Tamil general knowledge
78 subscribers
9 links
பொது அறிவு அனைத்தும்
Download Telegram
முதல் முதலாக சீனாவில் கி.பி. 220 – ல் கலைக் களஞ்சியம் தொகுக்கப்பட்டது. இந்தியாவில் மராத்தி மொழியில் முதல் கலைக்களஞ்சியம் எஸ்.வி. கெட்கெர் மூலம் 28 பாகங்களாக வெளியிடப்பட்டது. தமிழில் பெரியசாமித்தூரன் தலைமையில் 1954 – இல் அமைக்கப்பட்ட குழுவால் 10 தொகுதிகள் வெளியிடப்பட்டன. உலகில் புகழ்பெற்ற கலைக்களஞ்சியம் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரிட்டானியா கலைக்களஞ்சியம். மிக விரிவானது இது.
ஆமைகள் நிலத்தில் மெதுவாகச் செல்லும். ஆனால் நீரிலோ அதன் வேகம் மணிக்கு 35 கி.மீ. ஆகும்.
வேகமாக ஓடும் ஆற்றல் மிக்கது குதிரை. இதில் மொத்தம் 150 வகைகள் உண்டு. அரேபிய குதிரைகள் தனிரகம், பலர் விரும்பி வாங்குபவை. மிகச்சிறிய குதிரை 75 செ.மீ. உயரமே உள்ளது. மிகப்பெரிய குதிரை 910 கிலோ உள்ள ஷயர்.
பிறந்த நாளும் – இறந்த நாளும் ஒரே நாளாக அமைவது அதிசயம் – அபூர்வம். ஹெலன் கெல்லர் பிறந்தது 27.06.1880. இறந்தது 27.06.1968. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் 30.10.1908. இறந்த நாள் 29.10.1963. ஏறத்தாழ சமம். ஒருநாள் முன்பாக இறந்தார்.
தும்மல் வருகின்றபோது மூக்கையும், வாயையும் அடைத்து கொண்டால் கண் விழிகள் பாதிக்கப்படும்.
இரத்த வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
ஒரு கடிகாரத்திலுள்ள இரு முட்களும் 24 மணி நேரத்தில் 22 முறை சந்திக்கின்றன.
பெரிய கட்டிடங்களை இடிக்கும் நவீன முறைக்கு இம்ப்ளோஷன் என்று பெயர். பலமாடிக் கட்டிடத்தை பக்கத்து கட்டிடத்திற்கு சேதம் இல்லாது தகர்க்கும் முறை இது. கட்டிடத்தின் முக்கிய இடத்தில் வெடி மருந்தை வைத்து ரிமோட் மூலம் இடியச் செய்வார்கள். மேல்நோக்கி வெடித்து, மெல்லிய தூளாகும். பக்கத்துக் கட்டத்திற்கு சிறிதும் சேதம் ஏற்படாது. 40 – 50 – 60 மாடிகள் என உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் இது மிகவும் அவசியமான – நவீன முறையாகும்.
நல்ல உடல் நலம் – நல்ல உணவு – உறக்கம் – ஆரோக்யம் என இருந்தால் மனிதன் நூறாண்டு வாழலாம். ஜப்பான் – சீனாவில் ஆயுள் அதிகம். நூறு வயதையும் தாண்டி பலர் வாழ்கின்றனர். இந்தியாவில் 1947- இல் மனிதனின் சராசரி வயது 33 ஆண்டுகள்தான். மருத்துவ வசதியால் 1981-இல் 52 ஆகவும், 1986-இல் 55 ஆண்டாகவும் ஆகியது. தற்போது 60 என்பதையும் தாண்டியுள்ளது. மரண விகிதம் குறைவே காரணம்.
உலகிலேயே மிகமிகச் சிறிய நாய்க்குட்டி என்று பெருமை ‘டான்சா’ என்ற பெயர் கொண்ட பெண் நாய். ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்தது. இதன் நீளம் வெறும் 7 இஞ்ச மட்டுமே. மொத்த எடை 27 அவுன்ஸ் தான். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.
நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.
பெண்களைக்காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக ஆண்களுக்கு வியர்க்கிறது.
நூல் வெளியிடும் போது நூலாசிரியர் நூல் குறித்து முன்னுரை எழுதுவது வழக்கம். அதில் சிறப்பானது பெர்னார்ட்ஷா தனது நாடகங்களுக்கு எழுதிய நீண்ட முன்னுரை. அதுவே தனி இலக்கியம் எனப் போற்றப்படுகிறது. தமிழில் ஜெயகாந்தன் தனது நூலுக்கு எழுதிய முன்னுரைகள் சிறப்பாக பேசப்படுகிறது. ஜெயகாந்தனின் முன்னுரைகள் என்று தலைப்பில் பல்கலைக்கழக ஆய்வும் (பட்டப்படிப்பிற்கு) செய்யப்பட்டது.
சர்க்கரையை விட பன்மடங்கு இனிப்பான ‘சாக்கரின்’ நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது.
உலகையே வெற்றிக்கொள்ள நினைத்த நெப்போலியன் ‘செயின்ட் ஹெலனா’ தீவில் கைதியாக இருந்தபோது உயிர் விட்டார்.
உலகிலேயே மிக வேகமாகப் பறக்கும் பறவை ஹம்மிங் பறவை..
புனித வெள்ளி அன்று கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.
பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஒரு காத தூராம் என்பது பத்து மைல்களாகும்.
மேக்கரல் மீன்கள் ஒரு பருவ காலத்துக்கு நான்கு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் முட்டைகள் வரை இடும். ஆனால், ஒரு முறைக்கு 50,000 முட்டைகள் தான் இடும்.
முதன்முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய மன்னன் திப்பு சுல்தான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே அமெரிக்க ஜனாதிபதி 'ஜொரால்டு போர்டு'.