The Seithikathir®
14.3K subscribers
33 photos
4 videos
153 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
பிப்.14இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்கு பின் வீடு திரும்பியிருந்தார்.

ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார் போப் பிரான்சிஸ்.

தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ்தான்.

2013 மார்ச் 13இல் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்தார்.

போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ்.
💥 திலுப்பித் திலுப்பி

நன்றி: பெருமாள் முருகன், எழுத்தாளர்.

திலுப்பித் திலுப்பி
மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச் சொன்ன பதில் இரண்டு விதங்களில் என்னைக் கவர்ந்தது. அந்தப் பதில்:

‘கூட்டணி அரசு என்று சொல்லவே இல்ல. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டு ஏதெதோ வித்தையெல்லாம் காட்டறீங்க. தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுருங்க. அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கூட்டணி, ஆட்சியமைக்கும். புருஞ்சுக்கங்க. ஏங்க திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க. எதாவது விறுவிறுப்பான செய்தி உங்களுக்கு வேணும். எங்ககிட்டருந்து புடுங்க வேணும். அப்படியெல்லாம் அவர் சொல்லவே இல்ல. திலுப்பியும் சொன்னாரு…’

> செய்திக்கதிர்: https://chat.whatsapp.com/EgP3nlbdje70AaoN5so3Jh

அரசியல்வாதிகள் மொழியைக் கையாளும் விதம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சிவிடும் போல. ‘கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்னும் தொடர் இருவிதமாகப் பொருள் கொள்ளச் செய்கிறது. ‘கூட்டணியாட்சி அமைக்கும்’ என்று இருசொற்களையும் இணைத்துச் சொன்னால் ஒருபொருள். ‘கூட்டணி, ஆட்சியமைக்கும்’ எனக் கூட்டணியில் நிறுத்தம் கொடுத்து ‘ஆட்சியமைக்கும்’ என்று சேர்த்தால் இன்னொரு பொருள். இதன் மூலமான ஆங்கிலத் தொடர் எப்படி அர்த்தம் தருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழ்த் தொடரைப் பிரித்து, நிறுத்தி அவர் சொன்னது வியப்பாக இருந்தது. அரசியல்வாதிகளுக்கு அனுபவத்தில் சமாளிப்பும் சமயோசிதமும் கைகூடி வருமோ?

அவர் பேச்சில் பயன்படுத்திய இன்னொரு சொல் ஏளனத்திற்கு உள்ளாயிற்று. ‘திலுப்பித் திலுப்பி அதுக்குள்ள வர்றீங்க’, ‘திலுப்பியும் சொன்னாரு’ என இரண்டு இடங்களில் மூன்று முறை ‘திலுப்பி’ என்று சொன்னார். ‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ அளவு இது புகழ் பெறவில்லை எனினும் அவர் உச்சரிப்பைக் கேலி செய்து வந்த பதிவுகள் சிலவற்றைக் கண்டேன். அந்தச் சொல் வருமிடத்தை மட்டும் வெட்டி எடுத்துக் காணொலியாகப் போட்டுப் பரப்பியவர்களும் இருந்தனர். ஒருகட்சித் தலைவர் தவறு செய்தால் இன்னொரு கட்சிக்குக் கொண்டாட்டமாகிறது. சரி, அந்த அரசியலுக்குள் போக வேண்டாம்.

‘திலுப்பி’ என்று அவர் சொன்னது தவறல்ல. ‘மீண்டும் மீண்டும்’ என்னும் பொருளில் அவர் அதைக் கையாண்டார். ‘திருப்பி’ என்று பொதுவழக்கில் உள்ள சொல்லைத்தான் ‘திலுப்பி’ என்று அவர் உச்சரித்தார். இது கொங்கு வட்டார வழக்கில் சாதாரணமாக வழங்கும் சொல்தான். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். என் தலைமுறையினரில் சிலரும் கூடத் ‘திலுப்பி’ என்று சொல்வார்கள்.

> செய்திக்கதிர்: https://chat.whatsapp.com/EgP3nlbdje70AaoN5so3Jh

‘சொன்னதையே திலுப்பித் திலுப்பிச் சொல்றான்’

என்பதில் ‘மீண்டும் மீண்டும்’ எனப் பொருள்படுகிறது.

‘திலுப்பியும் வேணும்னு கேக்கறான்’

என்பதில் ‘மீண்டும்’ அல்லது ‘மறுபடியும்’ என்று பொருள் கொள்ளலாம்.

‘கட்டலத் திலுப்பிப் போடு’, ‘மடையத் திலுப்பி உடு’

என்பவற்றில் ‘மாற்று’ எனப் பொருள் வருகிறது.

‘திருப்பி’ என்னும் சொல்லை இப்படியான பொருள்களில் ‘திலுப்பி’ என்று ஒலிப்பது கொங்குப் பகுதி வழக்காகும். பிற வட்டார மொழியில் இந்த ஒலிப்பு முறை இருப்பதாகத் தெரியவில்லை.

ஓர் எழுத்து வருமிடத்தில் பதிலாக வேறொரு எழுத்து வருவதைத் தமிழ் இலக்கணம் ‘போலி’ என்று சொல்லும். அதை வகைப்படுத்தியும் விளக்குவர். ஒரு எழுத்துக்கு எந்த எழுத்து வேண்டுமானாலும் போலியாக அமைந்துவிடாது. இனம், அண்மை, ஒலிப்பு ஒற்றுமை முதலிய காரணங்கள் இருக்கும். இதை மொழியியலும் வகைப்படுத்தி விளக்குகிறது. அவற்றில் ‘ரகரம் லகரமாதல்’ ஒன்று. ரகரமும் லகரமும் இடையின எழுத்துக்கள். யரலவழள என்னும் வரிசையில் ரகரமும் லகரமும் அடுத்தடுத்து அமைகின்றன. ஆகவே ரகரம் வருமிடத்தில் லகரம் வருவது இயல்பானது. அதே போல லகரம் வருமிடத்தில் ரகரம் அமைவதும் உண்டு.

லகரம் ரகரமாதலுக்குச் செய்யுளிலேயே சான்றுகள் உள்ளன.

பந்தல் – பந்தர்

குடல் – குடர்

சாம்பல் – சாம்பர்

கூதல் – கூதர்

ஆகியவற்றைச் சான்றாகச் சொல்லலாம்.

திலுப்பித் திலுப்பி

லாரியை ‘ராரி’ என்று சொல்லும் வழக்கம் இன்றைய பேச்சு மொழியில் இருக்கிறது. ரகரம் லகரமாதலுக்கும் பேச்சு வழக்கில் சில சான்றுகள் கிடைக்கின்றன. சமீபத்தில் ‘லப்பர் பந்து’ என்னும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வந்தது. ‘ரப்பர் பந்து’ தான். பேச்சு வழக்கில் ‘லப்பர் பந்து.’ பேச்சு வழக்கையே தலைப்பாகக் கொடுத்துவிட்டனர். பள்ளிக் குழந்தைகள் எழுதியதை அழிக்கப் பயன்படுத்தும் ரப்பரை ‘அழிலப்பர்’ என்று சொல்வதைக் கேட்கலாம். பென்சில் லப்பர், இங்க் லப்பர் ஆகியனவும் உண்டு.
‘மரக்கறி’ என்பதை ‘மலக்கறி’ எனச் சில பகுதிகளில் வழங்குவதாகவும் தெரிகிறது.

திலுப்பி என்பதும் லப்பர் போன்ற மாற்றம்தான். திலுப்பி என்று ஒலிப்பது வட்டார வழக்கு. தவறல்ல.
10ஆம் வகுப்பு சமூக அறிவியல்- ஒரு மதிப்பெண் தர ஆணை.

"10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆவது கேள்விக்கு விடை அளித்திருந்தாலே ஒரு மதிப்பெண் தரப்படும்” - அரசு தேர்வுகள் துறை

கேள்வியில் இருந்த வாக்கியங்கள் முரணாக உள்ளதால் மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில் தேர்வுகள் துறை தகவல்.
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு unmo.ac.in என்ற இணையதளத்தில் நாளை மறுநாள் (ஏப்.23) முதல் விண்ணப்பிக்கலாம்.
💥 சிறுவனை காப்பாற்றிய இளைஞர் மோதிரம் பரிசளித்த இ.பி.எஸ்.,

சென்னையில் மழைநீரில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய நிலையில், உயிரை பணயம் சிறுவனை மீட்ட இளைஞர் கண்ணனுக்கு தங்க மோதிரம் அணிவித்த இ.பி.எஸ்.,
💥 மோடி - வான்ஸ் சந்திப்பு

டில்லியில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு; இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு.
Tech News

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

➡️Microsoft releases 1-Bit compact LLM that runs on CPUs.

➡️Indian Telecom providers likely to increase another 10-20% Tariffs by Dec 2025.

➡️NASA prepares to launch first Quantum Sensor for measuring gravity from Orbit.

➡️Microsoft just taught AI to click, type, and navigate like a human being.

➡️Gigabyte launches GeForce RTX 5060 and RTX 5060 Ti series graphics cards.

➡️Google plans new job cuts, Indian employees from Hyderabad and Bengaluru offices will be impacted.

