Jaya Bakti
1.99K subscribers
26 photos
4 videos
2 files
47 links
Official Channel for sharing important details, book promotions and other news about current events
Download Telegram
*குயில் இதழின் முத்து விழா கொண்டாட்டம்*

1992ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்களில் முதலாவது குயில் இதழ் வெளியீடு கண்டது. அன்று முதல் இன்று வரை காலத்தின் பரிணாமங்களுக்கு ஏற்ப குயில் இதழும் பல பரிணாமக் கூறுகளுடன் தொடர்ந்து வெளியீடு கண்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, கடந்து இரு ஆண்டுகளாகக் குயில் இதழ் மின்னிதழாக வெளியீடு கண்டு மாணவர்கள் கைகளில் தவழுகின்றது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. 30ஆவது ஆண்டில் கால் தடம் பதித்துள்ள குயில் இதழின் முத்து விழா கொண்டாட்டத்தையொட்டி குயில் ஜெயபக்தி பதிப்பகம் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாகக் குயில் மின்னிதழை வழங்குகின்றது. வாசகர்களாகிய நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. உங்களின் வற்றாத ஆதரவும் அன்பும் குயில் இதழ் 30 ஆண்டுக் காலம் நிலைத்து நிற்பதற்கு முதன்மை காரணம். இத்தருணத்தில் அன்பு வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

குயில் இதழ் எந்தவொரு இலாப நோக்கமின்றி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது *மலேசிய தமிழ் மாணவர் இதழ்*. இந்திய சமுதாயத்தை வாசிப்புப் பழக்கம் நிறைந்த அறிவார்ந்த சமுதாயமாக உருமாற்றும் நன்னோக்கில் குயில் இதழ் பிரசுரிக்கப்படுகிறது. ஆகவே, குயில் இதழைத் தவறாமல் வாசித்து மகிழுங்கள்.

கீழ்க்காணும் இந்த இணைப்பைச் சொடுக்கி இந்த மாதத்திற்கான குயில் இதழை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்; வாசித்து மகிழலாம்.

🌎 https://jayabakti.com/product/e-kuil-september-2021/

குயில் இதழை நாளும் பயில்,
துயில் எழும் உன் செயல்.

#jayabaktikuil #jayabakti #kuilmagazine #nammajayabakti #books #magazine #tamil #children #school #primaryschool #primary #free #studymotivation #student