The Seithikathir®
14.3K subscribers
35 photos
4 videos
155 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
பஹல்காம் தாக்குதல் - நாளை அனைத்துக்கட்சி கூட்டம்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு.
💥 சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவிற்கு எதிராக இன்று வெளியான இரண்டு தீர்ப்புக்கள், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பல ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை அமலாக்கதுறை விசாரிக்க தடை விதிக்க முடியாது என அறிவித்த உயர்நீதிமன்றம், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

இந்த உத்தரவின் மூலம், துரைமுருகன், அவரது மனைவி சாந்த குமாரி, தம்பி துரை சிங்காரம், மகன் கதிர் ஆனந்த், மற்றும் மருமகள் சங்கீதா ஆகியோர் முன்பு விடுவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது

🔆சொத்து குவிப்பு காலம்: 1996 - 2001 (திமுக ஆட்சி, பொதுப்பணித்துறை அமைச்சர்):இந்த காலகட்டத்தில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் சொத்து குவிப்பு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

🔆வழக்கு பதிவு: 2002 (அதிமுக ஆட்சி):அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

🔆வழக்கில் விடுதலை: 2007 (திமுக ஆட்சி, பொதுப்பணித்துறை அமைச்சர்):திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

🔆மேல் முறையீடு: 2013 (அதிமுக ஆட்சி):அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது.

🔆 மீண்டும் விசாரணைக்கு உத்தரவு: 2025 (திமுக ஆட்சி, நீர்வளத்துறை அமைச்சர்):மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
குறள் எண் : ௨௨௦(220)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஒப்புரவறிதல்

குறள் :
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து .


உரை :
பிறருக்கு உதவுவதால் கேடு வரும் என்றால், அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

English :
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one’s self.

தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௧)
தமிழ் வாழ்க
முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு.

முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை விதித்தது.

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு

உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்த தமிழக அரசு - காரணம் என்ன?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம்.

முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.9,005-க்கு விற்பனை.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவிப்பு.

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று விடுமுறை அறிவிப்பு.
இன்றைய புத்தக மொழி
24/04/25
📚📚📚🌹📚📚📚

ஆண் எரியும்
மெழுகுவர்த்தியை போல
உஷ்ணத்துடன், கொதிப்புடன்,
வேகத்துடன் இருக்கிறான்...
பெண்ணோ அதன்
வெளிச்சத்தைப் போல
கனமற்றதாக, எளிதாகப்
பிரகாசமாகப் பரவுகிறாள்.

- எஸ். ராமகிருஷ்ணன் -
( "மண்டியிடுங்கள் தந்தையே" நூலிலிருந்து)

📚📚📚🌹📚📚📚
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் அருகே உள்ள டுடு பசந்த்கர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு

இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல்

பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்தியாவுடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் ஏப்ரல் 24 - 25 ஆகிய நாட்களில் ஏவுகணை சோதனை நடத்த திட்டம்
💥 நாய் பிரச்சினை: நீதிமன்றம் போட்ட உத்தரவு!

மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் மும்பை உயர் நீதிமன்றத்த்தில் லீலா மனுதாக்கல் செய்தார்.

கடந்த ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
💥 மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

நன்றி: தினமணி
கட்டுரையாளர்: பெ.சிதம்பரநாதன், எழுத்தாளர்.

_ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு._

தமிழக ஆளுநரின் அதிகாரம் குறித்து ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியது என்று தமிழக அரசு வரவேற்றுள்ளது. மற்ற சில மாநிலங்களும் வரவேற்றுள்ளன.

தமிழக ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததையும், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததையும் சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படி பிழையானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்ல, ஆளுநருடைய முடிவு அவருடைய சொந்த அதிருப்தி தொடர்புடையது என்றும், அது நேர்மையானதல்ல என்றும் கடுமையாகத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இதற்கு மேல், மசோதாக்களில் ஆளுநர் கையொப்பமிடுவதற்கு 1 மாதம் எனக் காலக்கெடுவும் நிர்ணயித்து, மசோதாக்களைக் கிடப்பில் போடுவதைத் தடுத்தும் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநருக்கு மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் மூன்று மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இவை இரண்டுக்கும் அப்பால், தாமதமாக்கப்பட்ட மசோதாக்களை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியும் தீர்ப்பளித்துள்ளது.

