Tamil general knowledge
78 subscribers
9 links
பொது அறிவு அனைத்தும்
Download Telegram
இந்தியாவின் மிகப் பெரிய மான் வகை எவை?

சம்பார் மான்

விளக்கம்::
இந்தியாவின் மிகப் பெரிய மான் வகையைச் சேர்ந்தவை சாம்பார் மான்கள் தான்.அது போல கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர்.

மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர். இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.

.
பறக்கும் பாம்புகளை எங்கு காணலாம்?

ஜாவா

விளக்கம்::
பறக்கும் பாம்புகளை ஜாவா தீவில் மட்டுமே காணலாம். பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை.

சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன.

இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன.

பாம்பிற்கு காது மடல் இல்லை..
இறப்பே இல்லாத உயிரினம் எது?

அமீபா

விளக்கம்::
இறப்பே இல்லாத உயிரினம் அமீபா மட்டுமே. அமீபா என்பது மூத்த விலங்கிகளிலுள்ள ஒரு பேரினம் ஆகும். அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda)வகுப்பைச் சேர்ந்ததாகும். உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது.

அமீபாவின் கலமானது கருவைக் கொண்டிருக்கும் ஒரு மெய்க்கருவுயிரி ஆகும். August Johann Rösel von Rosenhof என்பவரால் 1757 இல் முதன் முதலாக இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இயற்கையியல் அறிஞர்கள் இந்த அமீபாவை Proteus animalcule என அழைத்தனர்.

புரோட்டியசு (Proteus) என்ற பெயர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் பெயரைக் கொண்டு உருவானது. அதன் பின்னர் அமீபே (Amibe) என்ற பெயர் பின்னர் Bory de Saint-Vincent என்பவரால் வழங்கப்பட்டது . கிரேக்க மொழியில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது .

Dientamoeba fragili என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது..
மனித உடலில் மிக நீளமான எலும்பு எது?

தடித்த தண்டுவடம்

விளக்கம்::
எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதி அணுக்கள், வெண்குருதி அணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன.

இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன.

எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன.

எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும்.

அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு.

இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன.

பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும்.

அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும். எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.

.
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து எது?

டமி ஃ ப்ளூ

விளக்கம்::
பன்றிக் காய்ச்சல் ஓர் உயிர்க் கொல்லி நோய் ஆகும். இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், உடல் சூடாதல், தலைவலி, தசைவலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். நோய் வந்தவர்கள் டமிஃப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகளை நோய் தாக்கி 48 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்வது நல்லது.

இதையும் மருத்துவர்களின் பரிந்துரையின்படிதான் சாப்பிடவேண்டும். பன்றிக் காய்ச்சலுக்கு சொந்த மருத்துவம் ஆபத்தானது.
இரத்த அழுத்தத்தை அளவிட உதவும் கருவி எது?

ஸ்பைக்மோ மானோமீட்டர்

விளக்கம்::
இரத்த அழுத்தம் (Blood pressure) என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும் (இது ஒரு பரப்பளவிற்கான விசை அலகு). இது பிரதான உயிர்வாழ்தலுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இதயத்திலிருந்து புற தமனிகள் மற்றும் இரத்த தந்துகிகள் வழியாக இரத்தம் வெளியே போகும் போது இரத்த சுற்றோட்டத்தின் அழுத்தம் குறைகிறது மேலும் நரம்புகள் வழியாக இரத்தம் திரும்பவும் இதயத்திற்கு போகும் போது இரத்த அழுத்தம் இன்னும் குறையும்.இரத்த அழுத்தம் என்னும் சொல், ஒருவருடைய மேற்புயத்தில் அளவிடப்படும் அழுத்தத்தையே குறிக்கிறது.

இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் மேற்புயத்தின் மிகப்பெரிய இரத்த குழலான புயத்தமனியில் இருக்கும் இரத்த அழுத்தத்தை முழங்கையினில் அளக்கப்படும்.இரத்த அழுத்தம் சில நேரங்களில் மற்ற பகுதிகளிலும் அளவிடப்படும், எடுத்துக்காட்டாக கணுக்காலில் அளக்கப்படுவதைப் போன்று. கணுக்காலின் முக்கிய தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் மற்றும் புயத்தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் விகிதமே கணுக்கால் புய அழுத்த உள்ளடக்கம் (ABPI) ஆகும்.

