Tamil general knowledge
78 subscribers
9 links
பொது அறிவு அனைத்தும்
Download Telegram
உலகிலேயே மிக வேகமாகப் பறக்கும் பறவை ஹம்மிங் பறவை..
புனித வெள்ளி அன்று கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.
பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஒரு காத தூராம் என்பது பத்து மைல்களாகும்.
மேக்கரல் மீன்கள் ஒரு பருவ காலத்துக்கு நான்கு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் முட்டைகள் வரை இடும். ஆனால், ஒரு முறைக்கு 50,000 முட்டைகள் தான் இடும்.
முதன்முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய மன்னன் திப்பு சுல்தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே அமெரிக்க ஜனாதிபதி 'ஜொரால்டு போர்டு'.
வீட்டு ஈக்களின் ஆயுட்காலம் 17 நாட்கள் ஆகும்.
வரலாற்றில் இன்று : 21.03.2022

முக்கிய நிகழ்வுகள் :-

👉 இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.

👉 1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை 'பாரத் ரத்னா' உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார்.

👉 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.

முக்கிய தினம் :-

உலக பொம்மலாட்ட தினம்
🌟 உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🌟 உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

உலக காடுகள் தினம்
🌳 வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பிறந்த நாள் :-

நா.மகாலிங்கம்
🏢 ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.

🏢 இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.

🏢 சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுபடுத்தினார்.

🏢 காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.

🏢 இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🏢 பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த 'அருட்செல்வர்' என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தனது 91வது வயதில் (2014) காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.
வரலாற்றில் இன்று : 22.03.2022

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார்.

👉 1993ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ (chip (80586)) அறிமுகம் செய்தது.

👉 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் மறைந்தார்.

முக்கிய தினம் :-

உலக தண்ணீர் தினம்
🌊 நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

🌊 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுப்படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

பிறந்த நாள் :-

டி.வி.சுந்தரம் ஐயங்கார்
🚌 இந்திய தொழில்துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.

🚌 இவர் வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.

🚌 இவர் 1911ஆம் ஆண்டு தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ஆம் ஆண்டு தஞ்சாவூர்-புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.

🚌 பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கட்டணம், ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு, சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.

🚌 அதன்பின்பு ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டி.வி.எஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

🚌 நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78வது வயதில் (1955) மறைந்தார்.
கையில் வைத்தாலே உருகும் உலோகம் சீலியம். உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகம் அலுமினியம். அதிக எடை கொண்ட உலோகம் இரிடியம். மிகவும் லேசான உலோகம் லித்தியம். நாணயங்கள் தயாரிக்க உதவும் உலோகம் நிக்கல். விமானம் தயாரிக்கப் பயன்படும் உலோகம் கோபால்ட்.
வரலாற்றில் இன்று : 23.03.2022

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1903ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

👉 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

முக்கிய தினம் :-

உலக வானிலை தினம்
🏡 உலக வானிலை தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

🏡 உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பிறந்த நாள் :-

ஜி.டி.நாயுடு
🎫 'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.

🎫 இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது.

🎫 பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலையை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.

🎫 அதன்பின்பு யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

🎫 ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.

🎫 இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

🎫 சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80வது வயதில் (1974) மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ஆம் நாள் ‘உலக விபத்து தவிர்ப்பு தின’மாகக் கொண்டாடப்படுகிறது.
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே. இது ஐரோப்பிய நாடு.
முதன்முதலாக சீனாவில்தான் பட்டாசு தயாரிப்பு தொடங்கியது.
வல்லபுகழும் வாய்த்திடவே,வித்தகராய் சிறந்திடவே,வெற்றிகள் வந்து குவிந்திடவே,வருவாய் புத்தாண்டே மகிழ்வோடு,அன்பும்,அறமும் தளைத்திடவே,ஆண்டவன் அருளும் ஓங்கிடவே,அற்புதங்கள் பல நிகழ்ந்திடவே,வருவாய் புத்தாண்டே மலர்ந்திடவே...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம் எங்களது வலைதளங்களான sharechat Instagram telegram channel and groups YouTube channels ஆகியவற்றிற்கு உங்களது ஆதரவை தந்தமைக்கு நன்றி மேலும் எங்களின் அடுத்த முயற்சியாக புதிதாக app உருவாக்க உள்ளோம் அதற்கும் உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
'ஆக்சிஜன் படகு' எனப்படுவது ஹீமோகுளோபின்.
பெயருக்குமுன் தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப்போடும் முறையை அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்நாட்டில் 2003 – ல் செல்வி.ஜெயலலிதா (தமிழக முதல்வர்) தாயின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப் போடலாம் என ஆணை ஒன்றை அறிமுகம் செய்தார்.

பாரத ரத்னா விருது முதன்முதலில் ராஜாஜிக்கு வழங்கப்பட்டது.