➡️Apple is using your emails to train Apple Intelligence, and Apple says it's still private.

➡️Perplexity set to replace Gemini on Samsung and Motorola smartphones.
💥 ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு விசிக கடும் கண்டனம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“ஆளுநர் ஆர்.என். ரவியின் போக்குகளை உச்சநீதிமன்றம் கண்டித்த பின்பும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துளியும் மதிக்காமல், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அடாவடியாகவும், சட்டவிரோதமாகவும் செயல்படும் அவரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆளுநரின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு

சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும். ரவியை உடனே பதவியில்

இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும்”- திருமாவளவன் எம்.பி
💥 பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“மாராட்டியத்தில் 3வது மொழியாக இந்தியை திணிக்க அம்மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து மராத்தி மட்டுமே கட்டாயம் என அறிவித்துள்ளார். மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு ஏற்கிறதா?

NEPயின் படி 3வது மொழியை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியமில்லை என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்குமா? தமிழ்நாட்டுக்கான ரூ.2152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது என்ன காரணத்திற்காக?”- மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
💥 “இதுக்கு இல்லையா சார் ஒரு End-u"

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மறுசீரமைப்பு நடவடிக்கையாக Microsoft நிறுவனத்தில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் பணியாற்றும் சுமார் 1,000 ஊழியர்களை, இந்தாண்டு மே மாதத்தில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

இந்நிறுவனம் இந்தாண்டே 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தொழில் போட்டி, நிதிச்சுமை போன்ற காரணங்களால் இந்த வருடத்தில் மட்டும் 111 நிறுவனங்கள் 28,728 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
💥 பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது இனித்ததா?

முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக ஒரு வருடம் வைத்திருந்தபோது, திமுகவிற்கு பாஜக நல்ல கட்சியாகத் தென்பட்டது; இப்போது அதிமுக -பாஜக கூட்டணி வைத்தால், ஏன் என்று கேட்கிறார்

பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது திமுகவுக்கு இனித்தது; இப்போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 3 மாதம் சிறை

அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் காங். எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை - நாகர்கோவில் நீதிமன்றம்

எம்எல்ஏ ராஜேஷ் குமார் உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 100 அபராதமும் விதிப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலால் சலசலப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“கூடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும்” - அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் கோரிக்கை

"எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது; மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தொழிற்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே என் துறை வசம்

டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழிற்துறை வசமே உள்ள அசாதாரண நிலை தொடர்கிறது; நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேதனை

"துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள்; உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேர்மறையான பதிலை வழங்க வேண்டும்" - சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தல்
💥 கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்ட கட்சி கூட்டத்தில் காலியான இருக்கைகள் அதிகம் இருந்ததால் அதிருப்தி அடைந்த கட்சி தலைமை மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

காந்தி, அம்பேத்கரை நினைவு கூரும் வகையில் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தல்சாகார் மைதானத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கு போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகளில் யாருமே இல்லை. ஆட்கள் இன்றி இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது.

அதிக மக்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் கூட்டம் கூடவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைய, அதன் விளைவாக பக்சர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ்குமார் பாண்டேவை சஸ்பெண்ட் செய்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கழிவறைக்கு கக்கன், அண்ணா பெயர்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு @mkstalin, அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?

உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 அனுமதி கேட்டால் இளையராஜா கொடுப்பார்!

ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போதும், இசைக்கான உரிமையை இளையராஜா முன்னதாகவே வாங்கிவிடுவார்; ரூ.7 கோடி கொடுத்தவன் பாட்டு ஹிட் ஆகல. எங்க பாட்டு போட்டாதான் கைதட்டல் வருகிறது.

எங்களுக்கு பணத்து ஆசை இல்லை. கொட்டிக்கிடக்கிறது; பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்தால் இளையராஜா இலவசமாக கொடுப்பார். அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் எப்படி?

- கங்கை அமரன், இசையமைப்பாளர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 போறதுண்ணா போங்க... விஜய் உங்களைச் சேர்க்கமாட்டார்...!

நா.த.க.,வினர் வேறு கட்சிக்குப் போவதற்கு பதில் என் தம்பி [விஜய்] கட்சிக்குப் போகட்டும்; அவர் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில் சொல்கிறேன்.

அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டார்கள் என்று நினைத்து அவரும் உங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்.

பா.ம.க., மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: சீமான் பேட்டி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
போப் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்- மத்திய அரசு

துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.

நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது- மத்திய அரசு.
நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை.

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை 5 இடங்களாக மாற்றம்.

கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.