Tamil SMS - தமிழ் கவிதைகள்
773 subscribers
700 photos
37 videos
236 files
225 links
தமிழ் எஸ் எம் எஸ் 😊 Lovers ❤️

😊 Tamil SMS Telegram Channel 😇

Tamil kavithai, Tamil Quotes, Tamil SMS and Tamil Whatsapp Status and Story Quotes.

#tamilsms
Download Telegram
விடையில்லாத கேள்விகளும்
தீர்வில்லாத பிரச்சினைகளும்
எல்லோர் வாழ்விலும் உண்டு
புன்னகைத்துக் கொண்டே
கடந்து செல்வதில் தான்
சாமர்த்தியம் இருக்கிறது
தன் விருப்பத்தை
தியாகம் செய்து
நம் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உறவை மட்டும்
என்றும் இழந்து விட கூடாது
வரும் கனவையெல்லாம்
நிஜமென்று
நம்ப சொல்கிறது இரவு
அவை யாவும் பொய் என்று
நிரூப்பித்து விடுகிறது பகல்
நினைக்கிறது எல்லாம்
நடக்குறதேயில்லை
நடந்துருமோன்னு பயப்படுறது
மட்டும் கரெக்டா நடக்குது
ஆபத்துக் காலத்தில்
வாயைத் திறக்காதவன்
புத்திசாலி
ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன
அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது
உனக்கெல்லாம் எதுக்கு
என்கிறது ஒரு பக்கம்
உனக்காக தான் எல்லாம்
என்கிறது மறுபக்கம்
ஒருவரின் பேச்சால்
அவர் உள்ளத்தை
அறிந்திட முடியாது
இனிக்க இனிக்க பேசுபவர்
நலன்விருப்பியுமல்ல
கடிந்துக்கொள்பவர் கேடு
நினைப்பவருமல்ல
வாழ்க்கையும் ஓடுகிறது
நாமும் ஓடுறோம்
கூடவே
கஷ்டமும் கவலையும்
சேர்ந்து ஓடி வருது
காற்றோடு
நான் கலக்கிறேன்
உன் சுவாசக்காற்று
என்னை தீண்டுவதற்கு
நான் உன்னை
நேசிப்பதனால் மட்டுமல்ல
உன்னையே மூச்சுக்காற்றாக
சுவாசிப்பதனால்
(depression) மரணம் போல
தவிர்க்க முடியாதது
வாழ்வின்
ஏதோ ஒரு கட்டத்தில்
எல்லோரையும்
நிச்சயம் தாக்கும்
மனதின் வேதனைகளுக்கு
யாரோ ஒருவர் காரணமாக
இருக்கவேண்டிய
அவசியம் இல்லை
சில நேரங்களில்
ஏதோ நினைவுகள்
கூட காரணமாக இருக்கலாம்
கடக்கவே முடியாது
என்று நினைத்த நாட்களை
போராடி கடந்ததற்காக
உங்கள் மீது நீங்கள்
பெருமை கொள்ளுங்கள்
உங்களை தோல்விகள்
ஓட ஓட துரத்தினாலும்
நீங்கள் ஓட்டத்தை
நிறுத்தி விடாதீர்கள்
இடையே வரும்
தோல்வியும் தடையும்
வெற்றியின் ஆரம்ப படிநிலைகள்
பல சுவைகள்
நிறைந்த வாழ்க்கையில்
இனிமையை மட்டும் தேடி
அலைகிறது மனது
கடந்த நாளைப் பற்றி
கவலைப்பட வேண்டியது
ஒன்று இல்லை
அதன் வழியே
நீ கற்றுக்கொண்டு
இப்போது மகிழ்ச்சி
அடைய வேண்டும்
சந்தோஷத்தை அடுத்தவரிடம்
எதிர்பார்க்கும் நேரத்தில்
உன் சந்தோஷத்தை
தொலைத்து விடுகிறாய்
சில நேரங்களில்
நீங்கள் இருண்ட இடத்தில்
இருக்கும்போது
நீங்கள் புதைக்கப்பட்டதாக
நினைக்கிறீர்கள்
ஆனால் உண்மையில்
நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்
எப்போதும்
உங்களின் தவறுகளை
நியாயப்படுத்தாதீர்கள்
உங்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கே
அதன் வலி புரியும்