BBC News Tamil
5.88K subscribers
38.9K links
RSS feeds from BBC.

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ்

All contents are Copyright of bbc.co.uk/tamil

Contact/Feedback: @BBCWorldoffl_Bot
Download Telegram
'போப்பின் செயல் சோவியத் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது' - சர்வதேச அரசியலில் போப் செல்வாக்கு என்ன?

ஐநா மட்டுமின்றி காலநிலை மாற்ற மாநாடு உள்ளிட்ட பலவற்றிலும் போப்பின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நபராகவும் போப் இருந்திருக்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளிலும் போப் மற்றும் கத்தோலிக்க திருச்சபை ஆகிய இரண்டுக்கும் உள்ள செல்வாக்கு என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்

இயற்கையான முறையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள் உள்ளன. வீடு கட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் வாழ்ந்தாலும், சில எளிய முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கோல்வால்கர்: காந்தி படுகொலையால் தடை செய்யப்பட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் சிதையாமல் காத்த தலைவர்

எம்.எஸ். கோல்வல்கர்: காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உடைவதில் இருந்து தடுத்து, 33 ஆண்டுகள் சங் அமைப்பிற்கு அவர் தலைவராக செயல்பட்டது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?

கடல் நீரில் இருந்து கார்பனை பிரித்தெடுக்கும் முயற்சியால் வெப்பமயமாதம் குறையுமா? பிரிட்டனில் நடக்கும் ஆராய்ச்சி கூறுவது என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?

அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும் அளவுக்கு காசம்பட்டியின் சிறப்பு என்ன? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சிறைச்சாலை முதல் ஈஸ்டர் வரை - மரணத்திற்கு முந்தைய ஒரு வாரத்தில் போப் என்னென்ன செய்தார்?

உலகம் முழுவதிலும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார். இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, ஈஸ்டர் ஞாயிறன்று பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போப் பிரான்ஸிஸ் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்

சென்னையில் 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 22 வயதில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது எப்படி?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சௌதி அரேபியாவில் பிரதமர் மோதி - வக்ஃப் சட்டம் பற்றி விவாதிக்கப்படுமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஏப்ரல் 22) இருநாள் பயணமாக சௌதி அரேபியா சென்றுள்ளார். சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரை மோதி இன்று சென்றடைந்தார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இப்போது தங்கம் வாங்கலாமா? விலை உயர்வு தொடருமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? பொதுமக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்; காஷ்மீரில் நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. எல்எஸ்ஜி உரிமையாளர் கோயங்கா - ராகுல் சந்திப்பில் என்ன நடந்தது?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'

ஏப்ரல் 1983 இல், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின. ஆனால் அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம் நூற்றாண்டின் தலையாய ஏமாற்று வேலைகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது, இந்த ஏமாற்று ஊழல் மிகப் பெரிய பண நட்டத்தை ஏற்படுத்தியதோடு, பலரின் நற்பெயரையும் நாசமாக்கியது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?

வைட்டமின் மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் உடல்நலனின் ஒரு முக்கிய அங்கமாக வைட்டமின் மாத்திரைகளை பலரும் கருதுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
சூட்கேஸில் கிடைத்த சடலம், திணறிய போலீசாருக்கு சைகை மொழியில் துப்பு துலக்க உதவிய சிறுவன்

கொலைக்காக வீடியோ காலில் பெல்ஜியத்திலிருந்து நடத்தப்பட்ட சதித்திட்டத்தை, சைகைமொழியிலேயே பேசி காவல் துறையினர் தீர்த்துள்ளனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?

நடப்பு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு பேட்டரும் பயன்படுத்தும் மட்டைகளை (bat) களத்திலேயே நடுவர்கள் பரிசோதிக்கின்றனர். கோலி, ஹர்திக் என்று எந்த பேட்டரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதற்கு என்ன காரணம்? பேட் பற்றிய விதிகள் என்ன சொல்கின்றன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஷேக் ஹசீனா ஆட்சியில் ரகசியமாக செயல்பட்ட கொடூர சிறையில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

ஷேக் ஹசீனா ஆட்சியில் வங்கதேசத்தின் டாக்கா விமான நிலையம் அருகே செயல்பட்ட ரகசிய சிறையை பிபிசி நேரில் பார்வையிட்டது. அங்கு அந்நாட்டின் முந்தைய ஆட்சியை எதிர்த்தவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக முன்னாள் கைதிகள் கூறுகின்றனர்.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
இந்தியாவில் அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியம் வைத்துள்ளதா? உண்மை என்ன?

புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் உண்மையில் ஒரு சீர்திருத்தமா அல்லது உரிமைப் பறிப்பா? வக்ஃப், இஸ்லாம் மதம் இடையிலான தொடர்பு என்ன?

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil
ஹஜ் யாத்திரை: இந்திய பயணிகளுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்த சௌதி அரசு - ஏன்? என்ன பிரச்னை?

இந்தியாவின் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை, சவுதி அரேபியா இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.

📰 மேலும் வாசிக்க...

PUBLISHED via @BBCTamil