BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ரகசிய மாநாட்டில் என்ன நடக்கும்?

போப் பிரான்சிஸ் மறைவால், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது. கார்டினல்கள் வாக்களிக்கும் நடைமுறை மற்றும் புகை போக்கிகள் மூலம் முடிவை அறிவிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை  செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சர்ச்சைகள் இளையராஜா முதல் ரஹ்மான் வரை தொடர்வது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"3 வயது குழந்தைக்கும் சாதிக்கொடுமை" கோவில் வழிபாட்டால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித் மக்கள் - பிபிசி தமிழ் களஆய்வு

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் வழிபட்ட நிலையில், பரிகார பூஜை செய்தால் தான் கோவிலுக்குள் வர முடியும் என மற்ற பிரிவினர் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் இறுதி சடங்குகளில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு - கண்ணீர் அஞ்சலி செலுத்திய வாடிகன் நகரம்

ஒன்றரை மணிநேரம் நீடித்த போப்பின் இறுதிச்சடங்கு, எளிமையான முறையில் நடைபெற்றது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் பிராந்தியங்களில் நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும், அதற்கு முழு வீச்சில்பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸ் வாடிகனுக்கு அழைத்து வந்த சிரியா அகதி எப்படி இருக்கிறார்?

போப் பிரான்சிஸ், 2016இல் லெஸ்போஸின் கிரீக் தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது அவர்களில் 12 பேரை இத்தாலிக்கு தன்னுடன் வருமாறு கூறி உலகுக்கு ஆச்சர்யமூட்டினார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
புதிய போப் தேர்வின் போது வாடிகனில் வெளியாகும் புகையின் ரகசியம் என்ன?

புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான தேர்தலில், சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து வெளியாகும் புகை முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தப் புகையின் பின்னால் இருக்கும் வரலாறும் அறிவியல் ரகசியமும் என்ன தெரியுமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நதி நீர்: இந்தியா தண்ணீரை 'ஆயுதமாக' பயன்படுத்த முடியுமா?

சிந்து நதி மற்றும் அதன் இரு துணை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீரை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் - என்ன கூறப்பட்டுள்ளது?

இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'புதின் என்னை தவறாக வழிநடத்துகிறார் என்று தோன்றுகிறது' - ஸெலென்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் கூறியது என்ன?

வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தொடர்ந்து 'யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் விருப்பம்' குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மனித உடலின் 'நிலை மின்சாரத்தால்' பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுமா? - அமைச்சர் கூறியது உண்மையா?

பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்திற்கு மனித உடலில் இருக்கும் நிலை மின்சாரமே காரணமென்று தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது உண்மையா? அறிவியல் கூறுவது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பட்டியல் சமூகத்தினர் கோவிலுக்கு வந்ததால் பரிகாரமா? விழுப்புரம் மேல்பாதி சர்ச்சை

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர்.என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஆணாக வேடமிட்டு போப் ஆண்டவர் ஆன பெண் குறித்த வரலாறு உண்மையா?

ஐரோப்பாவின் இடைக்கால வரலாற்றில் ஜோனா என்ற பெண் ஆண் வேடமிட்டு போப் ஜோன் என்ற பெயரில் போப் ஆண்டவர் ஆனதாகச் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிக்கலில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி? வழக்குகளை எதிர்கொள்ளும் மேலும் 7 அமைச்சர்கள் யார்?

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அவரது பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
துப்பாக்கிமுனையிலிருந்து நண்பர்களை காப்பாற்றியவர் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து எப்படி?

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரமௌலியும் அதில் ஒருவர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஒரே மேடையில் இந்து,முஸ்லிம் திருமண வரவேற்பு - ஒற்றுமைக்கு முன்னுதாரணம்

ராஜஸ்தானின் கோட்டாவில் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்கள் தங்களின் மகன்களுக்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியது ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் விளக்குவதாக உள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஐஎன்எஸ் விக்ராந்த்: "அரபிக்கடலின் காவலன்"-பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல்

ஐ.என்.எஸ். விக்ராந்த்: இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிப் போர்க்கப்பலின் பலம் என்ன? பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவின் போர்க்கால தயார் நடவடிக்கைகள் என்னென்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சங்கரன் நாயர்: ஜாலியன் வாலாபாக் வழக்கில் பிரிட்டிஷாரை எதிர்த்த சென்னை வழக்கறிஞர்

ஒரே ஒரு இந்தியர் மட்டும் பிரிட்டனுக்கு சென்று, ஜாலியன் வாலாபாத் படுகொலை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கை பிரிட்டன் நீதிமன்றத்தில் தனியாக வாதிட்டார். இந்த வழக்கு ஐந்தரை வாரங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எப்படி இருக்கும்? இந்தியாவின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ராணுவ ரீதியாக பதிலடி கொடுத்தால், இதற்கான எதிர்வினையை பாகிஸ்தானிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இது தீர்க்க முடியாத ராணுவ நடவடிக்கைகளுக்கும் வழி வகுக்கலாம் என்கிறார் சௌதிக் பிஸ்வாஸ். மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் ஆராய்கிறார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil