நூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்... இன்றுவரை ஊரைக் காக்க ஒருநாள் விரதம் இருக்கும் பெண் குழந்தைகள்...!*
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய காலந்தொட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்னோர்களின் கலாச்சார நிகழ்வுகளை இன்றைய தலைமுறையும் தொடர்ந்து வருவது சிறப்புதான். அப்படியான ஒரு நிகழ்வுதான் நோயிலிருந்து ஊரைக் காக்க பெண் குழந்தைகள் நடத்தும் விநோத திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில்தான் ஊரைக் காக்க பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்திய வித்தியாசமான திருவிழா நடந்தது.
செரியலூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டுக்கு காட்டுப் வழியாக சென்றபோது காணாமல் போனதாகவும், பல நாட்களுக்குப் பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தின் அருகே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவம் எய்தாத பெண் குழந்தைகள்) நோய் நொடியிலிருந்து ஊரை காக்க பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண் பொங்கல் வைத்துக் கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும், 92 சாணக் கொழுக்கட்டைகளும் பிடித்து அதில் கிருமிநாசினிகள் கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு, வெல்லம் வைத்து 3 படையலிட்டு இரண்டு படையல்களை இதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர்.
குழந்தைகள் கொண்டு வரும் படையல் கூடைகளைப் பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபட்டு ஊர்வலமாகத் தீர்த்தான் ஊரணி கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டுவந்த பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடிக்கின்றனர்.
பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தொடங்கிய இந்த கலாச்சார நிகழ்ச்சி இன்றைக்கு மட்டுமல்ல இனியும் இந்த கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்ற கிராம மக்கள். இப்படிச் செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது, என்றவர்கள் 'எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்' என்றனர் பெண் குழந்தைகள்.
இதே நாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்க்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்துள்ளனர்.

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-38 | சிந்து சமவெளி நாகரீகம்*
தெரிந்துகொள்ளுங்கள்-38
🥎 சர் ஜான் மார்ஷல் கருத்துப்படி ஹரப்பா நாகரீகத்தின் காலம் - கிமு 2600 - 1700 வரை.
🥎 ஃபேர்சர்வ்ஸ் என்பவரின் கருத்துப்படி ஹரப்பா பண்பாட்டின் காலம்-கி.மு.2000 – கி.மு.1500 வரை
🥎 டி.டி.அகர்வால் என்பவரின் கருத்துப்படி சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்பது - கி.மு.2300 – கி.மு.1750 வரை
🥎 ஹரப்பா நகரத்துக்கும் மொகஞ்சதாரோ நகரத்துக்கும் இடையே உள்ள இடைப்பட்ட தூரம் எவ்வளவு? 600 கி.மீ.
🥎 சிந்து சமவெளி மக்கள் வாணிபம் மேற்கொண்ட நாடுகள் எது? சுமேரியா, பாபிலோனியா, எகிப்து
🥎 உடைந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது? லோத்தல்
🥎 காலிபங்கன் என்ற நகரம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது? இராஜஸ்தான்
🥎 காலிபங்கன் என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்? அந்த நகர் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? எ. கோஸ் - 1953
🥎 காலிபங்கன் என்ற நகரம் உள்ள ஆற்றங்கரை எது? காக்கர் ஆற்றங்கரை
🥎 பழிபீடகம் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எது? காலிபங்கன்
🥎 உழப்பட்ட நிலம் எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? காலிபங்கன்
www.kalvisolai.in

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-50 | பொது அறிவு.*
தெரிந்துகொள்ளுங்கள்-50
🥎 கைகால் இல்லாத ஆண் உருவம் எங்கு கிடைத்தது - ஹரப்பா.
🥎 கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது - ஆஸ்திரேலியா
🥎 கோட்டைகள் இல்லாத ஒரே நகரம் - சான்குதரோ.
🥎 கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது - கோல்கொண்டா (ஆந்திரா)
🥎 சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார் - லி கொர்புசியர்
🥎 சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம் - 1959
🥎 சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது - பாண்டிச்சேரி
🥎 சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடம் - ஹரப்பா
🥎 சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம் - டாக்கா

