The Seithikathir®
14.3K subscribers
38 photos
6 videos
166 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
பாகிஸ்தானியர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து.

இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்தியா வந்து சேருமாறும் மத்திய அரசு அறிவுறுத்தல்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் 27-ந்தேதிக்குப் பின் செல்லாது.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது- மத்திய அரசு.

மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வந்தவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசா ஏப்ரல் 29-ந்தேதி வரைதான் செல்லும்-மத்திய அரசு.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு.
பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகிறதா இந்தியா?

போருக்கு தயாராகும் சூழலை வெளிப்படுத்துகிறதா மத்திய அரசின் அடுத்தடுத்த நகர்வுகள்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆலோசித்து
வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

வெளிநாட்டு தூதுவர்களை
அழைத்து, காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்க திட்டம்.

பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற திட்டம்.

ஏவுகணைகள் முதல் ரஃபேல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ள இந்திய ராணுவம்.

இந்திய கடற்பரப்பில் போர் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்பு.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கும் எனத் தகவல்.
பஹல்காம் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

பிரதமர் மோடி உடன் தொலைபேசி மூலம் இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சு

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு
பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் கண்டனம் தெரிவித்தார்

இந்திய மக்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தினருடனும் இஸ்ரேல் துணை நிற்பதாக தெரிவித்தார்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் மௌன அஞ்சலி

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி

இரண்டு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்..!
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் - பாகிஸ்தானுக்கு கடிதம்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக
பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக
கடிதம் அனுப்பியது

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்- பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம்
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு.

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி.

உயிரிழப்புகள் ஏதும் இல்லையென இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தகவல்.
குறள் எண் : ௨௨௧(221)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை

குறள் :
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


உரை :
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

English :
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௨)
தமிழ் வாழ்க
💥 சம்மன்

₹1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED), நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் (IAS) மற்றும் பொது மேலாளர்கள் எஸ். சங்கீதா மற்றும் டி. ராமதுரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது
இன்றைய புத்தக மொழி
25/04/25
📚📚📚🌹📚📚📚

மனிதர்கள் தங்கள்
வாழ்க்கையில்
மிகக் குறைவான நேரத்தையே
தனக்காகச் செலவு செய்கிறார்கள்...
பெரும்பகுதி வாழ்க்கை
அடுத்தவர்களுக்கானது.
வேலைக்கானது,
சம்பாதியத்திற்கானது.
ஒருவகையில் இது
முட்டாள்தனமான செயல்.
இன்னொரு வகையில்
அவனின் வாழ்க்கை
இதனால் தான்
அர்த்தமுள்ளதாகிறது.

- எஸ். ராமகிருஷ்ணன் -

📚📚📚🌹📚📚📚
BREAKING:

உதகையில் ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை, அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு எனத் தகவல்.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியுள்ள துணை வேந்தர்கள் மாநாட்டை, குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பரபரப்பு.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பாதியிலேயே நெல்லை திரும்பினார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. பொறுப்பு துணைவேந்தரும் புறக்கணிப்பதாக அறிவிப்பு.

தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலையில், 6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு; இன்று முதல் மே மாதம் 24ஆம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு 12:07:2025 அன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு இன்று(ஏப்.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

3,935 விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் - 4 தேர்வு.

குரூப் - 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:

அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.

கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.

தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.

ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.

இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதிக்கு சுற்றுலா வந்த மாணவர்களில் 3 பேர் ஆழியார் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

சென்னை பூந்தமல்லி பிசியோதெரபி கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழப்பு.
டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு மேட்டூர் அணையில் பணிகள் நடைபெறுகிறது.

பணிகளை திறம்பட செய்து முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம்.

சிறப்பு தூர்வாரும் பணிகள்
மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்-அமைச்சர் துரைமுருகன்.
🚨 ஆர்பிஐ அறிவுறுத்தல்!

போலி அழைப்புகள் டிஜிட்டல் கைது ஸ்கேம்கள் பணத்தை பறிப்பதற்கானது!

இது போன்ற அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

பதட்டப்படாதீர்கள் ! - டிஜிட்டல் கைது என்பது கிடையாது

எதனையும் பகிராதீர்கள் ! - தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களை எப்போதும் வெளிப்படுத்தாதீர்கள்

பணம் செலுத்தாதீர்கள் !

உடனடியாக cybercrime.gov.in -ல் புகாரளியுங்கள் அல்லது 1930 என்ற எண்ணை உதவிக்கு அழையுங்கள்

📢 90ஆவது ஆண்டுவிழாவில் ஆர்பிஐ சொல்கிறது …. விழிப்பு பெறுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் !

🔗 மேலதிக விவரங்களுக்கு rbikehtahai.rbi.org.in/da -ஐ பாருங்கள்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சிந்து நதி நீர் வரலாறு! பாகிஸ்தான் பாதிக்கப்படப் போவது எப்படி?

