BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
மியான்மரில் ரகசிய வானொலி நிலையம் ராணுவத்திடமிருந்து மக்களை எப்படி பாதுகாக்கிறது?

மியான்மர் நாட்டில் 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மக்கள் பலர் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட முன்வந்துள்ளனர். கோ டின்ட்டின் ஆயுதம் ஃபெடரல் எஃப்எம் எனும் ஒலிபரப்பு ஊடகம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஹல்காம் தாக்குதல்: மோதி அரசின் ஜம்மு - காஷ்மீர் கொள்கை தோல்வியா? - ஓர் அலசல்

பஹல்காம் தாக்குதல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய கேள்வி மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை பற்றியது. அதாவது, அரசின் கொள்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது? இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் வருமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி - இன்றைய முக்கிய செய்திகள்

அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேட்டுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடைபெற்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில கடுமையான நடவடிக்கைகள எடுத்தது.அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் சில முடிவுகளை எடுத்துள்ளது.அதில் ஒன்று தான், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை மூடுவது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கொலையாளியின் தோலில் பைண்டிங் செய்யப்பட்ட 200 ஆண்டு பழமையான புத்தகம் - அதிர்ச்சியூட்டும் பின்னணி

சமீபத்தில், சஃபோல்க் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மோசமான கொலைக்காக தூக்கிலிடப்பட்ட ஒருவரின் தோலைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இந்தியாவுடன் பதற்றம்: பாகிஸ்தானின் 2 முக்கிய கவலைகள் இதுவா?

இந்தியாவும் பாகிஸ்தானும் மறுபடியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அங்கிருந்து மோதலுக்கான வாய்ப்புகள் இன்னும் விரிவடையலாம்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல முடிவுகள் எடுத்தது இந்தியா. பதிலடியாக அதற்கு மறுநாள் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல முடிவுகள் எடுத்தது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்கியது - உலகத் தலைவர்கள் வருகை

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நதிநீரை இந்தியா உடனே நிறுத்த முடியுமா? - பாகிஸ்தான் அடையப்போகும் பாதிப்புகள் என்ன?

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் உடனடியாக பாகிஸ்தானை நோக்கிப் பாயும் தண்ணீர் அனைத்தையும் நிறுத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை என்பதை நிபுணர்கள் நினைவு கூர்கின்றனர். அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
விஜயை பார்த்ததும் அவரது வாகனத்தின் மேல் ஏறிய தொண்டர்கள்

கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கமிட்டி மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ரகசிய மாநாட்டில் என்ன நடக்கும்?

போப் பிரான்சிஸ் மறைவால், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது. கார்டினல்கள் வாக்களிக்கும் நடைமுறை மற்றும் புகை போக்கிகள் மூலம் முடிவை அறிவிக்கும் நடைமுறை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை  செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சர்ச்சைகள் இளையராஜா முதல் ரஹ்மான் வரை தொடர்வது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"3 வயது குழந்தைக்கும் சாதிக்கொடுமை" கோவில் வழிபாட்டால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தலித் மக்கள் - பிபிசி தமிழ் களஆய்வு

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் வழிபட்ட நிலையில், பரிகார பூஜை செய்தால் தான் கோவிலுக்குள் வர முடியும் என மற்ற பிரிவினர் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் இறுதி சடங்குகளில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு - கண்ணீர் அஞ்சலி செலுத்திய வாடிகன் நகரம்

ஒன்றரை மணிநேரம் நீடித்த போப்பின் இறுதிச்சடங்கு, எளிமையான முறையில் நடைபெற்றது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
"இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் பிராந்தியங்களில் நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும், அதற்கு முழு வீச்சில்பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
போப் பிரான்சிஸ் வாடிகனுக்கு அழைத்து வந்த சிரியா அகதி எப்படி இருக்கிறார்?

போப் பிரான்சிஸ், 2016இல் லெஸ்போஸின் கிரீக் தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது அவர்களில் 12 பேரை இத்தாலிக்கு தன்னுடன் வருமாறு கூறி உலகுக்கு ஆச்சர்யமூட்டினார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
புதிய போப் தேர்வின் போது வாடிகனில் வெளியாகும் புகையின் ரகசியம் என்ன?

புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கான தேர்தலில், சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து வெளியாகும் புகை முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தப் புகையின் பின்னால் இருக்கும் வரலாறும் அறிவியல் ரகசியமும் என்ன தெரியுமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிந்து நதி நீர்: இந்தியா தண்ணீரை 'ஆயுதமாக' பயன்படுத்த முடியுமா?

சிந்து நதி மற்றும் அதன் இரு துணை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தண்ணீரை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்தும் வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் - என்ன கூறப்பட்டுள்ளது?

இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'புதின் என்னை தவறாக வழிநடத்துகிறார் என்று தோன்றுகிறது' - ஸெலென்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் கூறியது என்ன?

வாடிகனில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதைத் தொடர்ந்து 'யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் விருப்பம்' குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil