Tamil general knowledge
78 subscribers
9 links
பொது அறிவு அனைத்தும்
Download Telegram
கழுத்தை முழு வட்டப் பாதையில் சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை.
கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் நாசிக்.
விண்வெளியை சுற்றிய முதல் செயற்கைக்கோள் ‘ஸ்புட்னிக்’.
பற்களைப் பற்றி விரிவாகக் கற்கும் துறை ‘அக்ரஸ்டாலாஜி’ என்பதாகும். குதிரைகளைப் பற்றி படிக்கும் பிரிவுக்கு ‘ஹிப்பாலாஜி’ என்பதாகும். தாள்களில் ரகசியமாக எழுதும் முறை ‘க்ரிப்டோகிராபி என்பதாகும்.
உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி ஹவாய் தீவில் அமைந்துள்ள கெக் தொலைநோக்கியாகும்.
'கிராம்புகளின் தீவு' என்று அழைக்கப்படும் நாடு மடகாஸ்கர் ஆகும்.
பறவை இனங்களிலேயே அதிக ஆண்டுகள் வாழக்கூடியது 'ஆஸ்ட்ரிச்' என்றழைக்கப்படும் நெருப்புக் கோழிகள்.
பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை.
மழை நீரில் 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஒடி கடலை அடைகிறது . மீதி 72 சதவீதம் ஆவியாகி காற்று மண்டலத்தை மீண்டும் அடைகிறது.
பெயருக்குமுன் தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப்போடும் முறையை அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். தமிழ்நாட்டில் 2003 – ல் செல்வி.ஜெயலலிதா (தமிழக முதல்வர்) தாயின் முதல் எழுத்தை இனிஷியல் ஆகப் போடலாம் என ஆணை ஒன்றை அறிமுகம் செய்தார்.
முதல் முதலாக சீனாவில் கி.பி. 220 – ல் கலைக் களஞ்சியம் தொகுக்கப்பட்டது. இந்தியாவில் மராத்தி மொழியில் முதல் கலைக்களஞ்சியம் எஸ்.வி. கெட்கெர் மூலம் 28 பாகங்களாக வெளியிடப்பட்டது. தமிழில் பெரியசாமித்தூரன் தலைமையில் 1954 – இல் அமைக்கப்பட்ட குழுவால் 10 தொகுதிகள் வெளியிடப்பட்டன. உலகில் புகழ்பெற்ற கலைக்களஞ்சியம் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரிட்டானியா கலைக்களஞ்சியம். மிக விரிவானது இது.
ஆமைகள் நிலத்தில் மெதுவாகச் செல்லும். ஆனால் நீரிலோ அதன் வேகம் மணிக்கு 35 கி.மீ. ஆகும்.
வேகமாக ஓடும் ஆற்றல் மிக்கது குதிரை. இதில் மொத்தம் 150 வகைகள் உண்டு. அரேபிய குதிரைகள் தனிரகம், பலர் விரும்பி வாங்குபவை. மிகச்சிறிய குதிரை 75 செ.மீ. உயரமே உள்ளது. மிகப்பெரிய குதிரை 910 கிலோ உள்ள ஷயர்.
பிறந்த நாளும் – இறந்த நாளும் ஒரே நாளாக அமைவது அதிசயம் – அபூர்வம். ஹெலன் கெல்லர் பிறந்தது 27.06.1880. இறந்தது 27.06.1968. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் 30.10.1908. இறந்த நாள் 29.10.1963. ஏறத்தாழ சமம். ஒருநாள் முன்பாக இறந்தார்.
தும்மல் வருகின்றபோது மூக்கையும், வாயையும் அடைத்து கொண்டால் கண் விழிகள் பாதிக்கப்படும்.
இரத்த வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
ஒரு கடிகாரத்திலுள்ள இரு முட்களும் 24 மணி நேரத்தில் 22 முறை சந்திக்கின்றன.
பெரிய கட்டிடங்களை இடிக்கும் நவீன முறைக்கு இம்ப்ளோஷன் என்று பெயர். பலமாடிக் கட்டிடத்தை பக்கத்து கட்டிடத்திற்கு சேதம் இல்லாது தகர்க்கும் முறை இது. கட்டிடத்தின் முக்கிய இடத்தில் வெடி மருந்தை வைத்து ரிமோட் மூலம் இடியச் செய்வார்கள். மேல்நோக்கி வெடித்து, மெல்லிய தூளாகும். பக்கத்துக் கட்டத்திற்கு சிறிதும் சேதம் ஏற்படாது. 40 – 50 – 60 மாடிகள் என உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் இது மிகவும் அவசியமான – நவீன முறையாகும்.
நல்ல உடல் நலம் – நல்ல உணவு – உறக்கம் – ஆரோக்யம் என இருந்தால் மனிதன் நூறாண்டு வாழலாம். ஜப்பான் – சீனாவில் ஆயுள் அதிகம். நூறு வயதையும் தாண்டி பலர் வாழ்கின்றனர். இந்தியாவில் 1947- இல் மனிதனின் சராசரி வயது 33 ஆண்டுகள்தான். மருத்துவ வசதியால் 1981-இல் 52 ஆகவும், 1986-இல் 55 ஆண்டாகவும் ஆகியது. தற்போது 60 என்பதையும் தாண்டியுள்ளது. மரண விகிதம் குறைவே காரணம்.
உலகிலேயே மிகமிகச் சிறிய நாய்க்குட்டி என்று பெருமை ‘டான்சா’ என்ற பெயர் கொண்ட பெண் நாய். ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்தது. இதன் நீளம் வெறும் 7 இஞ்ச மட்டுமே. மொத்த எடை 27 அவுன்ஸ் தான். இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.
நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.