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-49 | பொது அறிவு.*
தெரிந்துகொள்ளுங்கள்-49
🥎 கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - பர்மா
🥎 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி - விம்பிள்டன்
🥎 கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன - 22 கஜம்
🥎 கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் - குசேலன்
🥎 கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - டென்மார்க்
🥎 குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது - கொள்ளு திண்ண
🥎 குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது - ஆஸ்திரேலியா
🥎 குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - சுவீடன்
🥎 குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார் - மரியா மாண்டிச்சேரி
🥎 குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது - திருநெல்வேலி
🥎 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் - யுரேனியம்
🥎 கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - திருநெல்வேலி
🥎 கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது - கர்நாடகா
🥎 கேரளா அரசு சின்னம் - இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-46 | பொது அறிவு.*
தெரிந்துகொள்ளுங்கள்-46
🥎 எகிப்து நாட்டின் தலைநகர் - கெய்ரோ
🥎 எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது - லிக்னைட்
🥎 எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது - 1978
🥎 எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும் - மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
🥎 எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது - ஆஸ்திரேலியா
🥎 எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன - ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
🥎 எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது - கடலூர்
🥎 எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை - மதிப்புக் கூட்டப்பட்ட வரி
🥎 எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது - 1862
🥎 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1998
🥎 எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம் - 60
🥎 எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார் - பச்சேந்திரி பால்
🥎 ஏரிகளின் நகரம் - ஸ்காட்லாந்து

அரசின் வேளாண் பாடத்தை வடிவமைக்கப்போகும் விவசாயி; யார் இந்த ஹுகும்சந்த் படிதார்? விகடன் Daily*
இயற்கையை தழுவிய விவசாயத்தை செய்பவர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர்தான் ராஜஸ்தானின் மன்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹுகும்சந்த் படிதார். 10-ம் வகுப்பு படிப்பை பாதியிலே நிறுத்திய இவர், 2005-ம் ஆண்டு குடும்பம் மற்றும் நண்பர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் 25 ஹெக்டருள்ள சிறிய நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தவர், இன்று, மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார்.
வழக்கமாக செய்து வரும் விவசாயம் மக்களுக்கும் , மண்ணிற்கும் ஆபத்தானது, அதன் தீங்கு விளைவிக்கும் தன்மைகளை அறிந்த பிறகே இயற்கை விவசாயம் செய்ய முடிவு எடுத்ததாக கூறிய அவர், முதலில் தனது கிராமமான மன்புராவை இரசாயனங்கள் இல்லாத பகுதியாக மாற்றவே இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியதாக கூறினார் .
தனது பண்ணையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2018-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் ராஜஸ்தானிலுள்ள விவசாய பல்கலைக்கழகங்களில் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசகராக உள்ளார்.
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய பாடத்திட்டக் குழுவில், விவசாய பல்கலைக்கழகங்களுக்கு, இயற்கை வேளாண்மை குறித்த பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இயற்கை மற்றும் மாட்டு சாணம் தொடர்பான விவசாய தகவல்கள், பஞ்சகவ்யம் போன்ற பசுக்களில் இருந்து பெறப்படும் பொருட்களை பயன்படுத்தி மண்ணை வளமாக்கும் வழிகளையும், பயிர்களை வளமாக்கும் முறைகளையும் பள்ளி கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பண்டைய நூல்களிலிருந்தே இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொண்டதாகவும், அதை குழுவில் உள்ள தனது சக ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

நாக்கை அசைக்க முடியாத விலங்கு எது?
முதலை
விளக்கம்::
முதலைகளால் நாக்கை அசைக்க முடியாது. முதலைகள் ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவைகள் நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது.
ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. இவைகள் பதுங்கித் தாக்கும் தன்மை கொண்டது. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.
.

