தும்மல் வருகின்றபோது மூக்கையும், வாயையும் அடைத்து கொண்டால் கண் விழிகள் பாதிக்கப்படும்.
ஒரு கடிகாரத்திலுள்ள இரு முட்களும் 24 மணி நேரத்தில் 22 முறை சந்திக்கின்றன.
பெரிய கட்டிடங்களை இடிக்கும் நவீன முறைக்கு இம்ப்ளோஷன் என்று பெயர். பலமாடிக் கட்டிடத்தை பக்கத்து கட்டிடத்திற்கு சேதம் இல்லாது தகர்க்கும் முறை இது. கட்டிடத்தின் முக்கிய இடத்தில் வெடி மருந்தை வைத்து ரிமோட் மூலம் இடியச் செய்வார்கள். மேல்நோக்கி வெடித்து, மெல்லிய தூளாகும். பக்கத்துக் கட்டத்திற்கு சிறிதும் சேதம் ஏற்படாது. 40 – 50 – 60 மாடிகள் என உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் இது மிகவும் அவசியமான – நவீன முறையாகும்.
நல்ல உடல் நலம் – நல்ல உணவு – உறக்கம் – ஆரோக்யம் என இருந்தால் மனிதன் நூறாண்டு வாழலாம். ஜப்பான் – சீனாவில் ஆயுள் அதிகம். நூறு வயதையும் தாண்டி பலர் வாழ்கின்றனர். இந்தியாவில் 1947- இல் மனிதனின் சராசரி வயது 33 ஆண்டுகள்தான். மருத்துவ வசதியால் 1981-இல் 52 ஆகவும், 1986-இல் 55 ஆண்டாகவும் ஆகியது. தற்போது 60 என்பதையும் தாண்டியுள்ளது. மரண விகிதம் குறைவே காரணம்.
உலகிலேயே மிகமிகச் சிறிய நாய்க்குட்டி என்று பெருமை ‘டான்சா’ என்ற பெயர் கொண்ட பெண் நாய். ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்தது. இதன் நீளம் வெறும் 7 இஞ்ச மட்டுமே. மொத்த எடை 27 அவுன்ஸ் தான். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.
நூல் வெளியிடும் போது நூலாசிரியர் நூல் குறித்து முன்னுரை எழுதுவது வழக்கம். அதில் சிறப்பானது பெர்னார்ட்ஷா தனது நாடகங்களுக்கு எழுதிய நீண்ட முன்னுரை. அதுவே தனி இலக்கியம் எனப் போற்றப்படுகிறது. தமிழில் ஜெயகாந்தன் தனது நூலுக்கு எழுதிய முன்னுரைகள் சிறப்பாக பேசப்படுகிறது. ஜெயகாந்தனின் முன்னுரைகள் என்று தலைப்பில் பல்கலைக்கழக ஆய்வும் (பட்டப்படிப்பிற்கு) செய்யப்பட்டது.
சர்க்கரையை விட பன்மடங்கு இனிப்பான ‘சாக்கரின்’ நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது.
உலகையே வெற்றிக்கொள்ள நினைத்த நெப்போலியன் ‘செயின்ட் ஹெலனா’ தீவில் கைதியாக இருந்தபோது உயிர் விட்டார்.
பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஒரு காத தூராம் என்பது பத்து மைல்களாகும்.
மேக்கரல் மீன்கள் ஒரு பருவ காலத்துக்கு நான்கு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் முட்டைகள் வரை இடும். ஆனால், ஒரு முறைக்கு 50,000 முட்டைகள் தான் இடும்.
முதன்முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய மன்னன் திப்பு சுல்தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே அமெரிக்க ஜனாதிபதி 'ஜொரால்டு போர்டு'.
வரலாற்றில் இன்று : 21.03.2022
முக்கிய நிகழ்வுகள் :-
👉 இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.
👉 1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை 'பாரத் ரத்னா' உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார்.
👉 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.
முக்கிய தினம் :-
உலக பொம்மலாட்ட தினம்
🌟 உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🌟 உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
உலக காடுகள் தினம்
🌳 வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
நா.மகாலிங்கம்
🏢 ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.
🏢 இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.
🏢 சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுபடுத்தினார்.
🏢 காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
🏢 இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
🏢 பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த 'அருட்செல்வர்' என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தனது 91வது வயதில் (2014) காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.

வரலாற்றில் இன்று : 22.03.2022
முக்கிய நிகழ்வுகள் :-
👉 1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார்.
👉 1993ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ (chip (80586)) அறிமுகம் செய்தது.
👉 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் மறைந்தார்.
முக்கிய தினம் :-
உலக தண்ணீர் தினம்
🌊 நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
🌊 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுப்படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.
பிறந்த நாள் :-
டி.வி.சுந்தரம் ஐயங்கார்
🚌 இந்திய தொழில்துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.
🚌 இவர் வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.
🚌 இவர் 1911ஆம் ஆண்டு தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ஆம் ஆண்டு தஞ்சாவூர்-புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.
🚌 பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கட்டணம், ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு, சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.
🚌 அதன்பின்பு ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டி.வி.எஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
🚌 நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78வது வயதில் (1955) மறைந்தார்.

கையில் வைத்தாலே உருகும் உலோகம் சீலியம். உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகம் அலுமினியம். அதிக எடை கொண்ட உலோகம் இரிடியம். மிகவும் லேசான உலோகம் லித்தியம். நாணயங்கள் தயாரிக்க உதவும் உலோகம் நிக்கல். விமானம் தயாரிக்கப் பயன்படும் உலோகம் கோபால்ட்.