சிந்துநதி பகிர்வு ஒப்பந்த்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக தேசிய அரசு அறிவித்துவிட்டது, இதன் பொருள் இனி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுக்கும் என்பது

வடமேற்கு இந்தியாவின் செழிப்புக்கும் வழமைக்கும் காரணம் சிந்துநதி, இது தனி நதி அல்ல, காவேரி போல் ஏகபட்ட கிளைநதிகளை கொண்டது, இந்தியா எனும் பெயர் சிந்து எனும் பெயரில் இருந்துதான் உருவானது

சி எனும் பெயர் மேற்கே ஹி என மாறும், ஹிந்து ஹிந்துமதம் என சிந்து நதி கரையின் பெயரால்தான் இந்தியா என்றும் இந்துமதம் என்றும் பெயரே உருவாகி வந்தது

அந்த சிந்து நதி 1947ம் ஆண்டும் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்க்கு சென்றது ஆனால் பாகிஸ்தானுக்கு பெரும் அச்சம் இருந்தது அல்லது பெரும் அச்சத்தை உணர்ந்தார்கள்
,
சிந்துநதி என்பது தனியாக உருவாகி வந்தாலும், ராவி, பியாஸ் சட்ஜெஜ், செனாப், நீலம் அல்லது ஜீலம் எனபல நதிகளின் தொகுப்பு தனியாக சிந்து பெரிய ஆறுதான் ஆனால் மிக பெரியது அல்ல துணையாறுகள் அதன் பலன்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அந்த ஆறுகள் உருவாகும் பகுதி எதுவும் பாகிஸ்தானில் இல்லை எல்லாமே இந்தியாவில் அல்லது காஷ்மீரத்தில் இருந்தன‌

அதாவது சிந்துநதி மான்சரோவரேறியில் உருவாகி காஷ்மீர் வழியாக வரும் நதி, அதன் துணையாறுகளான நீலம் நதி காஷ்மீரில் இருந்து வருவது, நீல நதிகரையில்தான் அன்று ஆதிசங்கரரெல்லாம் வழிபட்ட நீல சரஸ்வதி சாரதாதேவியின் கோவில் சாரதா பீடமாக இருந்தது

அதன் நீட்சியாக தட்சசீல பல்கலைகழகம் சிந்துநதிகரையில் இருந்தது

இதை அடுத்து ராவி, பியாஸ், செனாப் எல்லாம் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் உருவாகி வருபவை, சட்லஜ் ஆறு இந்தியாவின் உத்திரகாண்ட் அதாவது கயிலாய மலையில் இருந்து வருவது

ஹிமாலய பகுதிகள் மேற்கு நோக்கி சரிந்திருப்பதால் இவை கிழக்கில் இருந்து மேற்கே செல்லும் நதிகள், மிக மிக செழிப்பான பகுதியாக பஞ்சாப் சிந்து பிரதேசம் மாறவும், அந்த ஆற்றின் முடிவில்தான் ஆசியாவின் சிறந்த துறைமுகமான கராச்சி உண்டு, அமைப்பில் பம்பாயினை விட அதுதான் மிக சிறந்த துறைமுகம்

இப்படி பாகிஸ்தானின் பொருளாதாரமே சிந்துநதியில்தான் உண்டு, பருத்தி , பாசுமதி, கரும்பு, கராச்சி துறைமுகம் என அதுதான் அவர்களின் பலம்

அப்படியான சிந்துவின் நீர் பிடிப்பு மற்றும் வழிகள், நீர் மூலமெல்லாம் இந்தியாவிடம் இருப்பதை கண்டு அப்போதே அஞ்சினார்கள், அவர்கள் முதல் குறி காஷ்மீராக இருந்தது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

காஷ்மீரத்தை பிடித்தால் சிந்து நீலம் என இரு நதிகள் கிடைக்கும் என கருதித்தான் அங்கு பாய்ந்தார்கள், காஷ்மீருக்கு அவர்கள் ஆசைபட காரணம் பலவாக இருப்பினும் முதல் காரணம் ஆற்றுவளம்

அய்யா நேரு இதை அறிந்துதான் அது அவர்களிடமே செல்லட்டும் என்பது போல் இருந்தார் ஆனால் காஷ்மீர் அரசரும் பட்டேல் போன்றோரும் விடவில்லை , இந்திய ராணுவம் முழு காஷ்மீரை கைபற்றவே சென்றது

ஆனால் நேரு பாதி காஷ்மீர் அவர்களுக்கு என்பதில் சரியாக இருந்தார், ஆனாலும் பெரும்பான்மை மிக்க நீர் ஆதார மூலம் இந்தியாவிடமே இருந்தது

சில பல போர்கள் நடத்தியும் தோற்ற பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என கையினை நீட்டியது, நேருவும் பற்றி கொண்டார், சுமார் 9 ஆண்டுகாலம் பேசினார்கள்

அய்யா நேருவுக்கு இந்த சிக்கல் தீர்ந்தால் பாகிஸ்தான் பேசாமல் போய்விடுமோ எனும் அச்சம் இருந்தது போலிருக்கின்றது அதனால் ஜின்னா காலத்தில் தொடங்கிய பேச்சு அவர்கள் சர்வாதிகாரி அயூப்கான் காலம் வரை நீண்டது

பின் செப்டம்பர் 19, 1960ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தார்கள் அதன்படி எல்லா ஆறுகளின் மூலம் இந்தியவாக இருந்தாலும் அது பாகிஸ்தானுக்கு பெருந்தன்மையாக கொடுக்கபட்டது

முதலில் சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன.

இதன் படி கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது, ஆனால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரில் மின்சாரம், குடிநீர் என பயன்படுத்த்லாம் அணை ஏதும் கட்டமுடியாது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அதனால் 90% நீர் அந்த மூன்று ஆறுகளில் இருந்தும் பாகிஸ்தானுக்கே செல்லும்

இங்கே பெரிய கொடுமை என்னவென்றால் நேரு பாகிஸ்தானுக்கு அங்கும் விசுவாசமாக இருந்தார் எந்த அளவு என்றால் நீங்கள் எங்களோடு செய்த ஒப்பந்தத்திற்கு நன்றி என்றும், பெரிய பெரிய அணைகட்டுங்கள் என அள்ளி அள்ளி கொடுத்தார்