இரத்த அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ஸ்பைக்மோ மானோமீட்டர் ஆகும்..
மூளையின் முக்கிய உணவு எது?

குளுக்கோஸ்

விளக்கம்::
குளுக்கோசு அல்லது குளுக்கோஸ் (Glucose, C6H12O6) என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது சர்க்கரை ஆகும். இது ஓர் (ஒற்றை சாக்கரைடு) வகைகளில் ஒன்று. குளுக்கோசு உயிரியலில் முக்கியமான ஒரு கார்போ ஐதரேட்டாக உள்ளது. உயிரணுக்கள் இதனை ஆற்றல் தரும் ஒரு அடிப்பொருளாகவும் வளர்சிதைமாற்றத்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன.

குளுக்கோசு ஒளிச்சேர்க்கையின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் (தரசம்) மற்றும் செல்லுலோசு ஆகிய பாலிமர்கள் உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் குளுகசு (γλυκύς) என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும்.

இதன் பொருள் இனிப்பு என்பதாகும். ஓசு (-ose) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி எதிர் உருவ (பிம்ப) குடும்பங்களாக (இரட்டை ஐசோமெர்கள்) பிரிக்கலாம்.

டி-குளுக்கோசு என்று குறிக்கப்படும் குளுக்கோசின் வலக் கை வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோசு என்கிற சொல் டெக்ஸ்ட்ரோரொடேடரி குளுக்கோஸ் (dextrorotatory glucose) என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.

.
நமது உடலில் எந்தப் பாகத்தில் இரத்தம் பாய்வது இல்லை?

கருவிழி

விளக்கம்::
கண்ணின் கரிய பகுதி கருவிழி எனப்படும். இதனைக் கண்மணி என்றும் சொல்வார்கள். தற்காலத்தில் கருவிழி மாற்று சிகிச்சை சிறந்த தர்மமாக பாவிக்கப்படுகிறது. பார்வை இல்லாத நபருக்கு பார்வையை பெற்றுத் தந்து மறுவாழ்வு அளிக்கிறது.

கருவிழி மாற்று சிகிச்சையை முதன்முதலில் வெற்றிகரமாக செக் குடியரசு நாட்டு, பலச்சி பல்கலைகழகத்தைச் சேர்ந்த எட்வட் ஜீர்ம் என்பவரால் 1905ம் ஆண்டு செய்யப்பட்டது. ரமொன் காஸ்ட்ரோவிஜோ மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விலாடிமிர் பிலாடொவ்(1912) என்பவர்களும் கருவிழி மாற்று சிகிச்சையில் முன்னோடிகளாவார்கள். காஸ்ட்ரோவிஜோ என்பவரே 1936ல் நவீன முறையில் கருவிழி கூம்பல்(keratoconus) மாற்று சிகிச்சையை முதலில் செய்தார்.

உரோம அளவுடைய நுண்ணோக்கிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட முறையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது..
நீரில் மூழ்காத விலங்கு எது?

முள்ளம் பன்றி

விளக்கம்::
தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே (Hystricidae) என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் Erethizontidae என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

இலங்கை, மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்த வித்யாசமான உயிரினத்தின் (முள்ளம்பன்றி) தலையும் உடலும் 70செ.மீ. - 90 செ.

மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8செ. - 10 செ.மீற்றர் வரை இருக்கலாம். இவ்வின முள்ளம் பன்றி 11 கிலோகிராம் முதல் 18கிலோகிராம் வரை நிறையுடையதாக வளரலாம்.

முள்ளம்பன்றியின் தோலிலுள்ள மயிர்கள் நீண்ட, கூர்முனையுடைய முட்களாகத் திரிவு அடைந்துள்ளன. இம்முட்கள் பல படைகளாகக் காணப்படுகின்றன. வெளிப்புறமாகவுள்ள நீண்ட, மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.

.
நமது உடலில் மிகவும் வலிமையான தசைப் பகுதி எது?

நாக்கு

விளக்கம்::
மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். நமது உடலில் மிகவும் வலிமையான தசைப் பகுதி இது தான். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே.

உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது.