இவை அனைத்துக்குமான அதிகாரத்தை உச்சநீதிமன்றம் எங்கிருந்து பெற்றுள்ளது என்றால், அரசியல் சாசனத்தின் பிரிவு 200-இலிருந்து பெற்றுள்ளது என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல, மசோதாக்களை உச்சநீதிமன்றமே சட்டமாக்கியதற்கான தனக்கே உரித்தான அதிகாரத்தை அரசியல் சாசனத்தின் பிரிவு 142-இலிருந்து பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

அந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு முழு நீதியை வழங்குவதற்குரிய அதிகாரத்தைத் தந்துள்ளது உண்மை. அரசியல் சாசனம் மௌனமாக உள்ள இடங்களுக்குத் தேவையானதை நிரப்ப இப்பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

சட்டங்கள் வார்த்தை வடிவங்களில் இருந்தாலும், அதற்குள் நிரம்பித் ததும்புகின்ற உணர்வுகள் அந்தச் சட்டத்துக்குக் கூடுதல் வீரியத்தைத் தருவதை மறுக்க முடியாது. சட்டத்தின் வார்த்தைகளின்படி வழங்கப்படும் தீர்ப்பைவிட, சட்டத்தின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு வழங்கப்படும் தீர்ப்புக்குத்தான் வரவேற்பும் கிடைக்கிறது. வழங்கிய நீதிபதிகளுக்கு வாழ்த்தும் கிடைக்கிறது.

நீதிபதிகள் பணிபுரிவது நீதிமன்றங்களாக ருந்தாலும், அவர்கள் வாழ்வது சமுதாயத்தில்தான். சமுதாயத்தில் நிகழும் சகலவிதமான சம்பவங்கள் குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் அவர்களுக்கும் தகவல்கள் தெரியத்தான் செய்யும். வன்கொடுமை குற்றங்களைத் தகவல்களாக நாம் அறிகிறோம். நீதிபதிகளும் அறியத்தான் செய்வார்கள். வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், சம்பவங்களைப் பற்றிய பொதுவெளித் தகவல்கள் நீதிபதிகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது.

ஓர் இளம் பெண்ணின் மார்பகங்களைத் தொடுவது பாலியல் குற்றமாகாது என்ற நீதிபதி ஒருவரின் தீர்ப்பு, எத்தகைய கடுமையான சமுதாய விமர்சனத்துக்கு உள்ளானது என்பதை அண்மையில் நாம் பார்த்தோம். தில்லியில் நிர்பயா பெண் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடே வரவேற்றுள்ளது. ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பார்ப்பதுகூட பாலியல் குற்றத்துக்குரியதுதான் என்ற மற்றுமொரு நீதிபதியின் தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதேபோல பாபர் மசூதி ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் எத்தனை முக்கியமானது என்பதையும் சிந்திக்கத்தான் வேண்டும். 2019- இல் 5 நீதிபதிகள் வழங்கிய 929 பக்கத் தீர்ப்பு அது.

யார் அந்த நீதிபதிகள்? நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சரத் அரவிந்த் பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர்தான் அவர்கள்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ரஞ்சன் கோகோய் பௌத்த மதம் சார்ந்தவர்; எஸ்.ஏ. பாப்டே ஹிந்து மதம் சார்ந்தவர்; அப்துல் நசீர் இஸ்லாம் மதம் சார்ந்தவர்; சந்திரசூட் ஹிந்து மதம் சார்ந்தவர்; சாந்தி பூஷண் ஹிந்து மதம் சார்ந்தவர். தீர்ப்புக்கு முன் 5 நீதிபதிகளும் கூடி விவாதித்த முதல் விஷயம் உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பால், தேசம் முழுவதும் மதக் கலவரம் வெடித்து சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாகும்.
அத்துடன் இதில் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாமல் இருசாராரும் திருப்தியடையும் வகையில்தான் தீர்ப்பு இருக்க வேண்டும் என்று 5 நீதிபதிகளும் ஒப்புக்கொண்டபடிதான் அந்தத் தீர்ப்பு அமைந்தது அனைவருக்கும் தெரியும்.

சட்டத்தின் வார்த்தைகளின்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டியதையும் குறித்து அந்தத் தீர்ப்பு இரண்டாம் இடத்துக்கே தள்ளி வைத்தது. முதலிடம், தேசத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருப்பதாகவே அமைந்தது. அதனால் நீதிமன்றத் தீர்ப்பு என்பது சம்பவம் சார்ந்ததாக இருப்பதைவிட, சமுதாய அமைதி சார்ந்ததாக இருப்பதுதான் மேலானது.

உச்சநீதிமன்றம் தனது இப்போதைய தீர்ப்பில் தமிழக ஆளுநருக்கு பாக்கெட் வீட்டோ என்ற ரத்து அதிகாரம் கிடையவே கிடையாது என்று எள்ளி நகையாடியதை எதிர்த்து குடியரசு துணைத் தலைவர் தன்கர், “உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் பார்லிமெண்டா?" என்று கூறியுள்ளது, சரியான பதிலடியாக அமைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல், அரசியல் சாசனப் பிரிவு - 142 என்பதை அணுசக்தி ஏவுகணையாக உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்துக்கும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளின் நியமனங்களை கொலீஜியம் என்ற நீதிபதிகள் குழுதான் பரிந்துரை செய்து வருகிறது. உண்மையில், இந்த கொலீஜியம் என்பது தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட ஒரு குழு; இது அரசியல் சாசனத்தில் உள்ளது அல்ல; உச்சநீதிமன்ற நீதிபதிகளே உருவாக்கிக் கொண்ட தனி அமைப்பு.

