நீ(தி) வாழ, நீயே வாதாடு! 📚
1.21K subscribers
295 photos
19 videos
26 files
285 links
No law no life.
Know law know life!

உன் வாழ்க்கை உன் கையில்!
உனது வழக்கு உனது வாதத்தில்!!

எவருக்கும் தன்வாதமே தலைசிறந்த வாதமாம்
பிறர்வாதம் வாதமன்று வதம்.

உங்களது வாழ்விலும் வழக்கிலும் உ(ய)ரிய நீதியைப் பெற நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்😇
Download Telegram
நாம் ஒத்த ரூபா கொடுத்து வாங்கும் தீப்பெட்டியில் 50 தீக்குச்சிகள் இருக்கும்.

அதற்கான வேலைகள் எப்படி நடக்கின்றன என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.

https://youtu.be/ygzjawXF0NY
இந்த 2020 ஆம் ஆண்டின் புரியாத புதிர் 🥵🙆‍♂️:

மருந்தும் இல்லை 💊, வைத்தியமும் இல்லை 💉🛏️ 😞.

ஆனால் கண்ணிற்கு தெரியாத அரக்கன் 🦠👿 கண்டறியப்படுகிறான், தீவிர சிகிச்சை🩺 மேற்கொள்ளப்பட்டு குணமடைகிறார்கள் 😳.

எப்படி?🤷‍♂️

விளக்கம் 🗣️ அளிக்கப்படுகிறது.

1. நல்லா சோப்பு போடு.🧴
2. அப்பால போ.
3. மூடிக்கோ 😷.
முதலில் அனைவருக்கும் சட்டக் கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய ஆசிரியர் பின் சமூகத்தைப் பற்றியும் நிறைய ஆராய்ந்தார்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று அலி ஒன்பது என்று சொல்லப்பட்ட திருநங்கைகள் மற்றும் ஊனமுற்றோர்கள் என்று சொல்லப்பட்ட மாற்றுத்திறனாளிகள்.

ஆமாம் உடலில் ஒருவருக்கு உள்ள ஒரு குறைபாடு வேறொன்றில் பலமாக மாற்றுத்திறனாக சேருகிறது என்பதை தெளிவுபடுத்தினார்.

இதனால்தான் மாற்றுத்திறனாளிகள் பலரும்கூட உலக அளவில் பற்பல சாதனைகளை செய்கின்றனர்.

பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு நினைவாற்றலும் மூளையின் சேமிப்பு திறனும் அதிகமாகும்.

திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தைகளை எங்களுக்கு தெரிந்தது முதன் முதலில் முன்மொழிந்ததும் நாமே.

ஆணாக பிறந்த மனதளவில் பெண்ணாக உருமாறினால் திருநங்கை என்பதை பற்றி 2006 ஆம் ஆண்டில் ஆராய்ந்து 2007ஆம் ஆண்டில் பத்திரிகையில் எழுதியபோது வியப்பாக இருந்தது.

இதை இன்னும் மெருகேற்றி 2010ஆம் ஆண்டில் நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? நூலில் எழுதியதற்கு ஏற்பவே திருநங்கைகளுக்கு காவல்துறையில் வேலை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.

இது உண்மையில் மிகப்பெரிய சமூக புரட்சி. ஆனால் சைலண்டான புரட்சி.

பெண்ணாக பிறந்து மனதளவில் ஆணாக உருமாறினால் திருநம்பி.

சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணுமே திருமணம் செய்து கொள்ள முடியும். இதையும் வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களுடன் மட்டுமே செய்ய முடியும் என்பதை தனது கொள்கை போராட்டத்தின் மூலம் மாற்றியவர் பகுத்தறிவு பெரியார்.

ஆமாம் இந்து திருமண சட்டம் 1955இல் பிரிவு 7எ இல் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்டப்படியான குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதை பகுத்தறிவு பெரியாரின் தொண்டர்கள் மக்களின் சட்ட அறியாமையை சரியாக பயன்படுத்தி வழக்கம்போலவே அவர்களது பாணியில் சம்பிரதாய சடங்கு திருமணமாக ஆக்கி விட்டார்கள்.

அதாவது இவர்கள் முன்னின்று செய்து வைத்து சான்றிதழ் கொடுத்தால்தான் அத்திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற வெற்றுச்சடங்கு மாயையை உருவாக்கி அதனை பெரியார் திடலை பெரியார் அக்ரஹாரமாகவே மாற்றி விட்டார்கள்.

இந்த சூழ்ச்சிகளை அறியாத ஆன்மீகவாதிகளான பெண்ணாக பிறந்து ஆணாக மனம் மாறிய திரு நம்பியும் ஆணாக பிறந்து பெண்ணாக மனம் மாறிய திருநங்கையும் அப்பெரியார் அக்ரஹாரத்தில் திருமணம் செய்து தம்பதிகளாக இணைந்துள்ளனர்.


https://youtu.be/_AzCu7Mrw44
குற்றங்களை குறைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பானவர்களாக இருந்தால் குற்றங்களைக் குறைப்பார்கள். இதற்காகவே கடுமையாக உழைப்பார்கள்.

