The Seithikathir®
14.3K subscribers
45 photos
8 videos
197 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
குறள் எண் : ௨௨௪(224)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை

குறள் :
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


உரை :
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

English :
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௫)
தமிழ் வாழ்க
தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கும் என தகவல்...!

இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாகும் என எச்சரிக்கை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனையாகிறது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி மற்றும்
செந்தில் பாலாஜி இருவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இருவரது இல்லத்திலும் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் நீக்கம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம்

சாட்சி கூண்டுக்கு வராத சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்
"அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில்
தேவை அடிப்படையில் திருமண
முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்

பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு

மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

பழைய ஓய்வுதியம் திட்டம்
தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்

அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்"

- முதல்வர் ஸ்டாலின்
"அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்டர் விடுப்பு இந்தாண்டு செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

1-10-2025 முதல் சரண்டர் விடுப்பு பயன் பெறலாம்

8 லட்சம் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்

2 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரத்திலிருந்து, 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ. 50,000"

- முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு.

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது - முதலமைச்சர்.

ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படுகிறது.

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்டம்பர் 30க்குள் அறிக்கை.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை அறிவியலுக்கு ரூ.50,000 முன்பணம்.

சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.1,000 ஆக உயர்வு.

பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெற மகப்பேறு விடுப்பு காலமும் இனி தகுதிக்கான காலமாக எடுத்துக் கொள்ளப்படும்.
முருகேசன் - கண்ணகி கொலை: ஆயுள் தண்டனை உறுதி- உச்ச நீதிமன்றம்.

கடலூர் மாவட்டம் முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு.

2003இல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை செய்து எரிப்பு.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், தகுந்த ஆவணங்களுடன் ஜூன் 4-ம் தேதி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.
செய்தித் தொலைக்காட்சிகள் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை
இன்றைய புத்தக மொழி
28/04/25
📚📚📚🌹📚📚📚

மறதி எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது...

மனதுக்குள் சதா சுழன்றுகொண்டு நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஞாபகங்களை மறப்பதற்கான அழகான வழித்தடமாக பாடல் இருக்கிறது...

மனிதன் தனக்குப் பிடித்த பாடலைக் கேட்கும்போது அவன் நேசிக்கிற விசயங்களை மட்டுமே உணர்கிறான்...

- இவோ ஆண்ட்ரிச் -

📚📚📚🌹📚📚📚
💥 போர் வேண்டாம் என்ற சித்தராமையா பேட்டி: தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான் 'டிவி'

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், 'டிவி' சேனல் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பா.ஜ., தலைவர்கள், 'சித்தராமையா, பாகிஸ்தான் செல்லட்டும்' என்று கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; போரை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.
💥 காட்டமான பதில்!

என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.

Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது!

IPL போட்டியின்போது அங்கத் அமைதியாக இருந்தது இணையத்தில் பேசுபொருளான நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா காட்டம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
"பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்"

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு

பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து

பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும் - ஏக்நாத் ஷிண்டே

பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஏக்நாத் ஷிண்டே
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நிலவும் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் பொறுப்பான முறையில் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அமெரிக்கா கருத்து

அமெரிக்கா இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் தகவல்

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்
பிபிசி தொலைகாட்சியின் இந்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டதால் நோட்டீஸ்

ஆட்சேபம் தெரிவித்து பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைவர் ஜாக்கி மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் தகவல்
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து: ஐகோர்ட்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

2006-2010 வரை அமைச்சராக இருந்தபோது ரூ.2.01 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.
Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்க அறிவுரை.

Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவுறுத்தல்.

முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் உள்ள பொதுமக்கள், பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்து புகார் மனு அளிக்க காவல் துறை அறிவுறுத்தல்.
"ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க தயார்"

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க தயாராக உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு.

பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி மீண்டும்| அமைச்சராகக் கூடாது - மத்திய அரசு வழக்கறிஞர்.

செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் போது கூட இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார் - சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.