இதில், நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்து வருகிறார்கள். இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும். கொலீஜியம் முறையின்மூலம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. ஆனாலும், அதைத் தட்டிக் கேட்க நாடாளுமன்றம் முன்வரவில்லை.

இதை மாற்றுவதற்காக தேசிய நீதியியல் நியமனக் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியதை கொலீஜியம் ஒப்புக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றமே கொலீஜியம் என்ற தன்னிச்சையான குழுமூலம் செயல்படுவது குறித்து உச்சநீதிமன்றம் எப்போதும் கவலைப்படவில்லை.

இத்தகைய உச்சநீதிமன்றம்தான் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் மசோதாக்களில் கையொப்பமிட காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி தற்போது சந்தர்ப்பவாதத்தின் பலனைப் பெற்றுள்ளதாகவே இது கருதப்படுகிறது.

உச்சநீதிமன்றம் உண்மையில் காலக்கெடு தீர்ப்பை வழங்க விரும்பியிருந்தால், நாடாளுமன்றத்துக்குப் பரிந்து செய்து அதை அறிவுறுத்தியிருக்க வேண்டும். அதுதான் பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும், அவ்வாறு செய்யாததால், நாடாளுமன்றத்தைவிட உச்சநீதிமன்றமே மேலானது எனக் காட்டுவதற்கான முயற்சியாகவே இது கருதப்படும்.

தமிழக சட்டப்பேரவை இரண்டாவது முறையும் நிறைவேற்றிய 10 மசோதாக்களைத் தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டது சட்டவிரோதம் எனவும், அரசியல் சாசனப்படி தவறானது எனவும் கூறப்பட்ட தீர்ப்பு, தமிழகத்தின் கட்சி ஆட்சிக்குத்தான் வெற்றி. கட்சி ஆட்சி நிறைவேற்றிய அந்த மசோதாக்கள் ஆளுநர் அதிகாரத்தைப் பறிப்பதற்கான உள்நோக்கம் உள்ளவை. ஆளுநர் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறும்போது, ஆளுநருடைய பணியின் நோக்கம் கேள்விக்குரியதாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்கள் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்புடையவையாகும். அந்த நியமனங்கள் ஆளுநர்வசம் இருக்கும்வரை விமர்சனங்களுக்கு உள்ளாக வாய்ப்பில்லை. அவை முதல்வரின் அதிகாரத்துக்கு மாற்றப்படுமானால், விமர்சனத்துக்கு உள்ளாகுமோ என்கிற சந்தேகத்தை ஒதுக்கிவிட முடியுமா? மரபு மீறப்பட்டபோது மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றமே நிர்ணயித்துவிட்டதால், இவை இரண்டுமே இனிமேல் அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு உள்ளாகும் அமைப்புகளாகியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளின் பெரும்பான்மையில்தான் அரசியல் சாசனத்தில் இல்லாதவை, திருத்தங்கள் மூலமாக சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன.

அப்படித்தான் இதுவரை 127 திருத்தங்களை நாம் அரசியல் சாசனத்தில் இணைத்துள்ளோம்.

உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் காலக்கெடு தீர்ப்பு, அரசியல் சாசனத்தில் இடம்பெறக் கூடிய திருத்தங்களா? அல்லது உச்சநீதிமன்றத் தீர்ப்பாக மட்டுமே அவை நீடிக்கக் கூடியவையா? அரசியல் சாசனத்தில் ஆளுநர் அதிகாரம் மௌனமாக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், அதற்கான தீர்வு உச்சநீதிமன்றமே நாடாளுமன்றத்தைவிட உயர்வானது என்பதாக உருவாகிவிட்டதாகாதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றமே நாடாளுமன்றம். நீதிபதிகள் நியமிக்கப்படுபவர்கள் மட்டுமே. ஆளுநரும் நியமிக்கப்படுபவர்தான் என்றால், நீதிபதிகளும் அப்படித்தானே?

இரு நீதிபதிகளின் இந்தத் தீர்ப்புக்கு 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் மறு தீர்ப்புதான் தீர்வு.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் = தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டை

துப்பாக்கிச் சண்டையில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிர கண்காணிப்பு

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது“

உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்

கிட்டத்தட்ட 130 தீவிரவாதிகள் வரை உள்ளே இருப்பதாக தகவல்

பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை
💥 இந்தியா நாடகம் ஆடுகிறது - பழிபோடும் லஷ்கர்-இ-தொய்பா

"காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை" என லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் இந்தியா மீது பழிபோடுகிறார்.

பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் - லஷ்கர்-இ-தொய்பா

உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் என, தாக்குதலை திசைதிருப்பும் லஷ்கர்-இ-தொய்பா

பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில் மறுப்பு தெரிவித்து நாடகம்.

இந்தியா நாடகம் ஆடுகிறது, இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள் என லஷ்கர்-இ-தொய்பா பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயற்சி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2வது சொத்து குவிப்பு வழக்கில் இருந்தும் அமைச்சர் துரைமுருகனை வேலூர் நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்