நாளும் ஒரு விவேகவாணி~ VVT
35 subscribers
1.35K photos
1 video
சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை தினம் ஒரு சிந்தனையாக அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.

இக்குழுவில், தினமும் சுவாமி விவேகானந்தரின் ஒரு சிந்தனையானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், படம் மற்றும் எழுத்து வடிவில் பதிவிடப்படும்.
Download Telegram
Therefore the world is waiting for this grand idea of universal toleration. It will be a great acquisition to civilisation. Nay, no civilisation can long exist unless this idea enters into it.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும். அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது, நமது மதக் கொள்கைகளும் நம்பிக்கைகளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
No civilisation can begin to lift up its head until we look charitably upon one another; and the first step towards that much-needed charity is to look charitably and kindly upon the religious convictions of others. Nay more, to understand that not only should we be charitable, but positively helpful to each other, however different our religious ideas and convictions may be.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து, உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை (Spirirual Oneness). ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்கும் - உயர்ந்தோரைவிடத் தாழ்ந்த பிரிவினருக்கு, பண்பட்டோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளைவிடப் பலவீனருக்கு - தேவையானது இந்தக் கருத்தே.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
The other great idea that the world wants from us today, the thinking part of Europe, nay, the whole world — more, perhaps, the lower classes than the higher, more the masses than the cultured, more the ignorant than the educated, more the weak than the strong — is that eternal grand idea of the spiritual oneness of the whole universe.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது, இருப்பவை எல்லாம் ஒன்றே. …நான் உங்களுக்குச் சொல்கிறேன்: புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைத்தான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. தங்கள் உரிமைக்காகக் குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்துதான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
There is but one Soul throughout the universe, all is but One Existence. ..I tell you, nevertheless, that it is the one great life-giving idea which the world wants from us today, and which the mute masses of India want for their uplifting, for none can regenerate this land of ours without the practical application and effective operation of this ideal of the oneness of things.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் முக்திக்கான போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நூலும் கூறி வந்துள்ளதே அதுபோல் நீங்களும் நானும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்களும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித்தரமான கருத்து. இந்த ஒருமைதான் எல்லா நீதிநெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
The infinite oneness of the Soul is the eternal sanction of all morality, that you and I are not only brothers — every literature voicing man's struggle towards freedom has preached that for you — but that you and I are really one. This is the dictate of Indian philosophy. This oneness is the rationale of all ethics and all spirituality.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தனிமனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டத்தைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்குத் தாங்கள் எழுதியுள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள்போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர். தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
And mark it, my friends, that in and through all the literature voicing man's struggle towards freedom, towards universal freedom, again and again you find the Indian Vedantic ideals coming out prominently. In some cases the writers do not know the source of their inspiration, in some cases they try to appear very original, and a few there are, bold and grateful enough to mention the source and acknowledge their indebtedness to it.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
நமது நாட்டிற்கு இப்போது வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன், இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்காகக் கடலின் அடியாழம்வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் சந்திக்கக்கூடிய மகத்தான சக்தி வாய்ந்த, யாராலும் தடுக்க முடியாததான சங்கல்பமும் (Will) தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இதுதான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, எல்லாம் ஒன்றே என்பதான அந்த அத்வைத லட்சியத்தை நன்குணர்ந்து, அதனை அனுபவத்தில் கொண்டு வருவதால்தான் முடியும்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
What our country now wants are muscles of iron and nerves of steel, gigantic wills which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe, and will accomplish their purpose in any fashion even if it meant going down to the bottom of the ocean and meeting death face to face. That is what we want, and that can only be created, established, and strengthened by understanding and realising the ideal of the Advaita, that ideal of the oneness of all.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
இந்த வாழ்க்கை குறுகியது, உலகின் வீண் ஆடம்பரங்கள் நிலையற்றவை. பிறருக்காக உயிர்வாழ்பவர்களே வாழ்பவர்கள்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 9 : கடிதங்கள் : 120}

#VKendra50
#Swaraj75
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை, இறைவனிடம் நம்பிக்கை இதுவே மகோன்னதத்தின் ரகசியம்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
Faith, faith, faith in ourselves, faith, faith in God — this is the secret of greatness.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடம் திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை. உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள், வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான்.

- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! - 5 : கொழும்பு முதல் அல்மோரா வரை : கும்பகோணத்தில் - வேதாந்தப் பணி}

#VKendra50
#Swaraj75
If you have faith in all the three hundred and thirty millions of your mythological gods, and in all the gods which foreigners have now and again introduced into your midst, and still have no faith in yourselves, there is no salvation for you. Have faith in yourselves, and stand up on that faith and be strong; that is what we need.

-- Swami Vivekananda
{CWSV-3 : Lectures From Colombo to Almora : The Mission of the Vedanta}

#VKendra50
#Swaraj75
குருவே அனுபூதிக்கான வழி. குருவில்லாமல் ஞானம் கிடையாது.

-- சுவாமி விவேகானந்தர்
{எழுந்திரு! விழித்திரு! – 6 : பேட்டிகள் : கேள்வி-பதில் : குரு, அவதாரம், யோகம், ஜபம், சேவை}

#VKendra50
#Swaraj75
The Guru is the means of realisation. “There is no knowledge without a teacher.”

--Swami Vivekananda
{CWSV – 5 : Questions and Answers : VII Guru, Avatara, Yoga, Japa, Seva}

#VKendra50
#Swaraj75