ஆனால் அவர்களே பொறுக்கிகளாக இருந்தால் உழைக்காமல் எல்லாவகையிலும் குற்றங்களை அதிகப்படுத்தத்தானே செய்வார்கள்?

இப்படி நடந்தது தான் இந்த திருட்டு குற்றம் என்பது கீழே உள்ள வாகன ஓட்டிகளே உஷார் என்ற கட்டுரையை படித்தால் மிக மிக எளிமையாக புரிய வேண்டும் புரிந்தால் பிஸ்தா.

கையும் களவுமாக சிக்காத வரையல்ல; சிக்கினாலும் கூட எல்லோருமே தங்களை யோக்கியர்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள்.

இதற்காகத்தானே கூலிக்கு மாரடிக்கும் மாமாக்களான வக்கீழ் பொய்யர்கள் இருக்கிறார்கள்.

http://www.neethiyaithedy.org/2014/01/06.html
பொய்யர்களின் மயக்கம் பேச்சில் எப்படி மதி மயங்கி (விழு, வீழ்)கிறார்கள் என்பதை தன் கவிதை புனைவால் விளக்கும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
நம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்வோமே😊

இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் சிலவற்றை சொன்னால்தான் நாமும் இப்படி செய்யலாமே என்ற எண்ணம் சிலருக்காவது தோன்றுகிறது.

ஆமாம் வீட்டில் வசிக்கும் நமக்கே இந்த மார்கழி குளிர் கடுமையானதாக இருக்கிறதல்லவா?

நம் வாசகர் ஒருவர் இந்த மார்கழி குளிரில் வாடும் சாலையோர ஏழை எளிய மக்களுக்கு போர்வை வழங்கலாம் என்ற யோசனையை சொன்னதோடு நேற்று அதற்காக 10 ஆயிரம் ரூபாயை கேர் சொசைட்டிக்கு நன்கொடையாக வழங்கினார்.

இந்த நன்கொடையில் தரமான 37 சோலாப்பூர் போர்வைகளை வாங்கி இன்றே வழங்கியாச்சு!

இந்த யோசனையை சொன்னதோடு நிதியுதவி அளித்த அவ்வாசகருக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்💐
தமிழ் அற நூல்கள் எல்லாம் ஆணுக்கு சமுதாயக் கடமையும் பெண்ணுக்கு இல்லற கடமையையும் வலியுறுத்தி கட்டமைத்து தந்துள்ளன.

ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு இது எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. ஆகையால் அறநூல்கள் போதிக்கும் போதனைகளும் தலைகீழாக மாறி விட்டன.

வெளியில் வேலைக்கு செல்லும் எந்த ஒரு பெண் மட்டுமல்ல; ஆண்களும் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இது.

ஆனால் பெண்கள் வெளியில் சொல்வது போல ஆண்கள் வெளியில் சொன்னால் அது அவர்களது ஆண்மைக்கு இழுக்கு என்பதால் மட்டுமே சொல்வதில்லை.

ஆமாம் மேல்நிலை ஊழியர்கள் ஆணாக இருந்தால் எப்படியோ அப்படித்தான் பெண்களாக இருந்தாலும் நடந்து கொள்கிறார்கள்.

இதையெல்லாம் உணர்ந்துதான் தமிழ் அறநூல்கள் பெண்களுக்கு இல்லற கடமையை மட்டுமே வகுத்து தந்தன என்று சொல்பவர்களை பிற்போக்குவாதி என்பார்கள்.

ஆகையால் இதைப்பற்றி எடுத்துரைக்க கூட ஆன்றோர் பெருமக்கள் முன்வருவதில்லை.

https://m.youtube.com/watch?v=rOOJwWkls7A&feature=youtu.be
காலத்திற்கு ஏற்றவாறு ஈ கொசு சிறு பூச்சிகள் என பல தொல்லைகள் நமக்கு இருக்கின்றன.

ஈரப்பதம் மிகுந்த இந்த நேரத்தில் பழ கொசுக்களை கொசு பேட் கொண்டு கூட அடிக்க முடிவதில்லை.

சமையல் கூடத்தில் உள்ள இந்த வகை சிறு பழ கொசுக்கள் காய்கறிகள் பழங்கள் மட்டுமல்லாது எல்லா பொருட்களின் மீதும் இருக்கிறது.

இது எந்த அளவுக்கு வியாதியை உண்டு பண்ணும் என்பது தெரியவில்லை.

இதை கட்டுப்படுத்த அருமையான யோசனை.

https://youtu.be/ifEHfaPubCU
தங்களின் தேவைகளை தாங்களே முயன்று பூர்த்தி செய்து கொள்வதே சுயசார்பு.

இதில் தனக்குத் தேவையான பொருட்களை தாங்களே தயார் செய்து கொள்வதும் சுயசார்புதான்.

