BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு நிபுணர்கள் அதுகுறித்துச் சொல்வது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை

காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் விளைவாக சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உள்ளூர் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், தங்கள் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்

RCB vs RR: இந்த தொடரில் முதன்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காமில் குதிரைக்காரர் ஆலோசனையால் தப்பிய 6 தமிழர்கள் - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (25/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருக்க வாய்ப்புள்ளதா? அல்லது அதற்கு நிறவெறி தடையாக இருக்கிறதா? வாடிகனில் என்ன நிலவரம்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரே காஷ்மீரி - ஆதிலின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் பைசரன் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சையது ஆதில் ஹுசைன் ஷா மட்டுமே ஒரே காஷ்மீரி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'என் தந்தை தலை ரத்தத்தில் நனைந்திருந்தது' - பஹல்காம் தாக்குதலில் பலியான சஞ்சய் லேலேவின் மகன்

"பஹல்காமில் தீவிரவாதிகள் என் தந்தையைச் சுடும்போது நான் அவரது தலையில் கை வைத்திருந்தேன். அவரது தலை முழுக்க ரத்தத்தில் நனைந்திருந்தது."

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதல்: 'மினி சுவிட்சர்லாந்து' பைசரன் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிக்கும் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தி இல்லாத பஹல்காம்மின் பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளை நம்பி மட்டுமே உள்ளது. இங்கு பல பிரபலமான திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து அழுத டிரைவர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய பிறகு உடைந்து கண்ணீர் விட்டு அழுத டிரைவர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?

சூரத்தை சேர்ந்த ஒருவர் பஹல்காமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். அவரது மனைவி பாஜக அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் கொந்தளித்துப் பேசியது ஏன்? என்ன பேசினார்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
'கனடாவுக்கு வந்த பிறகு வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன.இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவரும் கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகள் காரணமாக அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பாகிஸ்தான் ரத்து செய்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?

1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உருவானது.போருக்குப் பின், இந்தியாவும் பாகிஸ்தானும் வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது பரஸ்பர ஒப்புதலின் மூலமாகவோ தீர்க்க ஒப்புக்கொண்டன.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய குதிரை சவாரிக்காரர்களில் சஜ்ஜாத்தும் ஒருவர்.காயமடைந்த சிறுவனை சஜ்ஜாத் முதுகில் சுமந்து செல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த மாநில பல்கலை. துணைவேந்தர்கள் - போலீஸ் மிரட்டியதா?

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில், நீலகிரி மாவட்டம் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
லண்டன் டு காஞ்சிபுரம்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு - ஜிபிஎஸ் மூலம் ஊழியர்கள் சிக்கியது எப்படி?

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயமான வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கஸ்தூரிரங்கன்: இரவில் ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிய பின்னணி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கே. கஸ்தூரிரங்கள் செலுத்தியிருக்கிறார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
மியான்மரில் ரகசிய வானொலி நிலையம் ராணுவத்திடமிருந்து மக்களை எப்படி பாதுகாக்கிறது?

மியான்மர் நாட்டில் 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மக்கள் பலர் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட முன்வந்துள்ளனர். கோ டின்ட்டின் ஆயுதம் ஃபெடரல் எஃப்எம் எனும் ஒலிபரப்பு ஊடகம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிஎஸ்கே வெளியேறியது – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஹல்காம் தாக்குதல்: மோதி அரசின் ஜம்மு - காஷ்மீர் கொள்கை தோல்வியா? - ஓர் அலசல்

பஹல்காம் தாக்குதல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய கேள்வி மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை பற்றியது. அதாவது, அரசின் கொள்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது? இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் வருமா?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி - இன்றைய முக்கிய செய்திகள்

அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேட்டுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil