்த நாளில்...
குறித்த நேரத்தில் வெகு துல்லியமான தாக்குதலை LOC யில் நடத்தி அசரடித்திருக்கிறார்கள்.

அங்கு... அவர்கள் தரப்பில் இருந்து நம்முடைய இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு சேதாரமும் நம் பக்கத்தில் இல்லை.

பஞ்சாப் மாகாணத்தில் யுத்த கால அவசரநிலை பிரகடனம் செய்து இருக்கிறார்கள் அவர்கள்.

இது ஒரு புறம் இருக்க.....
தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் அமைப்புக்கள் மீது தான். பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீதல்ல என்பதை நம் தரப்பில் இருந்து வெளியிட்ட தகவலில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது போர் அறிவிப்பு ஏதும் நம் பக்கத்தில் இருந்து வெளியிடவில்லை என்பது இதன் அர்த்தம்.

இன்னமும் நுட்பமாக சொன்னால்...... நீங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி எங்களுடையது. அங்கு கூடாரம் அமைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் தேவையில்லாமல் நீங்கள்... அதாவது பாகிஸ்தான் ராணுவம் தலையிடுமானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என நேரடியாக, அதேசமயம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அப்படி என்றால் இது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவா என்றால்....... அதில் தான் விஷயமே இருக்கிறது.

எப்படி....?!?!?

தற்சமயம் இங்கு ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வந்தால் அது போர். ஒருவேளை திருடனுக்கு தேள் கொட்டிய கதை என பேசாமல் இருந்தால்.... மீதமுள்ள 31 இடங்கள் தாக்க மீண்டும் ஒரு முகூர்த்தம் நிச்சயக்கப்படும்.

இனி இது பாகிஸ்தானுக்கான செக்-மேட்.

ஒடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதேசமயம் எந்த ஒரு நடவடிக்கைகளையும் அத்தனை சுலபத்தில் எடுக்க முடியாது.

என்ன செய்தாலும் அடி பலமாக விழும். முதுகெலும்பு முறுயும்.

இது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம் இது வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நம் தரப்பில் இதற்கு ஆப்ரேஷன் ஸிந்தூர் என இதற்கு பெயர் கொடுத்து இருக்கிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது , ஜெய் ஹிந்த்....என நம் தரப்பில் மிக சுருக்கமாக செய்தி வெளியிட்டு முடித்துக் கொண்டார்கள் நம்மவர்கள்.

வேறோர் விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இது ஏற்கனவே நம் பதிவில் பார்த்தது போல கோச்சார ரீதியில் குறித்த நாளில் தாக்குதல் நடத்தி இருப்பது தான். நிச்சயமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தாது. மீறி நடத்தினால் அது இருக்காது.

அந்த அளவிற்கு மிக மிக துல்லியமான உளவு தரவுகள்... கால நிலை என அத்தனையும் கவனித்தில் கொண்டு கன கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். அதேசமயம் தந்த்ரோபாயமாக மிக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு கொடுத்திருக்கும் பெயர் இன்னமும் துல்லியமானது.... தரமானது. ஆபரேஷன் ஸிந்தூர். இதற்கு வெற்றி திலகம் என்றும் ஒரு பொருள். அதேசமயம் நம் இந்திய தேசத்தின் நெற்றி திலகம் போன்ற இடத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல் நடவடிக்கை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

பதிவு: 💓 ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்
🏏#BREAKING | டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மா ஓய்வு

ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவிப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
❤️ டெஸ்ட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன், நாட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். என்னை தொடர்ந்து ஆதரித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ODI போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன்”

- ரோஹித் ஷர்மா, இந்திய வீரர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் ஓபன் டாக்!

“ஒரு வீரரின் பெருமையை கோப்பைகள் தீர்மானிக்காது. ஏனெனில் கோப்பைகள் வெல்வது ஒரு அணிக்கான சாதனை.

ஒரு வீரரின் விளையாடும் திறன், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, அவரின் சாதனைகள், வெற்றி பெற உதவும் வகையில் ரன்களை குவிப்பது ஆகியவைதான் அவரின் பெருமையை தீர்மானிக்கிறது. அப்படி பார்த்தால் விராட் கோலிதான் அதில் முதலிடத்தில் இருப்பார்!”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இந்திய ராணுவம் வெளியிட்ட 3 வீடியோக்கள்... தாக்குதல் இலக்கு எப்படி என்பதைக் காட்டும் அருமையான விளக்கம்...
Target 1 – Abbas Terrorist Camp at Kotli.
Distance – 13 Km from Line of Control (POJK).
Nerve Centre for training suicide bombers of Lashkar-e-Taiba (LeT).
Key training infrastructure for over 50 terrorists.

DESTROYED AT 1.04 AM on 07 May 2025.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Target 2 – Gulpur Terrorist Camp at Kotli.
Distance – 30 Km from Line of Control (POJK).
Control Center and Base of Lashkar-e-Taiba (LeT)
Used for revival of terrorism in Jammu and Kashmir.

DESTROYED AT 1.08 AM on 07 May 2025.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Target 3 – Mehmoona Joya Terrorist Camp at Sialkot.
Distance – 12 Km from International boundary.
Key training centre of Hizbul Mujahideen.
Used as control centre for revival of terrorism in Jammu and Kashmir.

DESTROYED AT 1.11 AM on 07 May

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆபரேஷன் சிந்தூர்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசும் நமது பாதுகாப்புப் படைகளும் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

இதுபோன்ற நடவடிக்கைகளுடன், பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்தவும், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசாங்கத்தின் இராஜதந்திர தலையீடுகள் இருக்க வேண்டும்.

இந்திய குடிமக்களாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்.
🔴 பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று [மே 8] காலை 9 மணிக்கு வெளியிடுகிறது; தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆலோசனைக்கு: 📞 14417

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.

எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எவ்வாறு விண்ணப்பிக்கலாம், கல்விக் கட்டணம், உதவித்தொகை போன்ற தகவல்களை பெறலாம். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.