ஒட்டகம் எத்தனை கிலோ எடையை சுமக்கும்?
300 கிலோ
விளக்கம்::
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன. ஒரு ஒட்டகமானது 300 கிலோ வரையிலான எடையை சுமக்க வல்லது.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது [2].
மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆசுமாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும்.
ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை)ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை.
இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.
மேற்கண்ட இதுபோன்ற காரணங்களால் தான் ஒட்டகங்களை பாலைவனக் கப்பல் என்று அழைக்கிறோம்..

"செர்விடீ (Cervidae)" என்று எந்த இனத்தை சேர்ந்த விலங்கைக் கூறுவர்?
மான்
விளக்கம்::
மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு.
மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன.
கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும்..

இந்தியாவின் மிகப் பெரிய மான் வகை எவை?
சம்பார் மான்
விளக்கம்::
இந்தியாவின் மிகப் பெரிய மான் வகையைச் சேர்ந்தவை சாம்பார் மான்கள் தான்.அது போல கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர்.
மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர். இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.

பறக்கும் பாம்புகளை எங்கு காணலாம்?
ஜாவா
விளக்கம்::
பறக்கும் பாம்புகளை ஜாவா தீவில் மட்டுமே காணலாம். பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை.
சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன.
பாம்பிற்கு காது மடல் இல்லை..

இறப்பே இல்லாத உயிரினம் எது?
அமீபா
விளக்கம்::
இறப்பே இல்லாத உயிரினம் அமீபா மட்டுமே. அமீபா என்பது மூத்த விலங்கிகளிலுள்ள ஒரு பேரினம் ஆகும். அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda)வகுப்பைச் சேர்ந்ததாகும். உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது.
அமீபாவின் கலமானது கருவைக் கொண்டிருக்கும் ஒரு மெய்க்கருவுயிரி ஆகும். August Johann Rösel von Rosenhof என்பவரால் 1757 இல் முதன் முதலாக இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இயற்கையியல் அறிஞர்கள் இந்த அமீபாவை Proteus animalcule என அழைத்தனர்.
புரோட்டியசு (Proteus) என்ற பெயர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் பெயரைக் கொண்டு உருவானது. அதன் பின்னர் அமீபே (Amibe) என்ற பெயர் பின்னர் Bory de Saint-Vincent என்பவரால் வழங்கப்பட்டது . கிரேக்க மொழியில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது .
Dientamoeba fragili என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது..

மனித உடலில் மிக நீளமான எலும்பு எது?
தடித்த தண்டுவடம்
விளக்கம்::
எலும்பு அல்லது என்பு என்பது முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் உட்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்புக்கள் ஆகும். எலும்புகள், உடலுறுப்புக்களுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும் அது இடத்துக்கிடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. அத்துடன், செங்குருதி அணுக்கள், வெண்குருதி அணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். எலும்புகள் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுவதுடன், சிக்கலான உள் மற்றும் வெளிக் கட்டமைப்புக்களையும் கொண்டவையாக உள்ளன.
இது, எலும்புகள், நிறை குறைந்தவையாகவும், உறுதியானவையாகவும், கடினத்தன்மை கொண்டவையாகவும் இருப்பதற்கு உதவுவதுடன், அவற்றின் பல்வேறு செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை, கனிமமாகிய எலும்புத் திசுக்கள் ஆகும். இவை தேன்கூட்டு அமைப்பை ஒத்த, முப்பரிமாண உள்ளமைப்பைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன.
எலும்புகளில் காணப்படும் பிற வகைத் திசுக்களில் எலும்பு மச்சை, என்புறை, நரம்பு, குருதியணுக்கள், குருத்தெலும்பு என்பவையும் அடங்கும்.நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.
உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன.
எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும்.
அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு.
இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன.
பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும்.
அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன. பிறக்கும் போது மனிதனில் 270க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கும். எனினும் முழு வளர்ச்சியடைந்த நிறையுடலி மனிதனில் இவ்வெலும்புகளில் சில வளரும் போது ஒன்றிணைக்கப்படுவதால் 206 எலும்புகளே காணப்படும்.

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து எது?
டமி ஃ ப்ளூ
விளக்கம்::
பன்றிக் காய்ச்சல் ஓர் உயிர்க் கொல்லி நோய் ஆகும். இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், உடல் சூடாதல், தலைவலி, தசைவலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். நோய் வந்தவர்கள் டமிஃப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகளை நோய் தாக்கி 48 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்வது நல்லது.
இதையும் மருத்துவர்களின் பரிந்துரையின்படிதான் சாப்பிடவேண்டும். பன்றிக் காய்ச்சலுக்கு சொந்த மருத்துவம் ஆபத்தானது.

இரத்த அழுத்தத்தை அளவிட உதவும் கருவி எது?
ஸ்பைக்மோ மானோமீட்டர்
விளக்கம்::
இரத்த அழுத்தம் (Blood pressure) என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும் (இது ஒரு பரப்பளவிற்கான விசை அலகு). இது பிரதான உயிர்வாழ்தலுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இதயத்திலிருந்து புற தமனிகள் மற்றும் இரத்த தந்துகிகள் வழியாக இரத்தம் வெளியே போகும் போது இரத்த சுற்றோட்டத்தின் அழுத்தம் குறைகிறது மேலும் நரம்புகள் வழியாக இரத்தம் திரும்பவும் இதயத்திற்கு போகும் போது இரத்த அழுத்தம் இன்னும் குறையும்.இரத்த அழுத்தம் என்னும் சொல், ஒருவருடைய மேற்புயத்தில் அளவிடப்படும் அழுத்தத்தையே குறிக்கிறது.
இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் மேற்புயத்தின் மிகப்பெரிய இரத்த குழலான புயத்தமனியில் இருக்கும் இரத்த அழுத்தத்தை முழங்கையினில் அளக்கப்படும்.இரத்த அழுத்தம் சில நேரங்களில் மற்ற பகுதிகளிலும் அளவிடப்படும், எடுத்துக்காட்டாக கணுக்காலில் அளக்கப்படுவதைப் போன்று. கணுக்காலின் முக்கிய தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் மற்றும் புயத்தமனியில் அளவிடப்படும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் விகிதமே கணுக்கால் புய அழுத்த உள்ளடக்கம் (ABPI) ஆகும்.
இரத்த அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ஸ்பைக்மோ மானோமீட்டர் ஆகும்..

மூளையின் முக்கிய உணவு எது?
குளுக்கோஸ்
விளக்கம்::
குளுக்கோசு அல்லது குளுக்கோஸ் (Glucose, C6H12O6) என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது சர்க்கரை ஆகும். இது ஓர் (ஒற்றை சாக்கரைடு) வகைகளில் ஒன்று. குளுக்கோசு உயிரியலில் முக்கியமான ஒரு கார்போ ஐதரேட்டாக உள்ளது. உயிரணுக்கள் இதனை ஆற்றல் தரும் ஒரு அடிப்பொருளாகவும் வளர்சிதைமாற்றத்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன.
குளுக்கோசு ஒளிச்சேர்க்கையின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் (தரசம்) மற்றும் செல்லுலோசு ஆகிய பாலிமர்கள் உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் குளுகசு (γλυκύς) என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும்.
இதன் பொருள் இனிப்பு என்பதாகும். ஓசு (-ose) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி எதிர் உருவ (பிம்ப) குடும்பங்களாக (இரட்டை ஐசோமெர்கள்) பிரிக்கலாம்.
டி-குளுக்கோசு என்று குறிக்கப்படும் குளுக்கோசின் வலக் கை வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோசு என்கிற சொல் டெக்ஸ்ட்ரோரொடேடரி குளுக்கோஸ் (dextrorotatory glucose) என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.

