The Seithikathir®
14.3K subscribers
39 photos
8 videos
172 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட சோக நிகழ்வு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழாவை ஒட்டி பைக்கில் எடுத்து வரப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

பைக்கில் வைத்து நாட்டு வெடியை கொண்டு சென்றபோது சாலையில் வெடித்த பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பட்டத்தில் நாட்டு வெடி சிதறியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதி.

இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் விசாரணை.
குறள் எண் : ௨௨௨(222)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை

குறள் :
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.


உரை :
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

English :
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௩)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
26/04/25
📚📚📚🌹📚📚📚

ஒரு சமூகத்தின்
வளர்ச்சியை அதில் வாழும்
பெண்கள் அடைந்த
வளர்ச்சியைக் கொண்டு
அளவிடலாம்.

- அம்பேத்கர் -

📚📚📚🌹📚📚📚
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:

இந்தியாவோட எந்த மூலைக்கு நீங்க பணியாற்ற போனாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனசுல வெச்சு, ஏழை எளிய மக்களோட உயர்வுக்காகப் பாடுபடுங்க.

உங்களோட சிந்தனையால நல்ல மாற்றங்கள் ஏற்பட்டா, மக்களோட மனசுல ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்.

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கல்விதான் நம் ஆயுதம்; எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது.

தமிழ்நாட்டிற்கென அறிவு முகம் இருக்கிறது; தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தனி மதிப்புள்ளது.

எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் வெற்றிபெறவே நான் முதல்வன் திட்டம்.

அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

மக்களின் மனதில் நாம் இடம்பெற வேண்டும்; மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும்.

கடமையை நிறைவேற்றிய தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
51,000 பணி நியமன கடிதத்தை வழங்கினார் மோடி.

அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி.

51,236 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை காணொளி மூலம் வழங்கினார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற 15ஆவது வேலைவாய்ப்புத் திருவிழாவில் மோடி பங்கேற்பு.
வலுக்கட்டாயமாக கடன் வசூலைத் தடுக்க புதிய மசோதா.

கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா.

தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை- சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணை இன்றி நேரடியாக சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது, அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம், 01.04.2025 முதல் ரூ.30,000 ல் இருந்து ரூ.35,000 என உயர்கிறது.

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மருத்துவப் படி ரூ.75,000இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு- பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவிப்பு..

தயார் நிலையில் இருக்கிறோம் - இந்திய கடற்படை
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு விதித்தது மத்திய அரசு.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

சார்க் விசாவை வைத்திருப்போரை நாளை மறுதினத்துக்குள் வெளியேற்ற வேண்டும்.

விசா ஆன் அரைவல், வணிக விசா, மாணவர் விசா வைத்திருப்போர் நாளைக்குள் வெளியேற வேண்டும்.

மருத்துவ விசாவை வைத்திருப்போருக்கு 29-ஆம் தேதி வரை கெடு - புதிதாக விசா வழங்கப்படாது என அறிவிப்பு.
சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தனியார் நிறுவன பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?

கடலூரில் நிலத்தடி நீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளது.

கடலூர் என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தால் குடிநீர் மாசடைந்துள்ளது, உடனே என்எல்சியை மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.
தொடங்கியது தவெக கருத்தரங்கம்.

கோவையில் தவெக முகவர்களுக்கான கருத்தரங்கு துவங்கிய நிலையில் மேடைக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.

கூட்டத்திற்கு வந்துள்ள தவெக நிர்வாகிகளை பார்த்து தவெக தலைவர் விஜய் கை அசைத்து உற்சாகம்.

மேடைக்கு வந்த விஜய்க்கு கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
“மக்களை ஏமாற்றி இனி ஆட்சியை பிடிக்க முடியாது”- விஜய்.

ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே; இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சிக்கு வர முடியாது.

உங்களுடைய ஆற்றல் எனக்குத் தெரியும்; நம்மிடம் அர்ப்பணிப்பு மிக்க குணம் இருக்கிறது.

நேர்மை, நம்பிக்கை, லட்சியம், உழைக்கும் தெம்பிருக்கிறது; களம் தயாராக உள்ளது; நம்பிக்கையோடு இருங்கள்...வெற்றி நிச்சயம்- தவெக முகவர்களுக்கான கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேச்சு.

மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை; மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை.
IPL Update

KKR vs PBKS மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது
குறள் எண் : ௨௨௩(223)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை

குறள் :
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.


உரை :
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.

English :
(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the mad of noble birth.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௪)
தமிழ் வாழ்க
பாகிஸ்தானியர்களுக்கான கெடு இன்றுடன் நிறைவு.

மருத்துவ விசா தவிர, பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானிய பெண் தொடர்ந்த வழக்கை, டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய இணையதளத்தை தொடங்கியது தேசிய தேர்வு முகமை.

NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம்.

ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை.

சென்னையை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தம்.

ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் புறம்போக்கு பட்டா நடைமுறையில் திருத்தம்.

புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு.

ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
பஹல்காம் தாக்குதல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவியதாக குல்காம் மாவட்டத்தின் கைமோ பகுதியில் இரண்டு பேர் கைது.