தமிழில் வழங்கும் ழகரம், ளகரம், லகரம், நகரம் முதலிய எல்லா எழுத்தொலிகளையும் பலுக்கிப் பார்த்தால் மொழி பேசும் பொழுது நாவின் பணி தெளிவாக விளங்கும். வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும்.
"Waiting for the Mahatma (வைட்டிங் ஃ பார் தி மகாத்மா)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?

ஆர். கே. நாராயணன்

விளக்கம்::
"Waiting for the Mahatma (வைட்டிங் ஃ பார் தி மகாத்மா)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "ஆர். கே. நாராயணன்" ஆவார். கே. நாராயணன் என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906–13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் மற்றும் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.

கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும்.

முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்..
"Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் யார்?

மார்கிரேட் மிட்சல்

விளக்கம்::
"Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் "மார்கிரேட் மிட்சல்" என்பவர் ஆவார். இவர் ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்று அறியப்படுகிறார்..
"War and Peace (வார் அண்டு பீஸ் [போரும் அமைதியும்])" என்ற ருசியப் புதினத்தை எழுதியவர் யார்?

லியோ டால்ஸ்டாய்

விளக்கம்::
"War and Peace (வார் அண்டு பீஸ்)" என்ற ருசியப் புதினத்தை எழுதியவர் "லியோ டால்ஸ்டாய்" என்பவர் ஆவார்.லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவர் புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவரது மிகச் சிறந்த ஆக்கங்களான போரும் அமைதியும், அன்னா கரேனினா ஆகியவை, 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையை விபரிப்பதில் உண்மைவாதப் புனைக் கதைகளின் உயர்நிலையைக் காட்டுகின்றன.

கட்டுரையாளர், நாடகாசிரியர், கல்விச் சீர்திருத்தவாதி என டாஸ்டாயின் பிற திறமைகள் இவரை உயர்குடி டால்டாய் குடும்பத்தின் செல்வாக்குள்ள உறுப்பினராக ஆக்கின..
"Savitri (சாவித்ரி)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?

அரவிந்த கோஷ்

விளக்கம்::
"Savitri (சாவித்ரி)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "அரவிந்த கோஷ்" ஆவார். ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்.
"A Bunch of old letters (ய பன்ச் ஆப் ஓல்டு லெட்டர்ஸ்)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?

ஜவஹர்லால் நேரு

விளக்கம்::
"A Bunch of old letters (ய பன்ச் ஆப் ஓல்டு லெட்டர்ஸ்)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "ஜவஹர்லால் நேரு" அவர்கள். ஜவஹர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.

1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
"Golden Threshold (கோல்டன் த்ரஷ்ஹோல்டு)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?

சரோஜினி நாயுடு

விளக்கம்::
"Golden Threshold (கோல்டன் த்ரஷ்ஹோல்டு)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "சரோஜினி நாயுடு" ஆவார்.சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.

அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது..
"A Suitable Girl (எ சூட்டபில் கேர்ல்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விக்ரம் சேத்

விளக்கம்::
"A Suitable Girl (எ சூட்டபில் கேர்ல்)" என்ற புதினத்தை எழுதியவர் "விக்ரம் சேத்" ஆவார். விக்ரம் சேத் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது.

ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.

.
"The Hungry Tide (தி அங்கரி டைட்)" என்ற புகழ்பெற்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?

அமிதவ் கோஷ்

விளக்கம்::
"The Hungry Tide (தி அங்கரி டைட்)" என்ற புகழ்பெற்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதியவர் "அமிதவ் கோஷ்" என்ற வங்காள எழுத்தாளர் ஆவர். இவர் 11 ஜூலை 1956 இல் பிறந்தார்..
"A House for Mr. Biswas (ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்) என்ற நூலை எழுதியவர் யார்?

வி.எஸ். நைபால்

விளக்கம்::
"A House for Mr. Biswas (ய ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ்) என்ற நூலை எழுதியவர் "வி.எஸ். நைபால்" ஆவார்.

வி. எஸ். நைப்பால் (V.

S. Naipaul; பிறப்பு: 17 ஆகத்து 1932), அல்லது வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர்.

2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்..
"ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் யார்?

ஜே. கே. ரவ்லிங்

விளக்கம்::
"ஹாரிபாட்டர்" என்ற நாவலை எழுதியவர் "ஜே. கே. ரவ்லிங்" என்பவர் ஆவார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்.

.
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!