நமது உடலில் எந்தப் பாகத்தில் இரத்தம் பாய்வது இல்லை?
கருவிழி
விளக்கம்::
கண்ணின் கரிய பகுதி கருவிழி எனப்படும். இதனைக் கண்மணி என்றும் சொல்வார்கள். தற்காலத்தில் கருவிழி மாற்று சிகிச்சை சிறந்த தர்மமாக பாவிக்கப்படுகிறது. பார்வை இல்லாத நபருக்கு பார்வையை பெற்றுத் தந்து மறுவாழ்வு அளிக்கிறது.
கருவிழி மாற்று சிகிச்சையை முதன்முதலில் வெற்றிகரமாக செக் குடியரசு நாட்டு, பலச்சி பல்கலைகழகத்தைச் சேர்ந்த எட்வட் ஜீர்ம் என்பவரால் 1905ம் ஆண்டு செய்யப்பட்டது. ரமொன் காஸ்ட்ரோவிஜோ மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விலாடிமிர் பிலாடொவ்(1912) என்பவர்களும் கருவிழி மாற்று சிகிச்சையில் முன்னோடிகளாவார்கள். காஸ்ட்ரோவிஜோ என்பவரே 1936ல் நவீன முறையில் கருவிழி கூம்பல்(keratoconus) மாற்று சிகிச்சையை முதலில் செய்தார்.
உரோம அளவுடைய நுண்ணோக்கிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட முறையில் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது..

நீரில் மூழ்காத விலங்கு எது?
முள்ளம் பன்றி
விளக்கம்::
தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே (Hystricidae) என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் Erethizontidae என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
இலங்கை, மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்த வித்யாசமான உயிரினத்தின் (முள்ளம்பன்றி) தலையும் உடலும் 70செ.மீ. - 90 செ.
மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8செ. - 10 செ.மீற்றர் வரை இருக்கலாம். இவ்வின முள்ளம் பன்றி 11 கிலோகிராம் முதல் 18கிலோகிராம் வரை நிறையுடையதாக வளரலாம்.
முள்ளம்பன்றியின் தோலிலுள்ள மயிர்கள் நீண்ட, கூர்முனையுடைய முட்களாகத் திரிவு அடைந்துள்ளன. இம்முட்கள் பல படைகளாகக் காணப்படுகின்றன. வெளிப்புறமாகவுள்ள நீண்ட, மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.

நமது உடலில் மிகவும் வலிமையான தசைப் பகுதி எது?
நாக்கு
விளக்கம்::
மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். நமது உடலில் மிகவும் வலிமையான தசைப் பகுதி இது தான். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே.
உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது.
தமிழில் வழங்கும் ழகரம், ளகரம், லகரம், நகரம் முதலிய எல்லா எழுத்தொலிகளையும் பலுக்கிப் பார்த்தால் மொழி பேசும் பொழுது நாவின் பணி தெளிவாக விளங்கும். வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும்.

"Waiting for the Mahatma (வைட்டிங் ஃ பார் தி மகாத்மா)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் யார்?
ஆர். கே. நாராயணன்
விளக்கம்::
"Waiting for the Mahatma (வைட்டிங் ஃ பார் தி மகாத்மா)" என்ற ஆங்கில நூலை எழுதிய இந்தியர் "ஆர். கே. நாராயணன்" ஆவார். கே. நாராயணன் என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906–13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் மற்றும் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.
கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும்.
முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்..

"Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் யார்?
மார்கிரேட் மிட்சல்
விளக்கம்::
"Gone With The Wind (கோன் வித் தி விண்ட்)" என்ற ஆங்கில நாடகத்தை எழுதியவர் "மார்கிரேட் மிட்சல்" என்பவர் ஆவார். இவர் ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்று அறியப்படுகிறார்..