கேசரி பவுடர் போன்று
மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அதிகப்படியான கலர் கோலமாவு தயார் செய்வது எப்படி என்கிற சிறந்த சிந்தனையை பார்த்து நீங்களும் செய்யுங்கள்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களுக்கு தேவையான கலர் கோலமாவு கிடைப்பதும் மிக எளிதாகிவிடும்.

https://youtu.be/Vm6qtDwXfpo
இப்படி உசுப்பேத்தியே நம்மள ரணகளம் பண்ணிடுவானுங்க

https://youtu.be/PxS8fG6ZUqU

இந்த காணொளியில் வரும் குப்பை பிரிக்கும் தொழிலாளிகள் செயல் பாராட்டத்தக்கதே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இதை இந்த அளவுக்கு விளம்பரப்படுத்த வேண்டுமா? என்றே யோசிக்க வேண்டியுள்ளது.

அதாவது அவரவரது கடமையை செய்வதைக் கூட பணமும் பாராட்டு பத்திரமும் கொடுத்து பாராட்ட வேண்டும் என்ற இழிவான நிலைக்கு சமுதாயம் சென்று விட்டதையை இதுபோன்ற காணொளிகள் காட்டுகிறது.

இதை இப்படி பார்த்தால்தான் புரியும்.

இவருக்கு கிடைத்த பணத்தை இவர் திருப்பி கொடுக்காமல் எடுத்து சென்றிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அடுத்தவரின் பணத்தை திருடி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இவரை தொற்றிக் கொண்டிருக்கும். எங்கே நம் திருட்டுத்தனம் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்து இருப்பார்.

நிச்சயமாக பணத்தின் உரிமையாளர் புகார் கொடுத்திருப்பார்.

அதன்பேரில் இவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து ஊர் உலகமெல்லாம் தெரியப்படுத்தி இருக்கும்.

எடுத்துச்சென்ற பணத்தை யாரிடமும் கொடுத்து வைக்க முடியாது வங்கியிலும் போட முடியாது. இவ்வளவு பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லவும் முடியாது.

வழக்கின் மூலம் முதலில் நிம்மதியை இறந்திருப்பார். குடும்பமும் நிம்மதியை இழந்திருக்கும்.

அக்கம் பக்கத்தில் உள்ளோர் அருவருப்பாக பார்த்திருப்பார்கள். ஆளாளுக்கு அட்வைஸ் செய்து இருப்பார்கள்.

தன் கூட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக வக்கீழ் பொய்யர்களிடமும் நிதிபதிகளிடம் சிக்கி சீரழிந்து இருப்பார்.

ஆனால் தன் கடமையை மிகச் சரியாக செய்ததன் மூலம் இவ்வளவு தண்டனைகளில் இருந்தும் தப்பித்து இருக்கிறார் என்பதே குற்றங்களை தடுப்பதற்காக மிக முக்கியமாக வெளிப்படுத்த வேண்டிய விஷயம்.
மாக்களின் சட்ட அறியாமை!

இந்த இளைஞன் சொன்னது போலவே, அவனை அவனது குடும்பத்தினரே கொலை செய்திருக்கலாம் என்றே நம்ப வேண்டி உள்ளது.

ஆமாம், மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவனால், எப்படி வீட்டை விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் கொடுக்க முடிந்தது, கேவலர்களின் காலைப் பிடித்து கெஞ்ச முடிந்தது? என்ற கேள்வி எழுகிறது.

தன் குடும்பத்தினரே தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்; என்னை காப்பாற்றுங்கள் என்று கேவலர்களிடம் கெஞ்சிய வீடியோ பதிவு, குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 299(2) இன் கீழ் அவரது மரண வாக்குமூலமாகும். இதன் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஏனெனில், அவனை கொலை செய்யும் முயற்சியில் இருந்து தற்காத்துக் கொள்ள குடும்பத்தினரை தாக்கி இருக்கலாம். தப்பிப்பதற்காக கீழே குதித்து இருக்கலாம் அல்லது குடும்பத்தினர் தள்ளியும் விட்டு இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், ‘‘முதல் மாடியில் இருந்து விழுந்தவன் எப்படி இறப்பான்’’ என்ற கேள்விக்கு பிரேத பரிசோதனை அறிக்கைதான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த கொலையை தடுக்காத வீடியோவில் வரும் கேவலர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 இன்படி, தண்டனைக்கு உள்ளாக்க முடியும். இந்த ஒரு பிரிவின் படி தண்டனைக்கு ஆளாக்கி இருந்தால், எல்லா அய்யோக்கிய அரசூழியனும் சிறையில்தான் இருக்கனும்.

ஆனால், அக்கறையுள்ள குடும்பத்தினரே கொலை செய்திருக்கிறார்கள் என்று நம்ப வேண்டியுள்ள போது, இதையெல்லாம் யார் செய்வது?

https://youtu.be/TfnBFqAMoo4